முஸ்லிம் அரசியல் தலைவர்களே!

0 831
  • அபூ  உமர்

இன்று வரை எமது நாட்டில் எதிர்­கொண்ட பிரச்­சி­னை­க­ளையும், சவால்­க­ளையும் ஆழ­மாக உற்று நோக்­கினால் மூன்று விட­யங்கள் தெளி­வாகும்.

  1. எமது முஸ்லிம் சமூகம் கன கச்­சி­த­மாக துண்­டா­டப்­பட்­டி­ருக்­கி­றது.
  2. எமக்­கென்று தூர­நோக்கு சிந்­த­னையும், தூய்­மையும், ஆளு­மையும் கொண்ட ஒரு தேசியத் தலை­மை­யில்லை.
  3. எமக்கும், பிற மதத்­த­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஆழ­மான புரிந்­து­ணர்வும், உறவும் போதிய அளவு இல்லை. அதை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தேசிய பொறி­மு­றைகள் பரந்த அளவில் உரு­வாக்­கப்­ப­டவும் இல்லை.

மேற்­படி விட­யங்கள் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரபின் மர­ணத்­துக்குப் பிற்­பட்ட காலத்தில் மிகவும் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்டு ஒரு தீவி­ர­வாத சமூ­க­மாக இன்று முத்­திரை குத்­தப்­பட்டு குற்­ற­வாளிக் கூண்டில் நிற்­கின்றோம்.

ஆரம்ப காலங்­களில் எமது அர­சி­யல்­வா­திகள், வியா­பா­ரிகள், புத்­தி­ஜீ­விகள் ஊர் மட்­டத்­திலும், தேசிய மட்­டத்­திலும் மேற்­படி 3 விட­யங்­க­ளிலும் கவனம் செலுத்தி எமது சமூ­கத்தின் அமை­தி­யான இருப்­புக்கும், சுதந்­தி­ரத்­திற்கும் பெரும்­பங்­காற்­றி­னார்கள். ஆனால்,   இன்று தனிப்­பட்ட அர­சியல் வாழ்க்­கைக்­காக உள்ளூர் மற்றும் தேசிய மட்ட ஒற்­றுமை, தலை­மைத்­துவம், சமா­தானம், சக­வாழ்வு அனைத்­தையும் இப்­போ­தி­ருக்கும் எமது அர­சி­யல்­வா­திகள் சீர்­கு­லைத்து சின்­னா­பின்­ன­மாக்கி வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

எனவே, இவர்­க­ளிடம் எமது சமூகம் சார்பில் ஒரு வேண்­டு­கோளை விடுக்­கின்றேன். அதற்­காக அவர்கள் அனைத்­தையும் ஒரே மேசைக்கு அழைக்க என்­னிடம் அதி­கா­ர­மு­மில்லை அவ்­வாறு சமூ­கத்தின் பேரால் அழைக்க அவர்கள் ஒன்­றாக வந்­த­ம­ரப்­போ­வதும் இல்லை.

ஆகவே! கொஞ்சம் வித்­தி­யா­ச­மாக ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கையில் ஒரு மேசையை வரைந்து அதனைச் சுற்றி அவர்கள் எல்­லோரும் வந்து அமர்ந்­தி­ருக்­கின்­றார்கள் எனக்­கொண்டு (அவர்­களின் போட்­டோக்­க­ளை­யெல்லாம் சுற்றி வைத்து) வாச­கர்­க­ளா­கிய (மக்­க­ளா­கிய) உங்கள் முன்னால் எனது வேண்­டு­கோளை முன் வைக்­கின்றேன்.

மதிப்­பிற்­கு­ரிய முஸ்லிம்  அர­சியல் தலை­வர்­களே!

நீங்கள் உங்கள் பரம்­ப­ரைக்கும் சம்­பா­தித்­து­விட்­டீர்கள், குளி­ரூட்­டப்­பட்ட வாழ்க்கை, உங்கள் பிள்­ளைகள் மிகச்­சி­றந்த பாட­சா­லையில் படிக்­கி­றார்கள், 5 நட்­சத்­திர ஹோட்­டல்­களில் உங்கள் வீட்டு திரு­ம­ணங்கள் நடந்­தே­று­கின்­றன. உங்கள் மனை­வி­ய­ருக்கு ஹிஜாப் பிரச்­சி­னை­யில்லை. ஏனெனில் அவர்கள் பஸ்ஸில் பய­ணிப்­ப­தில்லை, ஓடும் வாக­னங்கள் முதல் பேசும் தொலை­பேசி கட்­டணம் வரை அனைத்தும் இல­வசம். உங்கள் வீட்டை, வாக­னத்தை யாரும் பரி­சோ­திக்கப் போவதும் இல்லை. மொத்­தத்தில் வாழ்க்­கையில் செட்டில் ஆகி­விட்­டீர்கள்.

ஆனால் உங்கள் சொகுசு வாழ்க்­கைக்கு மாடாய் உழைத்து மறை­முக வரி, நேர்­முக வரி என செலுத்­திக்­கொண்டு பிர­சார மேடை­களில் உங்­களின் ஏமாற்று வார்த்­தை­களை நம்பி வோட்டும் போட்ட நாம் இன்று இந்­நாட்டில் நாதி­யற்று, பயந்­துபோய் கற்­பி­ழந்த பெண் போல் அநி­யா­யமாய் தீவி­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு நிற்­கின்றோம். நீங்­களும் சாது கண்­டி­யி­லி­ருந்து எறிந்த பந்தில் கொழும்பில் ‘ஆல் அவுட்’ ஆகி நிற்­கி­றீர்கள்.

அளுத்­கம, திகன, குரு­நாகல் என்று தொடர்ந்து 3 முறை பொரு­ளா­தார ரீதி­யா­கவும், உடல் ரீதி­யா­கவும், உள ரீதி­யா­கவும் அநி­யா­ய­மாக அடி­வாங்­கினோம். நீங்கள் முன்­கூட்டி பாது­காக்­கவும் இல்லை. நடந்து கொண்­டி­ருக்கும் போது நிறுத்த வரவும் இல்லை, அடி­வாங்கி முடிந்த பின் எங்­களின் அன்­றாட வாழ்­வா­தாரம் எப்­படிப் போகி­றது என்­பது பற்றி உங்­க­ளுக்கு கவ­லையும் இல்லை. நீங்கள் இலங்கை முஸ்­லிம்­களின் வருங்­கால சமூக, பொரு­ளா­தார, கல்வி, சமா­தான முன்­னேற்ற செயற்­பா­டு­க­ளுக்கு சரி வர­மாட்­டீர்கள் என்­பது நிறு­வப்­பட்ட உண்மை.

ஏனெனில், ஒரு தலை­மைத்­து­வத்தின் கீழ் கட்­டுப்­பட்டு வேலை செய்ய மாட்­டீர்கள். ஒன்­று­கூடி மசூரா மூல­மா­கவும் (உங்கள் பத­வி­க­ளுக்கு பிரச்­சினை வந்தால் தவிர) தீர்வு காண­மாட்­டீர்கள். இஸ்­லா­மிய அர­சியல் விழு­மி­யங்­களை பின்­பற்­ற­மாட்­டீர்கள் (உண்மை பேசுதல், வாக்­கு­று­தி­களை பாது­காத்தல், பொது மக்­களின் நிதியை மோசடி செய்­யாமல் பாது­காத்தல், ஒற்­று­மையைப் பலப்­ப­டுத்தல்)

பிற சமூ­கங்­க­ளுடன் இன நல்­லு­றவை கட்­டி­யெ­ழுப்­பவோ, அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டவோ மாட்­டீர்கள்.

உங்­களை விட பொருத்­த­மா­னவர் சமூ­கத்தை தலை­மை­தாங்க முன்­வந்தால் அவரை அங்­கீ­க­ரிக்­காமல் மட்­டந்­தட்டி தூர­மாக்­கி­வி­டு­வீர்கள்.

ஆக உங்கள் வரு­மானம், பதவி, கௌரவம், கட்சி போதை, நான் எனும் அகங்­காரம் (ஈகோ) என்­ப­வற்றை விட்­டுக்­கொ­டுக்­க­மாட்­டீர்கள்.

இப்­ப­டி­யான தலை­மைத்­துவம் முஸ்­லிம்­களை இன்னும் இன்னும் அழி­வுக்கே இட்­டுச்­செல்லும், அல்­லாஹ்வின் கோபப்­பார்­வையை அதி­க­ரிக்கும்.

சகோ­த­ரர்­களே! அபி­வி­ருத்தி அர­சியல் என்றும், ஜனா­தி­பதி மாறி­னாலும், பிர­தமர் மாறி­னாலும், ஆட்சி மாறி­னாலும் நாங்கள் எப்­போதும் மந்­தி­ரிதான் என்ற தேர்­தல்­கால விளை­யாட்டு இன்னும் மக்­க­ளிடம் செல்­லு­ப­டி­யா­குமா என்று பொறுத்­தி­ருந்து பார்ப்போம். மூன்று முறை அடி­வாங்கி நான்­கா­வது முறையும் உங்­களை நம்பி அடி­வாங்­கினால் இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தினை போல் குட்டக் குட்ட குனியும் சமூகம் எதுவும் இருக்­காது.

“சரி தம்பி எங்­கள விட்டா வேறு யார் தம்பி இருக்­காங்க என்று நீங்கள் கேட்­கலாம்” . இருக்­கி­றது. ஒரு முன்­மா­திரி இருக்­கி­றது. அதுதான் ‘‘சாய்ந்­த­ம­ருது மக்கள்” எனும் முது­கெ­லும்­புள்ள முன்­மா­தி­ரி­யான கூட்டம் தெரிவு செய்த (பள்­ளி­வா­ச­லூ­டான மசூராக் கட்­ட­மைப்பு கொண்ட) தலை­மைத்­துவம். அல்­லாஹ்வின் உத­வியால் இன்று அந்த தலை­மைத்­து­வத்தின் கீழ் உள்ள மக்கள் செய்த முன்­மா­திரி தேர்தல் வேலைத்­திட்­டங்­கலும் அதன் பின்னால் கிடைத்த வெற்­றியும் மேலும்  அண்­மையில் நடந்த தீவி­ர­வா­தி­களின் இறு­திக்­கட்ட தாக்­கு­தலை தடுத்து நிறுத்­தி­யதும் இலங்­கையில் முஸ்­லிம்­களின் இறுதி நேர மானத்­தை­யா­வது காப்­பாற்­றி­யது.

இதுபோல் ஒவ்­வொரு முஸ்லிம் கிரா­மங்­களும் மாறினால் இந்­நாட்­டுக்கே முன்­மா­தி­ரி­யா­ன­வர்­க­ளாக ஒற்­று­மை­யுடன் ஒரு தலை­மைக்கு கீழாக இந்­நாட்டில் சமா­தா­னத்­தையும், சக­வாழ்­வையும் முன்­னெ­டுக்­கக்­கூ­டிய சக்­தி­யாக எம்மை மீள் நிறுத்த முடியும். அத்­தோடு எமக்­கா­ன­தொரு புதிய அர­சியல் வர­லாற்றை மீள எழுத முடியும். அதுவே எமது இஸ்லாம் மார்க்கம் சொன்ன வழி முறை­யா­கவும் இருக்கும்.

எனவே அல்­லாஹ்வின் பெயரால் உங்­க­ளிடம் அன்­பாக கேற்­கின்றோம்… மீண்டும் எம்மை தேர்தல் காலங்களில் ஊர் ஊராக பிரிக்கவராதீர்கள், மேடைகளில் நச்சு வார்த்தைகளால் எங்களது உள்ளத்தில் பிளவை உண்டாக்காதீர்கள். எங்களுக்கு நீங்கள் சேவை செய்து களைத்தது போதும், உழைத்தது போதும்.  எங்களது வரிப்பணத்தில் ஓய்வூதியம் தருகிறோம், சற்று ஓய்வு பெற்றுச் செல்லுங்களேன்! எங்கள் பிள்ளைகளாவது நிம்மதியாக இந்நாட்டில் வாழவிடுங்களேன்!

“முஃமீன்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்” (3:200)
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.