21 தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்பு

ஜனாதிபதி தெரிவிப்பு

0 552

மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதை எதிர்ப்­ப­வர்கள் போதைப்­பொருள் பாவனை மற்றும் வியா­பா­ரத்தை தடுப்­ப­தற்கு நாட்டில் எதனை செய்­துள்­ளனர் என கேள்வி எழுப்­பி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்­ன­ணியில் போதைப்­பொருள் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகவும் தெரி­வித்தார்.

30 வரு­ட­கால யுத்­தத்தை நாம் முடி­வுக்கு கொண்டு வந்­துள்ளோம். இந்த யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனும் போதைப்­பொருள் மூலமே வரு­மா­னத்தை பெற்றார். தற்­பொ­ழுது சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வா­திகள் இந்தப் போதைப்­பொருள் மூலம் வரு­மா­னத்தை பெற்று வரு­கின்­றனர் என்றும் ஜனா­தி­பதி கூறினார்.

போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­று­வதை எதிர்ப்போர் நாட்டில் எதிர்­கால இளம் சமூ­கத்­தி­னரை சீர­ழிக்கும் போதைப்­பொருள் பாவ­னையை தடுப்­ப­தற்­காக எத்­த­கை­ய­வற்றை செய்­துள்­ளார்கள் என்றும் ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பினார்.

போதை­யி­லி­ருந்து விடு­தலை பெற்ற நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதைப்­பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்­டத்தை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நேற்­றைய தின­மாகும்.

இதன் பிர­தான மகா­நாடு நேற்று பிற்­பகல் கொழும்பு, சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்­றது.

இதில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தா­வது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்­கா­வி­லுள்ள முழு மாநி­லங்­க­ளிலும் போதைப்­பொருள் குற்­றத்­திற்­காக மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்று சமீ­பத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அங்கு நான்கு மாநி­லங்­களில் மாத்­திரம் போதைப்­பொருள் குற்­றத்­திற்­காக மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை.

இதனை கருத்­திற்­கொண்டு இந்த விட­யத்தை வலி­யு­றுத்­தினார். இதே­போன்று உலக நாடு­க­ளிலும் போதைப்­பொருள் குற்­றத்­திற்­காக மரண தண்­ட­னையை நிறை­வேற்ற வேண்டும் என்­பதை கூறி­யி­ருந்­ததை இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

போதைப்­பொ­ருளை தடுப்­ப­தற்­காக நான் ஜனா­தி­ப­தி­யான பின்னர் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை. 1989 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் பிர­வே­சிப்­ப­தற்கு முன்னர் நான் ஒரு சாதா­ரண அரச ஊழி­ய­ரா­கவே பணி­பு­ரிந்தேன். எனது இந்த ஊழியர் தரத்­துடன் எனது கிரா­மத்தில் கள்­ளச்­சா­ராயம் போன்ற மது­பா­வ­னைக்கு எதி­ராக செயற்­பட்டேன். அப்­பொ­ழுது கள்­ளச்­சா­ராயம், கஞ்சா போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­தி­யோரை தடுத்து நல்­வ­ழிப்­ப­டுத்­து­வதில் ஈடு­பட்­ட­போது இந்த வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருந்தோர் எனக்கு பெரும் அச்­சு­றுத்தல் விடுத்­தனர். இந்த அச்­சு­றுத்­தல்­கூட எனது சிறிய பத­வியிலிருந்து வில­கு­வ­தற்கு கார­ண­மா­கக்­கூட இருக்­கலாம்.

40 வரு­டங்­க­ளுக்கு மேல் இத்­து­றையில் அனு­பவம் உண்டு. என்னை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­வ­தற்­காக அன்று செயற்­பட்­ட­வர்­களும் போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று அன்று தெரி­வித்­தனர் என்றும் ஜனா­தி­பதி தமது உரையில் குறிப்­பிட்டார்.
போதைப்­பொ­ரு­ளினால் பாதிக்­கப்­பட்­டவர் ஒருவர் இங்கு உரை­யாற்­றினார். அவ­ரது உரையின் மூலம் நாம் பல விட­யங்­களை உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
சுகா­தார அமைச்சர் குறு­கிய உரையை நிகழ்த்­தினார். ஆனால் அதில் முக்­கிய கருத்­துக்கள் அடங்­கி­யி­ருந்­தன. நாட்­டி­லுள்ள சிறைக் கைதி­களில் 60 சத­வீ­த­மானோர் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டுக்­காக சிறை­வாசம் அனு­ப­விப்­ப­வர்­க­ளாவர். சிறைச்­சா­லை­களில் 24,000 சிறைக் கைதிகள் இருக்­கின்­றனர். இதில் 15,000 பேர் போதைப்­பொருள் குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளாவர்.

வெலிக்­கடை சிறைச்­சா­லை­யி­லுள்ள சிறைக் கைதிகள் பெரும்­பா­லானோர் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான இளம் பெண்­க­ளாவர். ஆனால் இவர்கள், தம்­மீது போலி குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி சிறையில் தள்­ளி­விட்­ட­தாகத் தெரி­விக்­கின்­றனர். ஆனால் நாட்டில் இளம் வய­தினர் மத்­தியில் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. இன்று விஷே­ட­மாக பெரும் சவா­லாக இது அமைந்­துள்­ளது. தண்ணீர் ஒரு போத்­தலின் விலை­யிலும் பார்க்க பியர் ஒரு போத்­தலின் விலை குறை­வா­னது. இத்­த­கைய நிலை நாட்டில் நில­வு­கி­றது. சிகரட் போன்ற நச்­சுத்­தன்மை கொண்­ட­வற்றை பயன்­ப­டுத்­து­வது இந்தப் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­வ­தற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­துள்­ளது.

போதைப்­பொருள் பாவ­னையின் கார­ண­மாக வரு­டாந்தம் 50,000 பேர் சிறைக்கு செல்­கின்­றனர். இவர்­களில் பெண்கள் அதி­க­மானோர். பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் போதைப்­பொருள் பாவனை வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது. சர்­வ­தேச பாட­சா­லைகள் தொடக்கம் அர­சாங்க பாட­சா­லைகள் வரை­யி­லுள்ள மாண­வர்கள் இல­வ­ச­மாக போதைப்­பொ­ருளை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்­சியை போதைப்­பொருள் கும்பல் வழங்­கு­கின்­றது. விஷே­ட­மாக இன்று பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இந்தப் பாவனை இடம்­பெற்று வரு­கின்­றது. இனத்தை அழிப்­ப­தற்­காக போதைப்­பொருள் முக்­கிய ஆயு­த­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

எமக்­கென வர­லாற்று ரீதி­யான பெருமை உண்டு. ஆனால் இன்று அது­கு­றித்து மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாது. இதற்குப் பல கார­ணங்கள் உண்டு. முக்­கி­ய­மா­னது போதைப்­பொருள் பிரச்­சி­னை­யாகும். நாளாந்தம் 10 பேர் வாகன விபத்­துக்­களால் இறக்­கின்­றனர். இதற்கு முக்­கிய காரணம் வாக­னத்தை செலுத்­துவோர் போதைப்­பொ­ருளை பயன்­ப­டுத்­து­வ­த­னாலே ஆகும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார். இன்று போதைப்­பொருள் பாவ­னையைத் தடுப்­ப­தற்­கான செய்­தியை மக்கள் மத்­தியில் கொண்­டு­செல்­வதில் பாட­சாலை மாண­வர்கள் முக்­கிய இடம் வகிக்­கின்­றனர்.

இத­னா­லேயே இன்­றைய தினம் நாம் 3500 பாட­சா­லை­களை இதில் பங்­கு­கொள்ளச் செய்­துள்ளோம் . இந்த தரு­ணத்­தி­லா­வது இதற்கு நாம் சரி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளா­விட்டால் மெக்­சிகோ, மாலைத்­தீவு போன்ற நாடு­களை போன்­ற­தா­கி­வி­டுவோம்.

உலக நாடு­க­ளில சில அர­சாங்­கங்­க­ளி­னால்­கூட இன்னும் போதைப்­பொருள் பாவனையை தடுக்க முடி­யா­துள்­ளது. போதைப்­பொருள் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளோர் அர­சி­யல்­வா­தி­களை அழித்து விடுவர். அமெ­ரிக்கா 2018 ஆம் ஆண்டில் இவ்­வா­றான மர­ண­தண்­ட­னையை 25 பேருக்கு நிறை­வேற்­றி­யுள்­ளது. இந்­தியா, சிங்­கப்பூர், சீனா ஆகிய நாடு­க­ளிலும் மர­ண­தண்­டனை அமுலில் உண்டு.

போதைப்­பொ­ருளை தடுப்­ப­தற்கு நான் தலைமை தாங்கி நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காப்­ப­தற்­காக செயற்­ப­டு­கின்றேன். ஆனால் அர­சாங்­கத்­தி­லுள்ள சிலரும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் எதிர்க்­கட்­சி­யி­னரும் எனது இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக செயற்­பட முற்­பட்­டுள்­ளனர் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் இது­தொ­டர்­பாக என்­னுடன் கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­று­வது தொடர்பில் எனது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தினேன். போதைப்­பொருள் பாவ­னை­யினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­காக 10,12 புன­ர­மைப்பு நிலை­யங்கள் உண்டு.

இந்தப் பாவ­னையை நீடித்தால் புன­ர­மைப்பு நிலை­யங்­களை மேலும் அமைக்க வேண்­டி­யேற்­படும். இந்தப் பாவ­னையின் கார­ண­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களும் நாட்டில் இடம்­பெ­று­கின்­றன. இந்தப் பாவனை நாட்டை சீர­ழித்து விடு­மென்­பதை அவ­ருக்குத் தெளி­வு­ப­டுத்­தினேன். சர்­வ­தேச போதைப்­பொருள் தடுப்பு தினத்­திற்கு அமை­வாக போதைப்­பொருள் ஒழிப்பு நட­வ­டிக்கை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­தி­னத்­தன்றே மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்கு நான் கைச்­சாத்­திட்டேன். இதனை தொடர்ந்து ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்க மாட்­டோ­மென அச்­சு­றுத்­து­கின்­றது. நாட்டின் இறை­மையில் தலை­யிட எவ­ருக்கும் முடி­யாது. அர­சாங்­கமும் கட்­சியின் கொள்­கைக்­கேற்ப இந்த தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்கு தெரி­வித்­துள்­ளது என்றும் ஜனா­தி­பதி கூறினார்.
பொது இடங்­களில் சிகரட் பாவ­னையைத் தடுப்­ப­தற்­காக நாம் சட்டம் கொண்டு வந்­த­போது சிலர், வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் நாட்­டுக்கு வர­மாட்­டார்கள் என்று குறை தெரி­வித்­தனர். ஆனால் இன்று நிலைமை என்ன? சுவிட்ஸ்­லாந்­தி­லேயே மனித உரி­மை­களை பாது­காக்கும் தலை­மை­யகம் உண்டு. நான் சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல முறை ஜெனீவாவிற்கு சென்றுள்ளேன்.

நான் வெளிநாடு செல்லும்போது தனிமையில் அங்கு சுற்றிப் பார்ப்பது வழமை. ஜெனீவா பஸ் தரிப்பு அமைந்துள்ள இடம் சிகரட் புகை மண்டலமாக எப்பொழுதும் காட்சியளிக்கிறது. ஆனால் இங்கு அவ்வாறான நிலைமை இல்லை. அதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுமக்கள் இந்தப் போதைப்பொருளை தடுக்க வேண்டுமென்ற கருத்தினை கொண்டிருந்தனர்.

இதற்காக சட்டங்கள் கொண்டுவர முடிந்துள்ளது. மரண தண்டனையும் வழங்க முடிந்துள்ளது. நீதிமன்றமே மரணதண்டனை குறித்து தீர்மானிக்கின்றது. அதனை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திடுவது மாத்திரமே எனது கடமை. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக கையெழுத்து இடப்பட்டமை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானவற்றை மேற்கொள்ளாமல் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாது என்றும் பாராட்டியவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.