பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையை தொடர வேண்டும்

0 698

இலங்­கை­யிலும் சர்­வ­தே­சத்­திலும் பாரிய அதிர்­வு­களை ஏற்­ப­டுத்தி வன்­மு­றை­க­ளுக்கு வித்­திட்ட (4/21) தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­கூட்­டியே பாது­காப்புத் தரப்பும் உள­வுப்­பி­ரிவும் அறிந்­தி­ருந்­தன. ஆனால் இதனைத் தடுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது. இதனால் உயிர்ச் சேதங்­க­ளுடன் கூடிய பாரிய அழி­வுகள் நடந்­தே­றி­விட்­டன.

தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிப்­ப­தற்கு ஜனா­தி­பதி விஜித் மலல்­கொட தலை­மையில் ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்தார். இதே­வேளை இது தொடர்பில் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்­றி­னையும் நிய­மித்தார்.

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் இது­வரை தேசிய உளவுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, கட்­டாய லீவில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கேம­சிறி பெர்­ணான்டோ, ஆகியோர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். மேலும் பல பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் சாட்­சி­ம­ளிக்­க­வுள்­ளனர். இது­வரை சாட்­சி­ய­ம­ளித்­துள்ளவர்­களின் வாக்கு மூலங்கள் பல்­வேறு உண்­மை­களை வெளிக்­கொ­ணர்ந்­துள்­ளன.

தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் புல­னாய்வுப் பிரிவின் எச்­ச­ரிக்கை மற்றும் தாக்­கு­தல்­களைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­காமை பற்­றிய தக­வல்கள் அதிர்ச்சிக் குரி­ய­தாக உள்­ளன. பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­திக்கு எதி­ரா­கவும் வாக்­கு­மூ­லங்கள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

இந­நி­லை­யி­லேயே தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நிறுத்­து­மாறு ஜனா­தி­பதி கோரி­யுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­மாக அமைச்­ச­ர­வையைக் கூட்டி இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ள­துடன் எச்­ச­ரிக்­கையும் விடுத்­துள்ளார்.

தெரிவுக் குழுவின் செயற்­பா­டுகள் நிறுத்­தப்­ப­டா­விட்டால் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்­களில் கைச்­சாத்­தி­டு­வ­தில்லை என அவர் எச்­ச­ரித்­துள்ளார். தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் குறித்து உயர் நீதி­மன்றில் ஐந்து வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. ரிசாத் பதி­யுதீன் உட்­பட சிலர் குறித்து குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்­த­வுள்­ளனர். எனவே தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் உடன் நிறுத்­தப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி கோரி­யுள்ளார்.

இதே­வேளை, தெரி­வுக்­கு­ழுவின் முன் புல­னாய்வு அதி­கா­ரிகள் வர­வ­ழைக்கப்பட்டு அரச புல­னாய்வுத் தக­வல்கள் ஊட­கங்கள் மூலம் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதை நான் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. பாது­காப்புத் துறை அதி­கா­ரிகள் எவ­ரையும் சாட்­சி­ய­ம­ளிக்க அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை எனவும் ஜனா­தி­பதி அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை, தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நிறுத்­தப்­ப­ட­மாட்­டாது. தொடர்ந்தும் இடம்­பெறும் என தெரி­வுக்­கு­ழுவின் தலை­வரும் பிரதி சபா­நா­ய­க­ரு­மான ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் இடம்­பெ­ற­வேண்டும் என்றும் தாக்­குதல் குறித்த உண்மை நிலை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கோரிக்கை விடுத்­துள்­ளன. இதே­வேளை, தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மூடி மறைப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற தெரிவுக் குழுவின் விசா­ர­ணை­களை இடை­நி­றுத்த முடி­யாது. சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ரு­ப­வர்­களைத் தடுத்து நிறுத்தும் அதி­காரம் எவ­ருக்கும் கிடை­யாது. தெரி­வுக்­குழு விசா­ர­ணை­க­ளுக்கு ஜனா­தி­பதி அனு­ம­திக்கா விட்டால் அவ­ருக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் வழக்கு தொட­ரலாம் என அரச தரப்­புகள் தெரி­வித்­துள்­ளன.

நேற்று முன்­தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வுக்­குழு விவ­காரம் தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார். அந்த அறிக்­கையில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் அதி­கா­ரி­க­ளுக்கு ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்டால் குழுவின் முன்­னி­லையில் அந்த அதி­கா­ரிகள் ஆஜ­ராக வேண்டும். இல்­லையேல் அவர்­க­ளுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்­தினால் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யேற்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதிய தாக்­கு­த­லை­ய­டுத்து நாடு பெரும் நெருக்­க­டி­களைச் சந்­தித்து வரு­கி­றது. பொரு­ளா­தாரம் பெரிதும் பாதிப்­ப­டைந்­துள்­ளது. உல்­லாசப் பய­ணத்­துறை வீழ்ச்சி கண்­டுள்­ளது. மக்­களின் சக­வாழ்வு பாதிப்­ப­டைந்­துள்­ளது. இனங்­க­ளுக்கு இடையில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தாக்­குதல் தொடர்பில் உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு உண்­மையைக் கண்­ட­றிந்­தாலே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்பெறாமலிருப்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும்.

21 ஆம் திகதி தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த பாதுகாப்புப் பிரிவினர் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறினார்கள்? என்ற விபரங்கள் கண்டறியப்படவேண்டும். எனவே ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாட்டினை நிறுத்துவதற்கு முயற்சிப்பதை விடுத்து நாட்டின் தலைவர் என்ற வகையில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.