ஐ எஸ் அமைப்பை தோற்­க­டித்தோம் ஆனால் முழு­மை­யாக அழிக்­க­வில்லை

0 841

உலகம் ஐ.எஸ். அமைப்பை தோற்­க­டித்­துள்­ளது. ஆனால் அந்தத் தீவி­ர­வாதக் குழுவை முழு­மை­யாக அழிக்­க­வில்லை என ஜோர்தான் வெளி­நாட்­ட­மைச்சர் ஜமன் சபாதி கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார்.

சிரி­யாவில் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது, இல்­லா­விட்டால் ஐ.எஸ். இனை விட மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­கா­லத்தில் முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஜோர்தான் வெளி­நாட்­ட­மைச்சர் தந்­தி­ரோ­பாயக் கல்­விக்­கான 14 சர்­வ­தேச நிறு­வக மனாமா கலந்­து­ரை­யா­டலின் நான்­கா­வது அமர்வில் ஜப்­பா­னிய வெளி­நாட்­ட­மைச்சர் தாரோ கோனோ, ஐ.எஸ் அமைப்பை தோற்­க­டிப்­ப­தற்­கான உல­க­ளா­விய கூட்­ட­மைப்பின் அமெ­ரிக்­காவின் விசேட ஜனா­தி­ப­தியின் தூதுவர் பிரீட் மேக்குர்க் ஆகி­யோ­ருடன் பங்­கு­பற்றி உரை­யாற்றும் போது இதனைத் தெரி­வித்தார்.

சமா­தா­னத்தை அடை­வ­தற்­கான ஒரே வழி ஜெனீவா சமா­தானப் பேச்­சுக்­க­ளாகும் எனவும் சபாதி தெரி­வித்­த­தோடு அச்­சு­றுத்­த­லுக்­கான உண்­மை­யான கார­ணத்தை கண்­ட­றி­வது மிக முக்­கி­ய­மா­ன­தாகும் எனவும் தெரி­வித்தார்.

மீள்­கட்­டு­மானம் மற்றும் ஸ்திர­மற்­ற­தன்மை ஆகிய இரண்­டுக்கும் இடை­யே­யான வேறு­பா­டு­களை புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஜோர்­தானைப் பொறுத்­த­வரை மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக பலஸ்­தீ­ன – -­இஸ்ரேல் பிரச்­சி­னை­யினைப் பார்ப்­ப­தோடு தொடர்ச்­சி­யாக எவ்­வாறு உத­வு­வ­தற்கும் அக­தி­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் முயன்று வரு­கின்­றது எனவும் சபாதி தெரி­வித்தார்.

Leave A Reply

Your email address will not be published.