அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கான சவூதியின் ஆதரவுக்கு பஹ்ரைன் பாராட்டு 

0 778

அரபு, இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வதில் சவூதி அரே­பியா முதன்­மை­நிலை வகிப்­பது குறித்து பஹ்ரைன் வெளி­நாட்­ட­மைச்சர் காலித் பின் அஹமட் பாராட்டுத் தெரி­வித்­த­தாக சவூதி ஊடக முக­வ­ரகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

மன்னர் சல்­மானின் தலை­மைத்­து­வத்தின் கீழும் பிராந்­தி­யத்தில் பாது­காப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மை­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சவூதி அரே­பியா எடுத்து வரும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பஹ்ரைன் தொடர்ந்தும் துணை நிற்கும் எனவும் வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்தார்.

இவ்­வாரம் ஆரம்­பித்த சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் அரபுப் பிராந்­தி­யத்­திற்­கான சுற்றுப் பய­ணத்தில் பஹ்­ரை­னுக்கு விஜயம் செய்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்கு விஜயம் செய்­ததைத் தொடர்ந்து அடுத்த கட்­ட­மாக கடந்த ஞாயிற்­று­கி­ழமை மனாமா விமான நிலை­யத்தை வந்­த­டைந்தார்.

வர­லாற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் ஆழமானதாகும் என பஹ்ரைன் மன்னர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.