பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள உண்மை நிலைமை என்ன?

0 786

குருநாகல் -– அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 4/21 தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி

சஹ்ரான் ஹாஷி­முடன் நெருங்­கிய தொடர்பை பேணி­ய­தாகக் கூறப்­பட்டு கைது செய்­யப்­பட்­டுள்ள தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்­கி­யஸ்தர் என கூறப்­பட்ட பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்­பா­ளரின் கைது குறித்து உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்­துள்­ளது.
கண்டி – அல­வத்­து­கொட, மாவத்­து­பொல இலக்கம் 60 எனும் முக­வ­ரியைக் கொண்ட 42 வய­தான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் குறித்த மொழி பெயர்ப்­பா­ளரைக் கைது செய்­யும்­போது குரு­நாகல் பொலிஸார் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் அதன் பின்னர் உள­வுத்­துறை வெளிப்­ப­டுத்­திக் கொண்டுள்ள தக­வல்­களை மையப்­ப­டுத்தி இந்தக் கேள்வி எழுந்­துள்­ளது. இந்­நி­லை­யி­லேயே பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்­க­மைய குறித்த கைது மற்றும் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களின் உண்மை நிலையை உறு­தி­செய்ய குறித்த மொழி­பெ­யர்ப்­பாளர் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் சி.ரி.ஐ.டி. என­ப்படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்கப்­பட்­டுள்ள குறித்த மொழி பெயர்ப்­பா­ள­ரிடம் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் வருண ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்­க­மைய மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

‘வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபே­சிரி குண­வர்­த­ன­வுக்கு கிடைத்த தகவல் விசா­ர­ணை­க­ளுக்­காக குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிறி ஜய­லத்­துக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது. அவர் குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மஹிந்த திஸா­நா­யக்­க­வுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பை ஒப்­ப­டைத்­த­துடன் குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் பிரி­யலால் தலை­மை­யி­லான குழு­வி­னரால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதா­வது குரு­நாகல் -அல­கொ­ல­தெ­னிய பகு­தியில் தென்­னந்­தோப்பு ஒன்றில் பயிற்சி முகாம் ஒன்று செயற்­ப­டு­வ­தா­கவே அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதன்­படி விசா­ர­ணை­களை ஆரம்­பித்த குரு­நாகல் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்­தனர். அதில் அந்த தென்­னந்­தோப்பின் உரி­மை­யா­ளரும் உள்­ள­டங்­கு­கின்றார். ஏனைய இரு­வரில் ஒருவர் பயிற்சி முகாமின் இணைப்­பா­ள­ராக செயற்­பட்­டவர். அவர் தல்­கஸ்­பிட்டி, அம்­ப­கொட்ட பகு­தியைச் சேர்ந்­தவர். மற்­றை­யவர் அந்த முகாமில் வள­வா­ள­ராக செயற்­பட்­டவர். அவர் திஹாரி பகு­தியைச் சேர்ந்­தவர். இவர்கள் மூவரும் கடந்த 9 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் விசா­ர­ணை­களின் பின்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்டு எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் அந்த பயிற்சி முகாம் தொடர்பில் தொடர் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. அந்த விசா­ர­ணை­களில் மேலும் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் ஒருவர் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் ஊழியர். அவரும் தல்­கஸ்­பிட்டி, அம்­ப­கொட்டே பகு­தியைச் சேர்ந்­தவர். மற்­றை­யவர் ஹாலி­எல, பகு­தியைச் சேர்ந்­தவர். அவ­ரி­ட­மி­ருந்து பல பெறு­ம­திகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த காசோ­லைகள் கைப்­பற்­றப்­பட்­டன.

அவ்­வி­ரு­வரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களில் குரு­நாகல் வைத்­தி­ய­சாலை ஊழி­யரின் வங்­கிக்­க­ணக்­குக்கு பல்­வேறு நபர்கள் அனுப்பி வைத்­துள்ள பெரும் தொகை பணம் தொடர்பில் தீவிர அவ­தானம் செலுத்­தப்­பட்­டி­ருந்­த­தென ஏற்­க­னவே பொலிஸார் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே அவர்­க­ளுடன் தொடர்­பி­லி­ருந்த பாரா­ளு­மன்ற மொழி பெயர்ப்­பா­ளரும் கைது செய்­யப்­பட்டார். இந்த கைதின் பின்னர் உள­வுத்­துறை இது குறித்து விஷேட அவ­தானம் செலுத்தி விசா­ரித்­துள்­ளது. அதன்­படி, உள­வுத்­துறை முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அல­கொ­ல­தெ­னிய தென்­னந்­தோப்பு பயிற்சி முகாமில் பயங்­க­ர­வாத பயிற்­சி­க­ளின்றி தலை­மைத்­துவ பயிற்­சி­களே முன்­னெடுக் கப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகாக்கள் பலர் சி.ஐ.டி. பிடி­யி­லுள்ள நிலையில், அவர்­க­ளிடம் விசா­ரித்த போதிலும், குரு­நாகல் – அல­கொ­ல­தெ­னி­யவில் பயிற்சி முகா­மொன்று இருந்­த­தாகத் தெரி­ய­வ­ர­வில்லை.

இந் நிலை­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள உள­வுத்­து­றையின் மேல­திக தேடல்­களில், பாரா­ளு­மன்ற மொழி பெயர்ப்­பாளர் உள்­ளிட்­ட­வர்­களால் நடாத்­தப்பட்ட தக்வா மன்றம் எனும் அமைப்பு தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த அமைப்பு பதிவு செய்­யப்­பட்­டி­ராத போதும், ஆரம்­பத்தில் ஏழை மாண­வர்­களின் கல்­விக்­காக மேல­திக வகுப்பு ஆசி­ரி­யர்கள் சிலரால் இந்த அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்டுள்ளமையும், பின்னர் வித­வைகள், ஏழை­க­ளுக்கு உதவும் திட்­டங்­களை செயற்­ப­டுத்­தி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.
இந்த அமைப்பில் பாரா­ளு­மன்றில் சேவைக்கு சேர முன்­ன­ரேயே கைதான மொழி பெயர்ப்­பாளர் உறுப்­பி­ன­ராக இருந்­துள்­ள­மையும், தற்­போது அதன் த­லை­வ­ராக ஏ.எஸ். நிலாம்தீன் எனும் ஓய்­வு­பெற்ற ஆங்­கில ஆசி­ரியர் செயற்­ப­டு­வதும் தெரிய வந்­துள்­ளது. அந்த அமைப்­புக்கு, இலங்கை வங்கி, சம்பத் வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி, தேசிய சேமிப்பு வங்­கி­களில் உள்ள கணக்­குகள் ஊடாக பணம் கிடைப்­பதும் அவை உள்­ளூ­ரி­லுள்ள தன­வந்­தர்­க­ளினால் கிடைக்கப் பெற்­றுள்­ள­மையும், அதில் பெரும்­பா­லோனோர் அவ்­வ­மைப்பின் பழைய மாண­வர்கள் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில் சந்­தேக நபர் ராஜகிரியவில் தங்கிருந்த வீடு கூட, அந்த அமைப்புக்காக நேஷன் ட்ரஸ்ட் வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடிப்­ப­டையில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட குரு­நாகல் வைத்­தி­ய­சாலை ஊழி­யரும் அந்த அமைப்பில் உள்­ள­மையும் அவர்­க­ளி­ட­மி­ருந்து மீட்கப்பட்ட காசோலைகள் கூட அந்த தக்வா மன்றம் என்ற அமைப்புடன் தொடர்புபட்டது எனவும் உளவுத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

VIDIVELLI

Leave A Reply

Your email address will not be published.