சந்தேகத்தில் கைதானவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துக

பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமர் ஆலோசனை

0 609

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்­பான சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது கைது­செய்யப் பட்­ட­வர்­க­ளது விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்­தும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலி­ஸா­ருக்கும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் ஆலோ­சனை வழங்கி யுள்ளார். குறிப்­பிட்ட சம்­ப­வங்­களை அடுத்து தற்­போது 2400 க்கும் அதி­க­மானோர் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யை­ய­டுத்து பிர­தமர் இந்தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்ளார். அண்­மையில் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளு­ட­னான கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்­ட­போதே பிர­தமர் இந்தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்ளார். இக்கூட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சட்­டமா அதிபர் டப்­புல டி லிவேரா ஆகி­யோரின் தலை­மையில் நடை­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள மற்றும் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்பு கொண்டு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் மீதான விசா­ர­ணைகள் சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ.டி. பிரி­வி­னரால் எவ்­வித தங்­கு­த­டை­க­ளு­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அதே­வேளை, சோதனை நட­வ­டிக்­கை­ளின்­போது கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளது விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது புரா­தன ஆயு­தங்கள், பல்­வ­கை­யான ஆடைகள், சந்­தே­கத்­துக்கு இட­மான இலக்­கிய நூல்கள், புத்­த­கங்கள், கத்­திகள், வாள்கள் என்­ப­வற்­றுடன் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்தி சாட்­சிகள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள முடி­யா­விட்டால் அவர்­களை விடு­தலை செய்­யு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளது.

இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளவர்­களை தொடர்ந்தும் தடுத்து வைத்­தி­ருக்க வேண்டுமா இல்லையா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளதாக பொலிஸ் சட்ட விவகாரத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.