கெக்கிராவையில் தௌஹீத் பள்ளியின் முகப்பு அகற்றம்

0 663

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த தௌஹீத் அமைப்­பி­னரின் சிறிய பள்­ளி­வாசல் ஒன்றின் முகப்­பினை பிர­தேச முஸ்லிம் மக்கள் பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­சலின் ஒத்­து­ழைப்­புடன் உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

மடாட்­டு­கம பகு­தியில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் முரண்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருந்த நிலை­யிலே அதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே பள்­ளி­வா­சலின் முகப்பு உடைத்து அகற்­றப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நூல­க­மொன்­றாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டமே பள்­ளி­வா­ச­லாக மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நாட்டில் தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் மேல­தி­க­மாக தௌஹீத் பள்­ளி­வாசல் ஒன்று அவ­சி­ய­மற்­றது என்­பதால் பெரிய பள்­ளி­வாசல் செயற்­குழு அதனை உடைக்கத் தீர்­மா­னித்­தது என பெரிய பள்­ளி­வா­சலின் தலைவர் எம்.எச்.எம்.அக்பர் கான் தெரி­வித்தார்.

கெக்­கி­ராவ பொலிஸ் நிலை­யத்தில் பள்­ளி­வா­சலை உடைப்­பது தொடர்பில் அறி­விப்புச் செய்­த­பின்பே பள்­ளி­வா­சலின் முகப்­பினை அகற்­றி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த தௌஹீத் பள்­ளி­வா­ச­லுக்கு பெயர் சூட்­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதில் தௌஹீத் ஜமா­அத்­தி­னரே தொழுகை நடாத்தி வந்­த­தாக மடாட்­டு­க­மையைச் சேர்ந்த எம்.அமீன் தெரி­வித்தார்.

தௌஹீத் ஜமா­அத்தார் கார­ண­மாக பிர­தே­சத்தில் வாழும் பெரும்­பான்மை இனத்­த­வ­ரு­ட­னான உற­வுக்குப் பங்கம் ஏற்­ப­டலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்தப் பள்ளிவாசல் இரு நபர்களுக்கு வசிப்பதற்குரிய இடமாக ஊர்மக்களால் வழங்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.