நாத்தாண்டி வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 31 பேருக்கு பிணை

மினுவாங்கொடையில் 15 பேரும் விடுவிப்பு

0 586

கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாத்­தாண்­டிய, – கொட்­டா­ர­முல்லை பகு­தியில் கடந்த 13  ஆம் திகதி முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 31 பேர் நேற்று பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

மார­வில நீதிவான் நீதி­மன்றில் அவர்கள் ஆஜர் செய்­யப்­பட்ட போதே,  தலா 50 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­களில் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இதற்­கான உத்­த­ரவை மார­வில நீதிவான் சிரி­மெவன் மகேந்ர ராஜா பிறப்­பித்­துள்ளார்.

நேற்­றைய தினம் முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்தே இந்தப் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே மினு­வாங்­கொடை வன்­மு­றைகள் தொடர்­பிலும் கைதாகி விளக்­க­ம­றி­யலில் இருந்த 15 சந்­தேக நபர்­களும் நேற்று பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். தலா 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கான உத்­த­ரவை மினு­வாங்­கொடை நீதிவான் கேசர சம­ர­தி­வா­கர பிறப்­பித்­துள்ளார். இத­னை­விட இவர்களுடன் கைதான மேலும் நான்கு பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப் பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.