பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஜுலை 4 ஆம் திகதி நாட்டின் கல்வித் துறையில் புரட்சி

0 946

நாட்டில் இடம்பெற்ற புரட்சிகரமான சமூக மாற்றமாக இலவசக் கல்வி முறையை குறிப்பிட முடியும். இதன் காரணமாக நாட்டில் சமூக மட்டத்தில் வேகமாக அபிவிருத்தியை காண முடிந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் சகல மாணவர்களையும் சென்றடைய வேண்டிய கல்வி வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்கள் சில பாடசாலைகளுக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றதுடன் தேசிய மட்டத்தில் இடம்பெறும் பரீட்சைகளுக்கு பாடசாலை மட்டத்தில் குறைந்த வசதிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அசாதாரணமான வகையில் தோற்ற வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

தமது பிள்ளைகளுக்கு உயர் திறன் வாய்ந்த கல்வியை பெற்றுக் கொடுப்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

வசதி படைத்த பிரபல்யமான பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டமையால் தமது பிள்ளைகளை குறித்த பாடசாலைகளில் எவ்வாறாயினும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய ஒரு நிலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளின் பிரகாரம் குறித்த பாடசாலைகளில் தமது பிள்ளைகளை நேர்மையான முறையில் சேர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து அல்லது இலஞ்சம் கொடுத்து தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பெற்றோர் முனைகின்றனர். நேர்முகத் தேர்வுகளுக்கு தோற்றும் போது பிள்ளைகளுக்கும் பொய்கூறும்படி தெரிவிக்கும் பெற்றோர்கள் எமது சமூகத்தில் காணப்படுவதுடன் இவ்வாறான நிலை தொடர்வதால் நீண்ட கால அடிப்படையில் தீர்க்கப்பட முடியாத ஒரு அழுத்தம் கல்விக் கட்டமைப்பில் தோன்றியுள்ளது. வெவ்வேறு அரசுகளின் கீழ் கல்வி அமைச்சர்கள் வெவ்வேறு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முனைந்த போதிலும் அவற்றினூடாக குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் எதும் ஏற்படவில்லை.

தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தமது அமைச்சுப் பொறுப்புகளை 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது இவ்வாறான நிலை நிலவியது. கல்விக் கட்டமைப்பில் பல காலமாக நிலவிய இந்த நெருக்கடி நிலைக்கு ஒரு இரவில் தீர்வு காண முடியாது.

ஆனாலும் எதிர்வரும் 20 – 30 வருடங்களில் எமது எதிர்காலத்தை மதிப்பிட்டு அதுவரையில் நாடு எனும் வகையில் நாம் காணப்பட வேண்டிய நிலை எமது பிள்ளைகள் எய்த வேண்டிய விடயங்கள் மற்றும் இந்நாட்டு பாடசாலைக் கல்வி கட்டமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் போன்ற அனைத்தின் மீதும் முழுமையாக கவனம் செலுத்தி எதிர்காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை கட்டியெழுப்பும் அவசியம் தொடர்பில் அமைச்சரின் முழு கவனமும் செலுத்தப்பட்டிருந்தது.

நகரங்களை அண்மித்து காணப்படும் சில பாடசாலைகளில் மாத்திரம் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் காண்பிக்கும் ஆர்வத்தை குறைப்பதற்கு அல்லது அதை நிராகரிக்க வேண்டுமாயின் அதற்கு நிகரான காரணிகளை பாடசாலை கட்டமைப்பினுள் உருவாக்குவதனாலாகும். எந்தவொரு பாடசாலையும் புகழ்பெற்ற நிலையை எய்துவதற்கு அந்த பாடசாலையில் சகல பாடங்களுக்குமான ஆசிரியர்கள் காணப்படுவது , விளையாட்டு மைதானம் , விஞ்ஞான ஆய்வுகூடம் , நூலகம் , சுற்றாடல் பிரிவு அடங்கலாக வசதிகள் மற்றும் திறமையான அதிபர்கள் இருக்க வேண்டும். மாணவர்களின் திறன்களை உயர் மட்டத்தில் பேண வேண்டும் , தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் வெற்றிகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய மாணவர்கள் பாடசாலையில் இருக்க வேண்டும். இந்த நிலையை எய்துவதற்கான சூழலை பாடசாலையில் ஏற்படுத்தும் போது எந்தவொரு பாடசாலையும் புகழ்பெற்ற நிலையை எய்தும்.

நாளொன்றில் குறிப்பிடத்தக்க நேரத்தை வீதிகளில் செலவிட்டு பிள்ளைகளின் பாடசாலைப் பயணத்தை நெருக்கடிக்கு உட்படுத்தி நகரங்களிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளை நாடும் நிலையை இல்லாமல் செய்ய வேண்டுமாயின் அதற்கு சிறந்த தீர்வு கிராமிய மட்டத்தில் காணப்படும் பாடசாலைகளை பிரபல்யமான பாடசாலைகளாக மாற்றியமைப்பதாகும். இதன் நோக்கத்துக்கமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்இ அருகிலுள்ள பாடசாலை – சிறந்த பாடசாலை எனும் திட்டத்தை ஆரம்பித்தார்.

பாடசாலைகளை நிர்மாணிப்பதற்காக வரலாற்றில் இதுவரையில் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட்டிராத மாபெரும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு சகல பிள்ளைகளுக்கும் தமது வசிப்பிடத்திலிருந்து அருகிலுள்ள பாடசாலைக்கு செல்லக்கூடிய வகையிலான சிறந்த பாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் இதன் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் மேலும் பாடசாலை கட்டடங்கள் 250 ஐ ஒரே நாளில் சிறுவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜுலை 04 ஆம் திகதி இடம்பெறுகின்றது.

இதன் பிரதான நிகழ்வு பேராதனை தேசிய கல்வி பீட வளாகத்தில் இடம்பெறுகின்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்நிகழ்வில் கலந்து கொள்வார். இதன் பிரகாரம் ஜுலை 4 ஆம் திகதி இந்நாட்டு கல்வியில் அழியாத தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

vidivelli 

 

Leave A Reply

Your email address will not be published.