மத்ரஸாக்களை அரசுடைமையாக்குக

ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என கோருகிறது மஹிந்த அணி

0 686

மத்­ர­ஸாக்­களில் கற்­பிக்­கப்­படும் கற்கை நெறிகள், மற்றும் அடிப்­ப­டை­வாத மத போத­னைகள் தொடர்­பிலும் ஆராய விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும்.

பொருத்­த­மற்ற மத கருத்­துக்­களைப் போதிப்­பதன் கார­ண­மா­கவே  இளம் தலை­மு­றை­யினர் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக  மாற்­ற­ம­டை­கின்­றனர்.

எனவே, மத்­ர­ஸாக்­களை முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­கு­வதே   அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கு­மென மஹிந்த தரப்­பினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன இவ்­வாறு கருத்து வெளி­யிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மத்­ரஸா பாட­சா­லை­களில் பொருத்­த­மற்ற கற்கை நெறி­களே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இல­வச கல்­வி­யினை வழங்கும்  நாட்டில் இவ்­வா­றான பாட­சா­லைகள்  இயங்­கு­வது  தேவை­யற்­றது. இப்­பா­ட­சா­லை­களில் மதக் கொள்­கை­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஒரு குற்­றத்­தினை செய்தால் என்ன தண்­டனை கிடைக்கும் என்­பது எமது பொது சட்­டத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மத்­ரஸா பாட­சா­லை­களில் இவ்­வா­றான  குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களும் மிக கொடூ­ர­மான முறையில்  கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

அரபு நாடு­களில்  குற்­றங்­க­ளுக்கு கிடைக்கப் பெறும் தண்ட­னை­களை  எமது நாட்டின் மாண­வர்­க­ளுக்குப் போதிப்­பதால் எவ்­வித பயனும் கிடைக்­கப்­பெ­றாது. மாறாக அடிப்­ப­டை­வா­தமே தோற்றம் பெறும்.  பயங்­க­ர­வாதி  சஹ்­ரானின் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை தொடர்ந்து   அடிப்­ப­டை­வா­தத்தை  கற்­பிக்கும்  பாட­சா­லைகள் தொடர்பில் அர­சாங்க தரப்பில் ஒரு மாத காலத்­திற்கு  மாத்­திரம் பேசப்­பட்­டது. தற்­போது இவ்­வி­டயம் தொடர்பில் எவரும் அக்­கறை செலுத்­து­வ­தில்லை

நாட்­டுக்குப்  பொருத்­த­மற்ற  விட­யங்­களை அடிப்­ப­டை­வா­த­மாகப் போதிக்கும்  பாட­சா­லைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தா­விடின்  எதிர்­கா­லத்தில் பாரிய விளை­வுகள் ஏற்­படும்.  மத்­ரஸா பாட­சா­லை­களில்  மாண­வர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இப்­பா­ட­சா­லை­களின் பாடத் திட்­டங்கள் தொடர்பில் ஆராய  உரிய குழு­வினர் நிய­மிக்­கப்­ப­டுதல் அவ­சியம்.  விரை­வான தீர்­வினை பெறா­விடின்  மேலும் பல  சஹ்ரான் போன்ற  தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகி விடு­வார்கள்.

மத்­ரஸா  பாட­சா­லை­களை முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­குதல் அவ­சியம்.  இப்­பா­ட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு   இல­வச கல்வி கிடைக்­கப்­பெற வேண்டும். அடிப்­ப­டை­வாத பாடசாலைகளை முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே   இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும்.  அரசாங்கத்தில் இது முடியாவிடின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவுள்ள எமது  அரசாங்கத்தில் நிச்சயம் மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனையற்ற விதத்தில் முழுமையாக அரசுடைமையாக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.