யாருக்கு ஆதரவளிப்பது?

0 728

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்த முஸ்லிம் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது குறித்து பரி­சீ­லனை செய்து வரு­கின்­றன. நேற்று இரவு முஸ்லிம் காங்­கிரஸ் அத­னது உயர்­பீ­டத்தை கூட்டி இது குறித்து கலந்­தா­லோ­சித்­தது. அத்­துடன், அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சி மட்­டத்தில் தொடர்ந்தும் ஆலோ­சித்து வரு­கின்­றது.

மு.கா. தலைவர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் நேற்று இரவு 8 மணிக்கு பின்னர் இவ்­வாறு கட்­சியின் உயர் பீடம் கூடி­யது. இதன்­போது, தமது கட்சி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வ­ளிப்­பதா அல்­லது தொடர்ந்தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிப்­பதா என ஆரா­யப்­பட்­டது.

அத்­துடன், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி மட்­டத்தில் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் கட்சி உயர்­பீட உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் கட்­சியின் சட்­ட­வல்­லு­னர்­க­ளுடன் தீவி­ர­மாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார். இது இவ்­வா­றி­ருக்க, நேற்று முன்­தினம் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதி­யுதீன் ஆகியோர் ஐக்­கிய தேசிய முன்­னணி அலரி மாளி­கையில் நடத்­திய விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ரணில் விக்­கி­ரம சிங்­க­விற்கு தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தனர்.

ரவூப் ஹக்கீம்

இன்று அர­சியல் யாப்பு மீறல் ஒன்று நடை­பெற்­றி­ருக்­கி­றது. இதனால், அர­சியல் ரீதியில் ஸ்திரத்­தன்மை காணப்­ப­டு­வதால் நாட்டில் குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க பெரும்­பான்­மையை இழந்­து­விட்டார் என்­ப­தற்­கான நியா­ய­மான காரணங்கள் எதுவும் கூறப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிறி­தொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை பிர­த­ம­ராக வர்த்­த­மானி அறி­வித்தல் விடுத்­துள்­ளமை சட்­டத்­துக்கு முர­ணா­னது. எனவே, உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கூட்­ட­வேண்டும்.

முஸ்லிம் காங்­கிரஸ், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்தும் தனித்தும் கடந்த பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்­டது. எனவே நாம் தொடர்ந்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம்.

ரிஷாட் பதி­யுதீன்

ஐக்கிய தேசிய முன்­ன­ணியில் பங்­கா­ளிக்­கட்­சி­யாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி இருக்­கி­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­ப­வ­மா­னது எல்­லோ­ரையும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. இதை நாம் எதிர்­பார்க்­க­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் அதிக பெரும்­பான்­மையை பெற்­ற­வர்­கள்தான் பிர­தமர் பதவி வகிக்க வேண்டும். எனவே,  பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­கின்­ற­பட்­சத்தில் இதற்கான தீர்வை பெறலாம். நாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

இவ்வாறு இரு முஸ்லிம் கட்சித் தலைவரும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தநிலையில் நேற்றை தினம் கட்சி மட்டத்தில் மீளவு

Leave A Reply

Your email address will not be published.