முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்

0 694

எகிப்து இரா­ணு­வத்தால் 2013ஆம் ஆண்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்ஸி நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள உளவு பார்த்த குற்­றச்­சாட்டின் வழக்கு விசா­ர­ணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து இறந்­துள்ளார். அவ­ருக்கு வயது 67.

தற்­போது தடை­செய்­யப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய இயக்­க­மான முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் தலை­வ­ராக இருந்த முஹம்­மது முர்ஸி உளவு பார்த்த குற்­றச்­சாட்­டுக்­கான குற்ற விசா­ரணை கூண்­டி­லி­ருந்து பேசிக் கொண்­டி­ருக்­கை­யி­லேயே மார­டைப்­பினால் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

`முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம் இதனை ஒரு “கொலை” என தெரி­வித்­துள்­ளது.

செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் முர்­ஸியின் குடும்­பத்­தினர், முர்­ஸிக்கு இருந்த தீவிர உடல்­நல பிரச்­சி­னை­க­ளான உயர் இரத்த அழுத்தம், சர்க்­கரை நோய் ஆகி­ய­வற்­றுக்கு சிறையில் சிகிச்சை வழங்­கப்­ப­ட­வில்லை என்றும், தொடர்ச்­சி­யாக தனிமைச் சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்தார் என்றும் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர்.

உளவு பார்த்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த முர்ஸி, பலஸ்தீன இஸ்­லா­மிய குழு­வான ஹமா­ஸுடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டது. முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு ஹமாஸ் குழு­வுடன் நெருங்­கிய தொடர்பைப் பேணி வரு­கின்­றது.

திங்கட்கிழமை முர்ஸி, வெளியில் எங்கும் சத்தம் கேட்­கா­த­வாறு வடி­வ­மைக்­கப்­பட்ட அறையில் ஐந்து நிமி­டங்கள் பேசினார். அவர் விசா­ர­ணையில் குறுக்­கீடு செய்­யாமல் இருக்க அவ்­வாறு வடி­வ­மைக்­கப்­பட்ட அறையில் பேச­வைக்­கப்­பட்டார் என அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

நீதி­மன்­றத்தில் மயங்கி விழுந்த முர்ஸி, மருத்­து­வ­ம­னையில் உள்ளூர் நேரப்­படி மாலை 4.50 மணிக்கு உயி­ரி­ழந்தார். அவர் உடலில் எந்த காயமும் இல்லை என அரசு வழக்­க­றிஞர் தெரி­வித்தார்.

அவரைச் சந்­திக்க அதி­கா­ரிகள் தம்மை அனு­ம­திக்­க­வில்லை எனவும், அவரின் உடல்­நிலை குறித்து தங்­க­ளுக்கு எதுவும் தெரி­ய­வில்லை என்றும் முர்­ஸியின் குடும்­பத்­தினர் கடந்த மாதம் தெரி­வித்­தனர்.

அவர் சிறையில் இருந்த சம­யத்தில், உற­வி­னர்கள் அவரை மூன்று முறை மட்­டுமே காண அனு­ம­திக்­கப்­பட்­டனர் என்றும், அவர் வழக்­க­றி­ஞர்­களை சந்­திக்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்றும், சர்­வ­தேச மன்­னிப்புச் சபை (அம்­னெஸ்டி இன்­டர்­நே­ஷனல்) தெரி­வித்­துள்­ளது.

முர்­ஸியின் உடலை எங்கு வைத்­தி­ருக்­கி­றார்கள் என்று தனக்கு தெரி­யாது என்றும், அவரின் உடலை, ஷர்­கி­யாவில் இருக்கும் நைல் டெல்டா மாகா­ணத்தில் உள்ள தங்­களின் சொந்த இடத்தில் அடக்க அனு­மதி மறுக்­கின்­றனர் என்றும் முர்­ஸியின் மகன் தெரி­வித்­தி­ருந்தார். இந் நிலையில் அவ­ரது ஜனாஸா நேற்று கெய்­ரோ­வி­லுள்ள மதீ­னதுன் நஸ்ர் மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டது. முன்னர் மர­ணித்த இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் தலை­வர்­க­ளது அடக்­கஸ்­த­லங்­க­ளுக்கு அரு­கி­லேயே முர்­ஸியின் ஜனா­ஸாவும் அடக்கம் செய்­யப்­பட்­ட­தாக அவ­ரது மகன் தெரி­வித்­துள்ளார்.

வழக்­கு­களும் தண்­ட­னை­களும்

2012 ஆம் ஆண்டு எகிப்தின் ஜன­நா­யக முறையில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் அதி­ப­ரானார் முர்ஸி. மூன்று வெவ்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில் முர்­ஸிக்கு 45 வரு­டங்­க­ளுக்கும் மேலாக சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத குழு­வுக்கு தலை­மை­யேற்­றது, அர­சுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தி­ய­வர்­களை கைது செய்து துன்­பு­றுத்­தி­யது, நாட்டின் இர­க­சி­யங்­களை கசி­ய­விட்­டது போன்ற குற்­றச்­சாட்­டுகள் முர்­ஸியின் மீது சுமத்­தப்­பட்­டன. எனினும் இக் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் சோடிக்­கப்­பட்­டவை என்றே முர்­ஸியும் அவ­ரது சகோ­த­ரத்­துவ இயக்­கமும் வாதாடி வந்­தனர்.

இந்தக் கைதும் விசா­ர­ணை­களும் அர­சியல் கார­ணங்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டவை என்று முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்கள் தெரி­வித்து வந்­தனர். மேலும் நம்­பத்­த­குந்த சாட்­சி­யங்கள் மற்றும் போது­மான ஆதா­ரங்கள் இல்­லாமல் நடந்த ஒரு ஆட்­சிக்­க­விழ்ப்பை சட்­ட­பூர்­வ­மா­ன­தாக்க பார்க்­கி­றார்கள் என்றும் அவர்கள் தெரி­வித்து வந்­தனர்.

யார் இந்த முஹம்­மது முர்ஸி ?

கலா­நிதி முஹம்­மது முர்ஸி, இஹ்­வானுல் முஸ்­லிமீன் இயக்­கத்தின் அர­சியல் கட்­சி­யான சுதந்­தி­ரத்­துக்கும் நீதிக்­கு­மான கட்­சியின் தலை­வ­ராவார். இஹ்­வானுல் முஸ்­லிமீன் இயக்­கத்தின் வழி­காட்டல் பிரிவில் முன்னாள் உறுப்­பி­ன­ரான இவர் இஹ்­வானுல் முஸ்­லிமீன் இயக்­கத்தின் மிக முக்­கிய அர­சியல் பிர­மு­கர்­களில் ஒருவர். கலா­நிதி முஹம்­மது முர்ஸி 2000–-2005 ஆண்­டு­கால பகுதியில் பாரா­ளு­மன்ற மக்கள் சட்­ட­மன்­றத்தில் இஹ்வான் அணியின் பாரா­ளு­மன்ற தலை­வ­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார்.

இவர் எகிப்து சகஜிக் (Zagazig University) பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் பீடத்தின் பருப்­பொருள் அறி­வியல் துறையின் தலை­வ­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்­ள­துடன் ஆய்வு அறி­வியல் துறைக்கு பெரிதும் பங்­காற்­றி­யுள்ளார் .

முஹம்மத் முர்ஸி ஈஸா அல் இயாத் என்­பது அவ­ரது முழுப் பெயர். எகிப்தின் ஷர்க்­கிய்யா மாகா­ணத்தின் அத்வா எனும் கிரா­மத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்­துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டில் கெய்ரோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் இளங்­கலை பட்­டத்தை பெற்றார். அதன்­பின்னர் 1978 இல் அதே பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்து உலோக தொழிற்­கலை பொறி­யியல் முது­க­லைப்­பட்டம் (Master of Engineering degree in Metallurgy) பெற்றார். அவர் மேற்­கொண்டு, 1982 இல் அமெ­ரிக்க தெற்­கத்­திய கலிஃ­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் துறையில் டாக்டர் (PhD) பட்­டத்தை பெற்­றுக்­கொண்டார். இவர் புனித அல்­குர்­ஆனை முழு­மை­யாக மன­ன­மிட்ட ஒரு ஹாபிழ் ஆவார்.

இவர் ஒரு சிறந்த விரி­வு­ரை­யா­ள­ரா­கவும், ஒரு ஆசி­ரியர் உத­வி­யா­ள­ரா­கவும் , கெய்ரோ பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தெற்­கத்­திய கலிஃ­போர்­னியா பல்­க­லைக்­க­ழக பொறி­யியல் பீடத்­திலும் கட­மை­யாற்­றி­யுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைப்­பட்ட காலத்தில் கலிஃ­போர்­னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்­க­லைக்­க­ழ­கத்தில் உதவி பேரா­சி­ரி­ய­ரா­கவும் (Assistant Professor) பணி­யாற்­றி­யுள்ள இவர் 1985 இலி­ருந்து 2010 ஆண்­டு­வரை சாகஜிக் (The University of Zagazig) பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொறி­யியல் பீடத்தின் மூலப்­பொ­ருள்கள் பொறி­யியல் துறையின் பேரா­சி­ரி­ய­ரா­கவும், தலை­வ­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். அந்த காலப்­ப­கு­தியில் அவர் சாகஜிக் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆசி­ரிய பணி­யா­ளர்கள் கிளப் உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார். இவர் எண்­ப­து­களில் அமெ­ரிக்க விண்­வெளி ஆய்வு மைய­மான நாசா­விலும் (NASA) கட­மை­யாற்­றி­யுள்ளார் என்­பது குறிப்­பிட்டு சொல்­லக்­கூ­டி­யது.

இவர் பேரா­சி­ரி­ய­ராக கட­மை­யாற்­றிய போது அர­சியல் கட்­சிகள் மற்றும் நிறு­வ­னங்­களின் சர்­வ­தேச மாநாடு உறுப்­பி­ன­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார். எகிப்­திய சியோ­னிச திட்­டங்­களை எதிர்க்கும் அமைப்பின் ஸ்தாபக உறுப்­பி­ன­ரா­கவும் விளங்கும் இவர் தான் வகித்த ஒவ்­வொரு பொறுப்­பிலும் தனது கடின உழைப்­பினால் சிறந்து விளங்­கி­யுள்ளார்.

கலா­நிதி முஹம்­மது முர்ஸி பல்­வேறு அறி­வியல் துறை­களில் இருந்து தனது சிறப்­பான திற­மைகள் மற்றும் திறன்­களை நிரூ­பித்து அதன் மூலம் ஒரு உறு­தி­யான ஆற்றல் மிக்க , தீர்க்­க­மான இஸ்­லா­மிய அர­சியல் முற்­போக்கு தலை­வ­வ­ராக உரு­வா­கி­யுள்ளார் . இவர் நடை­முறை உற்­பத்தி தீர்­வுகள் (practical production solutions) தொடர்­பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்­கிய பிரி­வு­களில் ஆராய்ச்­சி­களை செய்­துள்ளார் என்­பது சிறப்­பம்­ச­மாகும் .

அவர் ஆரம்ப எண்­ப­து­களில் விண்­கலம் இயந்­தி­ரங்கள் மேம்­பாட்­டியல் அறி­வியல் துறையில் நாசாவில் பணி­யாற்­றிய போது “உலோ­கங்­களில்”, “metal surface treatment” என்ற துறையில் அதி­க­மான ஆய்­வுகள் செய்­துள்ளார்.

அதே­வேளை சர்­வா­தி­கார அடக்­கு­மு­றை­க­ளையும் மற்றும் தூக்­கி­யெ­றி­யப்­பட்ட ஆட்­சியின் அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­க­ளையும் தொடர்ந்து உறு­தி­யாக எதிர்த்து வந்­துள்ளார் .இந்த நிலைப்­பாடு கார­ண­மாக, கலா­நிதி முஹம்­மது முர்ஸி பல முறை கைது செய்­யப்­பட்டு சிறை வாழ்க்­கை­யையும் அனு­ப­வித்­துள்ளார்.

2005 ஆம் ஆண்டு தேர்­தலில் பின்னர், கலா­நிதி முஹம்­மது முர்ஸி அப்­பட்­ட­மான தேர்தல் மோச­டிக்கு எதி­ராக சுதந்­திரம் கோரிய நீதி­ப­தி­க­ளுக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டங்­களை வழி­ந­டத்­தினார். இதன் விளை­வாக, இவர் இஹ்­வானுல் முஸ்­லிமீன் இயக்க 500 உறுப்­பி­னர்­க­ளுடன் சேர்ந்து கைது செய்­யப்­பட்டார். மத்­திய கெய்­ரோவின் வட கெய்ரோ நீதி­மன்றம் மற்றும் அல் ஜலா கோர்ட் வளாகம் முன் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் இஹ்­வானுல் முஸ்­லிமீன் ஈடு­பட்­ட­போது மே 18, 2006 காலை இவர் கைது செய்­யப்­பட்டு சிறையில் ஏழு மாதங்கள் அடைக்­கப்­பட்டார்.

எகிப்து முழு­வதும் முன்னாள் சர்­வா­தி­கா­ரிக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களை அடக்க ‘கோபத்தின் வெள்­ளி­யன்று’ “Friday of Anger” இஹ்­வான்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கு­பற்­று­வதை தடுக்க ஆட்­சி­யாளர் இவர்­களை மீண்டும் சிறையில் அடைத்­தனர். பல சிறைச்­சா­லை­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களால் உடைக்­கப்­பட்­டன, பல கைதிகள் தப்பிச் சென்­றனர். ஆனால் எப்­போதும் எல்­லா­வற்­றிலும் ஒழுங்­கு­களை பேணும் முஹம்­மது முர்ஸி அவ­ரது சிறைக் கூடத்தில் இருந்து வெளி­யேற மறுத்­து­விட்டார். நீதித்­துறை அதி­கா­ரிகள் சிறைக்கு வந்து சிறையில் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ தலை­வர்கள் எந்த சட்ட கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை விளக்க வேண்டும் என்று செயற்­கைக்கோள் தொலைக்­காட்சி சேனல்கள் மூலம் கோரிக்கை முன்­வைத்தார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்க்­க­வில்லை.

கலா­நிதி முஹம்­மது முர்ஸி பல வதை­களை அனு­ப­வித்தார். அவர் மட்­டு­மல்ல, சர்­வா­தி­கார ஆட்­சி­யாளர் ஹுஸ்னி முபா­ரக்கின் அநி­யாயம் அவ­ரது குடும்­பத்­தையும் விட்­டு­வைக்­க­வில்லை . அவ­ரது மகன், டாக்டர் அஹமத் , 2000 ஆம் ஆண்டில் பாரா­ளு­மன்­றத்தில் தனது தந்தையின் அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்த பின்னர் கைது செய்­யப்­பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்­ட­மன்­றத்தில்’ ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது 3 முறை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கலா­நிதி முஹம்­மது முர்ஸி பாரா­ளு­மன்­றத்தில் ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்­பான அர­சியல் சேவையை வெளிப்­ப­டுத்­தினார். அதன் பின்னர் அவர் இஹ்வான் இயக்­கத்தின் வழி­காட்டல் பிரிவின் உறுப்­பி­ன­ராக அதன் சூரா சபையால் தெரிவு செய்­யப்­பட்டார். ஜன­வரி 25 புரட்­சிக்குப் பின்னர், இஹ்­வான்­க­ளினால் சுதந்­தி­ரத்­திற்கும் நீதிக்­கு­மான அர­சியல் கட்சி நிறு­வப்­பட்­ட போது அதன் தலை­வ­ராக அவர் இஹ்­வானுல் முஸ்­லிமீன் இயக்­கத்தின் சூரா அவையால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

2000 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் கலா­நிதி முஹம்­மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாரா­ளு­மன்ற குழு தலை­வ­ராக மிகவும் தாக்­க­முள்ள,செல்­வாக்­குள்ள முக்­கிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார். மக்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கு எதி­ராக செயல்­பட்­டுள்ளார். இதன் கார­ண­மாக சர்­வ­தேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை­யான காலத்­திற்­கான சிறந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார்.

கலா­நிதி முஹம்­மது முர்ஸி இஹ்­வான்­களின் அர­சியல் திட்ட முகா­மையில் அளப்­ப­ரிய பங்­காற்­றி­யுள்ளார். 2004 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இயக்க மறு­சீ­ர­மைப்பு பணியில் இவரின் பங்­க­ளிப்பு பெரிதும் பேசப்­ப­டு­கி­றது. 2007ஆம் ஆண்டு இஹ்­வான்கள் வெளி­யிட்ட அர­சியல் வேலைத்­திட்ட அறிக்­கை­யிலும் இவரின் பங்­க­ளிப்பு பெரிதும் இருந்­துள்­ளது. இதனைத் தொடர்ந்தே இவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கி எகிப்தின் முத­லா­வது ஜனநா­யக தலை­வ­ராக தெரிவானார்.

கண்டனங்கள்

முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் அர­சியல் கிளை­யான சுதந்­திரம் மற்றும் நீதிக்­கான கட்சி, “இது ஒரு கொலை” என்றும் முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்கள் உலகம் முழு­வதும் உள்ள எகிப்­திய தூத­ர­கத்­துக்கு முன்பு கூட வேண்டும் என்றும் தெரி­வித்­துள்­ளது.

முர்­ஸியின் நண்­ப­ரான துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்­துகான், முர்ஸி உயி­ரி­ழந்­த­தற்கு எகிப்தின் “சர்­வா­தி­கா­ரி­களே” காரணம் என தெரி­வித்­துள்ளார்.

மற்­றொரு நண்­ப­ரான கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி முர்­ஸியின் மறை­வுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரி­வித்­துள்ளார்.

‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பின் மத்­திய கிழக்கு இயக்­குநர் இது “மிகவும் மோச­மா­னது ஆனால் எதிர்­பார்க்­கப்­பட்­டது” என தெரி­வித்­துள்ளார்.

அதே­போன்று முர்­ஸியின் மர­ணத்­திற்கு உலக நாடுகள் பலவும் அனு­தாபம் தெரி­வித்­துள்­ள­துடன் எகிப்து அர­சாங்­கத்தின் மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பா­டு­க­ளுக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.