கைதாகும் முஸ்லிம்கள் தொடர்பாக தீர்வு காண மேலுமொரு பொலிஸ் அதிகாரி நியமனம்

0 567

தற்­போ­தைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­ப­டும்­போது ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்­வு­களை சம்­பந்­த­பட்­ட­வர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக மேலு­மொரு பொலிஸ் உயர் அதி­காரி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கென அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி விக்­ர­ம­சிங்க பதில் பொலிஸ் மா அதி­ப­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இதற்­கென அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வினால், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் இணைப்பு அதி­கா­ரி­க­ளாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களைச் சேர்ந்த 8 பேர் பதில் பொலிஸ் மா அதி­ப­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாட்டின் எப்­ப­கு­தி­யிலும் சந்­தே­கத்தின் பேரில் முஸ்­லிம்கள் கைது செய்­யப்­படும் போது பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் எம்.ஏ.எம். அர்ஷாத் மௌல­வியைத் தொடர்­பு­கொண்டு அவர் ஊடாக தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­மு­டியும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தக­வல்கள் அர்ஷாத் மௌவிக்குத் தெரி­விக்­கப்­பட்டால் அவை அதி­காரம் வழங்கப் பட்­டுள்ள பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்டு அவர்கள் ஊடாக பிரச்­சினை ஏற்­பட்­டுள்ள பொலிஸ் நிலை­யத்­துடன் தொடர்­புகள் மேற்­கொள்­ளப்­பட்டு ஆராய்ந்த பின்பு உட­னடித் தீர்­வுகள் வழங்­கப்­படும்.

பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பற்ற வாள்கள், கூரிய ஆயு­தங்கள் மற்றும் அரபு மொழி­யி­லான சஞ்­சி­கைகள் என்­பன கைப்­பற்­றப்­ப­டும்­போது மேற்­கொள்­ளப்­படும் கைது­க­ளின்­போது உரு­வாகும் பிரச்­சி­னைகள் உட­னுக்­குடன் தீர்த்து வைக்­கப்­படும்.

அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி விக்ரமசிங்கவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரது செயலகத்தில் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.