கல்வியமைச்சின் கீழ்வரும் அரபுக் கல்லூரிகள்

0 794

எமது நாட்டில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரிகள் ஒன்­றரை நூற்­றாண்­டுக்கும் மேற்­பட்ட வர­லாற்­றினைக் கொண்­ட­தாகும். இக்­கல்­லூ­ரிகள் இது­வ­ரை­காலம் தனித் தனி­யான நிர்­வா­கங்­களின் கீழ் இயங்­கி­வ­ரு­கின்­றன. இவற்றின் பாடத்­திட்­டத்­திலும் சில வேறு­பா­டு­களைக்  காண­மு­டி­கி­றது.

இது­வரை காலம் சுதந்­தி­ர­மாக இயங்­கி­வந்த  அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு ஏப்ரல் 21 ஆம் திக­திய தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சவால்கள் கிளம்­பி­யுள்­ளன. அர­புக்­கல்­லூ­ரிகள் சில­வற்றில் தீவி­ர­வாதக் கொள்­கைகள் போதிக்­கப்­ப­டு­கின்­றன என்ற சந்­தேகம் மாற்று இனத்­தவர் மத்­தியில் வலுப்­பெற்­றுள்­ளது. இத­னா­லேயே பிர­தமர் ரணில விக்­கி­ர­ம­சிங்க அரபுக் கல்­லூ­ரிகள் விட­யத்தில் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்தார். ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­களை யடுத்து அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் தவ­றான கருத்­துகள் பரப்­பப்­பட்­டதால் அவற்றை சட்ட ரீதி­யான ஒரு கட்­ட­மைப்­புக்குள் ஒன்­றி­ணைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமை வேண்டிக் கொண்டார்.

அர­புக்­கல்­லூ­ரி­களை ஒரு கட்­டுப்­பாட்டின் கீழ் சட்ட ரீதி­யாக அவ­ச­ர­மாக ஒருங்­கி­ணைக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பிர­தமர் அமைச்சர் ஹலீ­மிடம் விளக்­கினார். இத­னை­ய­டுத்து அவர் விரைந்து செயற்­பட்டார். இதற்­கான சட்ட மூலத்தைத் தயா­ரிப்­ப­தற்கு குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் மேல­திக பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் மற்றும் உல­மாக்­களும், புத்­தி­ஜீ­வி­களும் அடங்­கி­யி­ருந்­தனர். சட்ட வரைபு தயா­ரிக்­கப்­பட்டு கடந்த 6 ஆம் திகதி பிர­த­ம­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அரபுக் கல்­லூ­ரி­களை சட்ட வரை­ய­றைக்குள் உட்­ப­டுத்­து­வ­தற்­கான சட்ட மூல வரைபு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடை­பெற்று ஒரு மாதத்தில் அதா­வது மே 21  ஆம் திகதி நேற்று அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மாகச் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­கா­ரமும் பெற்றுக்  கொள்­ளப்­பட்­டுள்­ளது. அர­புக்­கல்­லூ­ரி­களின் கல்வி நட­வ­டிக்­கை­களை கல்வி அமைச்சின்  கீழ் கொண்டு வரு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் தெரி­வித்தார். முஸ்லிம் அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அலரி மாளி­கையில் சந்­தித்து அவர்­களின் ஆலோ­ச­னை­களின் பேரிலும் பூரண சம்­மதத்­து­டனும் இத்­தீர்­மானம் மேற்­கொள்ளப் பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். அர­புக்­கல்­லூ­ரிகள் விட­யத்தில் சில வேலைத் திட்­டங்­களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­புக்­கல்­லூ­ரிகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்­கு­வதை முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆத­ரித்­துள்­ளார்கள். அர­புக்­கல்­லூ­ரிகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்­கி­னாலும் அவற்றின் பாடத்­திட்­டங்கள் எவ்­வாறு வடி­வ­மைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதைத் தீர்­மா­னிக்கும் அதி­காரம் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளி­டமே வழங்­கப்­ப­ட­வேண்டும்.

நல்­லொ­ழுக்­கமும் பண்­பாடும் கொண்ட ஒரு தலை­மு­றையை உரு­வாக்­கு­வதே அரபுக் கல்­லூ­ரி­களின் கடப்­பா­டாகும். அதனை இலக்­காகக் கொண்டே அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்­கி­வ­ரு­கின்­றன என்­ப­தனை நாம் குறிப்­பிட்­டாக வேண்டும். இன்று நாட்டில் 317 அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்கி வரு­கின்­றன. இவற்­றி­லி­ருந்து வரு­டாந்தம் சுமார் 6000 க்கும் மேற்­பட்ட உல­மாக்கள் உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள். இவர்­களில் சுமார் 5 வீத­மா­னோரே அரச தனியார் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு பெற்­றுக்­கொள்­கி­றார்கள். 10 வீத­மானோர் வெளி­நா­டு­களில் வேலை­வாய்ப்பு பெற்­றுக்­கொள்­கி­றார்கள். 5 வீத­மானோர் பள்­ளி­வா­சல்­களில் பணி­பு­ரி­வ­தாக தர­வுகள் தெரி­விக்­கின்­றன. எஞ்­சிய 80 வீத­மானோர் தொழில் சந்­தையில் சிக்கிக் கொள்­கி­றார்கள்.

அர­புக்­கல்­லூ­ரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­டு­வதால் இந்­நி­லையில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். அர­புக்­கல்­லூ­ரி­களின் கட்­ட­மைப்பில் பாரிய மாற்­றங்கள் நிக­ழலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கு அமைச்சர் ஹலீம் ஏற்­க­னவே எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். அநேக அர­புக்­கல்­லூ­ரிகள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­யு­தவி பெற்­றுக்­கொள்­வ­தா­கவும் அந்­நிதி எவ்­வாறு செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது என அறிய முடி­யா­துள்­ள­தெ­னவும் கூறி­யி­ருந்தார். அனைத்து அரபுக்கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அமைச்சரின் கருத்துக்கு சமூகத்திலிருந்து பலத்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

அரபுக்கல்லூரிகள் விடயத்தில் சில வேலைத்திட்டங்களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தனியான பிரிவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் செயற்படுமாக இருந்தால் வரவேற்கத்தக்கதாக அமையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.