நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

0 643

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­படும் வன்­செ­யல்­களின் போதெல்லாம் அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கும், காயங்­களுக் குள்­ளா­ன­வர்­க­ளுக்கும் வன்­செ­யல்கள் கார­ண­மாக பலி­யா­ன­வர்­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் என்று வாக்­கு­று­திகள் வழங்கி பாதிக்­கப்­பட்­ட­வர்­களை ஆறுதல் படுத்­தி­யுள்­ளது. ஆனால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்கள் இழப்­பீ­டு­களைப் பெறு­வ­தற்கு வரு­டக்­க­ணக்கில் காத்­தி­ருக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களை அடுத்து ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்போர் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு தாம­த­மில்­லாமல் உட­ன­டி­யாக நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் என்று அமைச்­ச­ரவைக் கூட்­டங்­க­ளிலும் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போதும் உறு­தி­ய­ளித்­தாலும் நஷ்­ட­ஈ­டுகள் காலந்­தாழ்த்­தியே வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனை நாம் கிந்­தோட்டை மற்றும் அளுத்­கம, கண்டி – திகன வன்­செயல் சம்­ப­வங்­க­ளி­னை­ய­டுத்து அறிந்­து­கொண்டோம்.

கண்டி – திகன வன்­செ­யல்கள் அரங்­கேற்­றப்­பட்டு ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யாகி பல மாதங்­களும் கடந்­து­விட்ட நிலையில் நஷ்­ட­ஈடு வழங்கல் இன்னும் முழு­மை­யாகப் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. மொத்தம் 546 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்­டுப்­ப­ணி­யகம் நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்­டாலும் இவற்றில் 174 சொத்­து­க­ளுக்கு இன்னும் நஷ்­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. 174 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபா வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கியும் நஷ்­ட­ஈடு வழங்கும் பணிகள் மந்­த­கதியிலேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 372 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 19 கோடி 48 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுக்கு ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் இது­வரை நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இதுவும் இழு­பறி நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது. அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு இழைக்­கப்­பட்­டுள்ள சேதம் 27 மில்­லியன் ரூபாய் என உரிய அரச நிறு­வ­னங்­களால் மதிப்­பீடு செய்­யப்­பட்டும் பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு மில்­லியன் ரூபாவே நஷ்­ட­ஈ­டாக வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்கப் பட்­டுள்­ளமை நஷ்­ட­ஈ­டு­க­ளிலும் முஸ்­லிம்கள் புறந்­தள்­ளப்­ப­டு­கின்­றமை தெளி­வா­கி­றது.

அம்­பா­றையில் பாதிக்­கப்­பட்ட ஏனைய 13 சொத்­து­களின் சேத­ம­திப்­பீடு 3.6 மில்­லியன் ரூபா என மதிப்­பீடு செய்­யப்­பட்டும் 1.3 மில்­லியன் ரூபாவே நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யி­லேயே முஸ்லிம் சமூகம் கடந்த மே மாதம் மேலும் பல அழி­வு­களை வன்­செ­யல்கள் மூல­மாக எதிர்­கொண்­டது. கம்­பஹா, குரு­ணாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் 826 சொத்­த­ழி­வுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக அவ்வவ் பிர­தே­சங்­களின் பிர­தேச செய­லக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

பெரும் எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்­களும் சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. கம்­பஹா மாவட்­டத்தில் 2 பள்­ளி­வா­சல்­களும், குரு­நாகல் மாவட்­டத்தில் 26 பள்­ளி­வா­சல்­களும், புத்­தளம் மாவட்­டத்தில் 13 பள்­ளி­வா­சல்­களும் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. மொத்தம் 314 கடைகள் தாக்­குதல் களினால் சேதப்­ப­டுத்­தப்­பட்டும், எரிக்­கப்­பட்­டு­முள்­ளன.

இவற்­றுக்­கான உரிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வதைத் துரி­தப்­ப­டுத்­து­மாறு புனர்­வாழ்வு அமைச்­சுக்குப் பொறுப்­பான அமைச்­சரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்ளார். பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கர்கள் தங்­க­ளது கடை­களைத் திறந்து வர்த்­த­கத்தை ஆரம்­பிப்­ப­தற்கு முற்­பணம் வழங்­கு­மாறும் பிர­தமர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

பிர­த­மரின் பணிப்­பு­ரையும் ஆலோ­ச­னை­களும் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அம்­பாறை வன்­செ­யல்கள் இடம்­பெற்று ஒரு வரு­டத்­திற்கு மேலா­கியும் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. இதேபோல் திகன வன்­செயல் நஷ்­ட­ஈ­டு­களின் ஒரு தொகுதி இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவற்­றுக்­கெ­தி­ராக பிர­தமர் தனது அதி­கா­ரத்தைப் பாவித்து உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இதேபோல் கொட்­டா­ர­முல்­லையில் இன­வா­தி­க­ளினால் பலி­யெ­டுக்­கப்­பட்ட பௌஸுல் அமீ­ருக்­கான நஷ்­ட­ஈடு 1 ½ மாதங்கள் கடந்தும் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. 3 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 7 இலட்சம் ரூபா வழங்கப்படவேண்டியுள்ளது. தாமதத்திற்குக் காரணம் அவரது மரண அத்தாட்சிப்பத்திரம் இதுவரை சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்குக் கிடைக்காமையே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன வன்முறைகள் நடக்க வழிவிட்டுவிட்டு அதன்பின்னர் நஷ்டஈடு வழங்குகின்ற கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் வன்செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இந்தக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பதை அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

விடிவெள்ளி 

Leave A Reply

Your email address will not be published.