ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கிறார் சபாநாயகர்

0 629

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்­மையில் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்குள் இருந்து வெளிக்­காட்­டப்­படும் எதிர்ப்பை வர­வேற்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறி­யி­ருக்­கிறார்.

இலங்­கையில் ஒவ்­வொ­ரு­வரும் முதலில் தங்­களை இலங்­கையர் என்றே அடை­யா­ளப்­ப­டுத்­த­வேண்டும். அவ்­வாறு எவ­ரா­வது சிந்­திக்­க­வில்லை என்றால், அவர்கள் தீர்வின் ஒரு அங்­க­மல்ல, மாறாக பிரச்­சி­னையின் ஓர் அங்­கமே என்று ஜய­சூ­ரிய தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்ளார்.

முஸ்­லிம்கள் இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்­தாலும், உலகில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள். அதனால் எவ­ருக்கும் அஞ்­சி­வாழத் தேவை­யில்லை என்று ஹிஸ்­புல்லா கிழக்கில் கூட்­ட­மொன்றில் கூறி­யி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கத்­திற்குள் ஐக்­கி­யத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் என்ற வகையில் தன்­னா­லான சகல முயற்­சி­க­ளையும் செய்­து­வ­ரு­வ­தா­கவும் ஐக்­கி­யத்தைப் பேணு­வ­தற்கு சகல தலை­வர்­களும் தங்கள் பங்­க­ளிப்பைச் செய்­ய­வேண்­டி­யி­ருக்­கி­றது. அர­சாங்­கத்­துக்குள் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தையே எதி­ரிகள் விரும்­பு­கி­றார்கள் என்­பதால் சகல இலங்­கை­யர்­களின் நலன்­க­ளுக்­கா­கவும் தற்­போ­தைய வேறு­பா­டுகள் வெற்­றி­கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வாறு நடை­பெறும் என்று எதிர்­பார்ப்­ப­தாக ஜெய­சூ­ரிய கூறி­யி­ருக்­கிறார்.

அர­சியல் ஐக்­கி­யத்தின் மூல­மா­கவே பாது­காப்பு, பொரு­ளா­தாரம், நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­ப­டு­கின்ற சவால்­களை வெற்­றி­கொள்ள முடியும். நிறை­வேற்று அதிகாரமும் பாராளுமன்றமும் ஒன்றுக்கு மற்றது உதவியாக இருந்து செயற்படவேண்டியதே தற்போதைய தருணத்தில் அவசியமாகத் தேவைப்படுகின்றது எனறு டுவிட்டரில் சபாநாயகர் பதிவிட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.