அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பு

விசாரணைகள் மூலம் அம்பலம் என்கிறார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

0 735

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நாட்டின் அமை­தியை சீர்­கு­லைக்க சில அர­சி­யல்­வா­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­துக்கு முகங்­கொ­டுக்கத் தேவை­யான சட்ட திட்­டங்­களை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது என அரச நிர்­வாக மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மத்­தும பண்டார தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்று ஒரு­மாத காலம் நிறை­வ­டைந்த நிலையில், நாட்டின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது­செய்யும் நட­வ­டிக்­கையில் பாது­காப்பு பிரி­வினர் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­றனர். இதனால் தற்­போது நாட்டின் அன்­றாட செயற்­பா­டுகள் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ளன. பாட­சா­லைகள் வழ­மை­போன்று இடம்­பெற்று வரு­கின்­றன.

என்­றாலும், ஒரு­சில அர­சி­யல்­வா­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் நாட்டின் அமை­தியை சீர்­கு­லைக்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். பது­ர­லி­யவில் பாட­சாலை ஒன்றில் கைக்­குண்­டு­களை மறைத்­து­வைத்த சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற விசா­ர­ணையில் அதனை யார் செய்தார் என்­பது தற்­போது வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் குரு­நாகல் மற்றும் மினு­வாங்­கொடை பிர­தே­சங்­களில் கடந்த 13ஆம் திகதி இடம்­பெற்ற சம்­ப­வ­மா­னது, மோட்டார் சைக்­கிள்­களில் வந்­த­வர்­களே இதனை மேற்­கொண்­டுள்­ளனர் என்­பது தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனால் சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­ய­வேண்டாம் என்று இவர்­களை கேட்­டுக்­கொள்­கின்றோம். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு அர­சாங்­கத்தை வீழ்த்­தவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர்.

மேலும் பயங்­க­ர­வா­தத்­துக்கு முகம்­கொ­டுக்கத் தேவை­யான சட்ட திட்­டங்­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். குறிப்­பாக மத்­ர­ஸாக்கள் மற்றும் அர­புக்­கல்­லூ­ரி­களை கல்வி அமைச்சின் கீழ்­கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். அதே­போன்று பெயர்ப்­ப­ல­கைகள் மூன்று மொழி­களில் மாத்­தி­ரமே இடம்­பெ­ற­வேண்டும் என்றும் அரபு மொழியில் அமைந்­தி­ருக்கும் பெயர்­ப­ல­கை­களை அகற்­று­மாறும் தெரி­வித்­தி­ருக்­கின்றோம்.

அத்­துடன் ஆடை தொடர்­பா­கவும் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். குறிப்­பாக ஆள் ஒரு­வரின் அடை­யாளம் தெரி­யா­த­வ­கையில் முகத்தை மறைத்து அணியும் புர்கா போன்ற ஆடை­க­ளுக்கு தடை விதித்­தி­ருக்­கின்றோம். இது­தொ­டர்­பான ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முஸ்லிம் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியே  எடுத்திருக்கின்றோம். முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றனர். அவர்களையும் ஏனைய நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையிலே இவ்வாறான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.