உண்ணாவிரதமும் கொலை புரிவதும் புத்த தர்மத்திற்கு முரணானவையே

முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் இரு மாதங்களில் பயங்கரவாதம் கட்டுப்பாட்டுக்குள்: பிரதமர்

0 891

தன்­னு­யிரை மாய்த்துக் கொள்­வதோ அல்­லது பிறர் உயிர்­களைப் பறிப்­பதோ புத்த தர்­மத்­திற்கு முர­ணான வெறுக்­கத்­தக்க துற­வற தர்­மத்தின் செய­லாகும். அதே­போன்றே சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தமும் புத்த சம­யத்தை அவ­ம­திக்கும் செய­லொன்­றாகும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

லக்­கல தேர்தல் தொகு­தியில் இந்த அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்டு நிறை­வ­டைந்­துள்ள பல­த­ரப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளையும் மக்­க­ளிடம் கைய­ளிக்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதன்­போது பிர­தமர் மேலும் கூறி­ய­தா­வ­து

சிறு சம்­ப­வங்­களை ஊதிப் பெருப்­பித்துக் காட்­டு­வது போன்று வெறுக்­கத்­தக்க விதத்தில் நடக்கும் துற­வி­களை பௌத்த துற­வி­க­ளாகக் காட்­டு­வ­தற்கு ஊட­கங்கள் செயற்­படக் கூடாது.

இன்று இந்த இடத்தில் மில்­க­முவ, மாரக மகா வித்­தி­யா­ல­யத்­திற்­கான கட்­டிடம் ஒன்றைத் திறந்து வைத்தோம். தொடர்ந்து பயிற்சி நிலையம் ஒன்­றையும் திறந்து ஆரம்­பித்து வைத்தோம். ஸ்ரீ போதி­மலு விகா­ரையின் கட்­டிடம் ஒன்­றுக்­கான அடிக்­கல்லை நட்டி வைத்தோம்.

கொடி­க­முவ அணைக்­கட்டு புன­ர­மைப்­ப­தற்­கான பணியை ஆரம்­பித்து வைத்தோம்; பின்னர் லக்­கல வைத்­தி­ய­சா­லையைத் திறந்து மக்கள் சேவைக்கு கைய­ளித்­துள்ளோம். இறுதி நிகழ்­வா­கவே இந்த வைப­வத்­திற்கு வந்து இங்­குள்ள மக்­க­ளுக்கு சமுர்த்தி பத்­தி­ரங்­க­ளையும், வீட்டு உறுதிப் பத்­தி­ரங்­க­ளையும் கைய­ளிக்­க­வுள்ளோம்.

இது­வரை சமுர்த்தி உதவி பெறாத வறிய மக்கள் ஏரா­ள­மா­னோ­ருக்கு அவர்­களை இனம்­கண்டு சமுர்த்தி உத­விகள் வழங்கி வரு­கிறோம்.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­னரே எமது இந்த அபி­வி­ருத்திப் பணி­களை துரி­த­மாக நடத்தி வரு­கிறோம்.

இத்­தாக்­கு­தலின் பின்னர் பலர் பயந்து சோர்ந்து போயுள்­ளார்கள். எமது அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளிட்ட அதி­கா­ரிகள் அனை­வரும் தம் பணியைத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

கம்­பெ­ர­லிய வீட­மைப்பு, ரன் மாவத வேலைத்­திட்டம், அய­லி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை என்று அபி­வி­ருத்­திகள் தொடர்­கின்­றன.
கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்­திற்­காக எதிர்­கா­லத்தில் ஒவ்­வொரு தேர்தல் தொகு­திக்கும் 100 மில்­லியன் வீதம் ஒதுக்­க­வுள்ளோம்.

பிக்­கு­க­ளுக்­கான ‘புதுபுத் சுரக் ஷா’ காப்­பு­றுதித் திட்டம் ஒன்­றையும் முன்­னெ­டுத்து வரு­கிறோம்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட அனைத்து தீவி­ர­வா­தி­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். எம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட துரித நட­வ­டிக்­கை­களின் மூலமே இதனைச் சாதித்­துள்ளோம்.

இங்கு ரோஹிணி விஜே­ரத்­தின குறிப்­பிட்­டது போன்று பயங்­க­ர­வா­தி­களைக் கைது செய்­வ­தற்கு முஸ்­லிம்­களே எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யதை நானும் இந்த இடத்தில் மேலும் உறு­திப்­ப­டுத்­து­கின்றேன்.

இவர்கள் வழங்­கிய தக­வல்­க­ளுக்­க­மை­யவே பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­களும் சிக்­கின.

இரண்டு மாதங்­க­ளுக்குள் பயங்­க­ர­வா­தி­களைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்த எமது சாத­னை பற்றி அமெ­ரிக்க எப்.பீ.ஐ. நிறு­வனம் தனது ஆச்­ச­ரி­யத்தை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த நிலை­யிலும் முழு உல­க­முமே எம்மைப் பாராட்டும் போது நாட்டில் மிகவும் சிறு குழு­வி­னரே எம்மை விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டதோ விரல்­விட்­டெண்ணக் கூடிய சிறு குழுவே. ஆனால் அதற்­காக முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் விரலை நீட்­டு­வது தவறு.

அவர்கள் அனை­வ­ரையும் தீவி­ர­வா­தி­க­ளாகப் பார்க்­கவும் கூடாது.
இவ்­வாறு முஸ்­லிம்கள் மீது சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­ப­தாக முஸ்­லிம்கள் முறை­யி­டு­கின்­றனர்.

எனவே ஐ.எஸ். பயங்­க­ர­வாதம் இங்கு மேலும் தலை தூக்­கா­தி­ருக்க நாம் அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும். இதனை ஒரு சிலர் அர­சியல் லாபம் பெறு­வ­தற்­காக திசை திருப்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதனால் இன­வாத மோதல்­களைத் தூண்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன ரீத­யாக பிரிந்து நிற்­காது தேசிய ரீதி­யாக இணைத்து முன் நகர வேண்டும்.

புத்த சம­யத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து இதர மதங்­க­ளையும் மதித்து நடக்க வேண்டும். நாட்டில் இதர கலா­சா­ரங்­க­ளா­லேதான் எமது பௌத்த கலா­சா­ரமும் வளர்ந்து வந்­துள்­ளதை நாம் நினை­வு­கூர வேண்டும்.

நாம் சிங்­கள, பௌத்­தர்கள் என்று பெரு­மைப்­ப­டு­வ­தோடு நாட்டில் இதர இன மதத்­தினர் இருப்­பது குறித்தும் பெரு­மைப்­பட வேண்டும்.

பாரிய கடன் சுமை­யி­லி­ருந்து நாட்டைக் கரை சேர்த்துக் கொண்­டி­ருக்­கிறோம்.
நல்­லி­ணக்­கத்­திலும் நாம் நாட்டை முன்­னெ­டுத்துக் கொண்டு செல்­கிறோம். கஷ்­டங்­க­ளுக்கும் மத்­தியில் எத­னையும் கைவி­டாது அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­களைப் போன்றே நாட்டில் தலை­தூக்கும் சிங்­கள, தமிழ் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் தகுந்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைளை முன்­வைத்து அப்­பாவி முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் தொடுப்­பது முறை­யல்ல. 30 வரு­ட­கால யுத்­தத்தில் முஸ்லிம் சமூகம் நாட்­டுக்­காக செய்த அர்ப்­ப­ணிப்­புக்கள் மறப்­ப­தற்­கில்லை.

பிக்கு ஒருவர் பண்டா ரநா­யக்க மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­த­போது காவி­யுடை தரித்த ஒரு நபரே தன்னைச் சுட்டார் என்றே குறிப்­பிட்டார். அவர் எல்லா தேரர்கள் மீதும் பழியைச் சுமத்­தாதே என்று சொன்னார்.

அதன் மூலம் பிக்­கு­களின் கௌரவம் பேணப்­பட்­டது. எனவே ஒரு­வரின் தவ­றுக்கு முழு சமூ­கத்தின் மீதும் குற்றம் சுமத்­தப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.

இன்று ஒரு சிலர் இன­வாதம் பேசு­வ­தோடு உண்­ணா­வி­ரதம் இருக்­கவும் தலைப்­பட்­டுள்­ளனர். உண்­ணா­வி­ரதம் இருப்­பது பௌத்த தர்­மத்­திற்கு முர­ணா­னது என்று தேரர் ஒருவர் என்­னிடம் கூறினார். அது எப்­ப­டி­யென்று நான் அவரை வின­வினேன். உண்­ணா­வி­ரதம் இருந்து தன்­னைத்­தானே மர­ணிப்­பது வெறுக்­கத்­தக்க துறவுத் துரோ­க­மாகும் என்று அவர் கூறினார்.

பௌத்­தர்கள் என்ற வகையில் தன்­னு­யிரை மாய்த்துக் கொள்­வதோ,பிறரைக் கொல்­வதோ பௌத்தம் அனு­ம­திக்­காத ஒன்றாகும். நாம் ‘நிகந்த’ எனும் வேண்டத் தகாத துறவற தர்மத்தின் பின்னால் செல்லக்கூடாது. சிறு விடயங்களைப் பெருப்பித்துக் காட்டுவதில் இவ் ஊடகங்கள் செயற்படுகின்றன. அதேபோன்று மோசமான துறவறத்தில் ஈடுபடுவோரை நல்லவர்களாகக் காட்ட ஊடகங்களால் முடியாது என்றார்.

இவ் வைபவத்தில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அமைச்சர் வஸந்த அலுவிகார, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, துசிதா விஜயமான்ன, தம்புள்ள ஐ.தே.க. அமைப்பாளர் பிரியான் விஜேரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.