உலமா சபை அறி­விக்கும் தினத்­தி­லேயே பெருநாள் திடல் தொழு­கைக்கு அனு­மதி

காத்தான்குடி நகரசபை ஜம்மிய்யதுல் உலமா சம்மேளனம் தீர்மானம்

0 617

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை­யினால் நோன்பு பெருநாள் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் தினத்தில், காத்­தான்­குடி கடற்­க­ரையில் ஒரு தரப்­புக்கு மாத்­திரம் பெருநாள் திடல் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தென காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரி­வித்தார்.

எதிர்­வரும் நோன்புப் பெருநாள் தொழுகையை காத்­தான்­குடி கடற்­க­ரையில் நடாத்­து­வது தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று காத்­தான்­குடி நக­ர­சபை மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்­றது.

காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.ஹாறூன், செய­லாளர் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன செய­லாளர் மௌலவி எம்.எஸ்.றமீஸ் ஜமாலி உட்­பட காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி நகர சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது காத்­தான்­கு­டியில் எதிர்­வரும் நோன்புப் பெருநாள் தொழுகை காத்­தான்­குடி கடற்­க­ரையில் நடாத்­து­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு ஆலோ­சனை செய்­யப்­பட்­டது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யினால் நோன்புப் பெருநாள் தினம் பற்றி அறி­விக்கும் தினத்தில் காத்­தான்­குடி கடற்­க­ரையில் ஒரு தரப்­புக்கு மாத்­திரம் பெருநாள் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தென இக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை, காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம், காத்­தான்­குடி நக­ர­சபை என்­பன இணைந்து இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எஸ்.அஸ்பர் தெரி­வித்தார். அத்­துடன் இத்­தீர்­மா­னத்தை மீறி வேறு இடங்களில் பிறிதாக தொழுகை நடாத்த முற்படுவோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டா தெனவும் இதற்கு கட்டுப்படாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

VIDIVELLI

Leave A Reply

Your email address will not be published.