பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு

0 778

 

எம்.எப்.எம்.பஸீர்

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராளு­மன்­றத்தை கலைத்­த­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ரணை செய்­ய­வென எழுவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தம நீதி­யரசர் நளின் பெரேரா இதற்­கான தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார்.  ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்ட பூரண நீதி­ய­ர­சர்கள் குழு­வொன்றின்  முன்­னி­லையில் இந்த வழக்­கு­களை விசா­ரிக்க வேண்­டு­மென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட 11 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்­பி­லான இடை­யீட்டு மனு­தா­ரர்கள் முன்­வைத்த நகர்த்தல் பத்­திரம் மீது அவ­தானம் செலுத்­தியே பிர­தம நீதி­ய­ரசர் இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார்.

அதன்­படி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­குகள் பிர­தம நீதி­யரசர் நளின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­னாண்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழாம் முன் விசா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.

எஸ்.சி.எப்.ஆர். 351/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 352/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 353/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 354/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 355/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 356/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 358/ 201, எஸ்.சி.எப்.ஆர். 359/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 360/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 361/ 2018 ஆகிய அடிப்­படை உரிமை மீறல்கள் மனு தொடர்­பி­லான இடை­யீட்டு மனு­தா­ரர்­க­ளான பேரா­சி­ரியர் ஜீ. எல். பீரிஸ், கலா­நிதி சன்ன ஜய­சு­மன, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த உள்­ளிட்ட ஐவர் உயர் நீதி­மன்றில் நகர்த்தல் பத்­திரம் ஊடாக  நீதி­யர­சர்கள் குழாமில் உள்­ள­டங்க வேண்­டிய நீதி­ய­ர­சர்கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க விண்­ணப்பம் செய்­தி­ருந்­தனர்.

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே கடந்த 19 ஆம் திகதி அடிப்­படை ஆட்­சே­ப­னை­களும் முன்­வைக்­கப்பட்­டுள்ள நிலையில், எதிர்­வரும் டிசம்பர் 4, 5, 6 ஆம் திக­தி­களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தை கலைத்து கடந்த 9 ஆம் திகதி வெளி­யிட்ட 2096/70 இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தலை செயற்­ப­டுத்­து­வ­தற்கு உயர் நீதி­மன்றம் எதிர்­வரும் டிசம்பர் 7 ஆம் திகதிவரை  இடைக்காலத் தடையும்  விதித்தது. இந்நிலையிலேயே 4,5,6 ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தற்போது ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.