பயங்­க­ர­வாத பூதம் முஸ்­லிம்­களை அழித்­து­விட்டே முடி­வுக்கு வரும்

இந்த சூழல் உரு­வாக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகளே காரணம் என்­கிறார் அனுர

0 555

நாட்டில் பயங்­க­ர­வா­த­மொன்று தலை­தூக்க இந்த அர­சாங்­கமே கார­ண­மாகும்.அத்­துடன், பயங்­க­ர­வாத சூழலை அமைத்துக் கொடுத்­தது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே.  இப்­போது இது கிறிஸ்­த­வர்­களை இலக்கு வைத்து ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால்  இறு­தியில்  இந்த பூதம் முஸ்­லி­க­ளையும் அழித்­து­விட்டே முடி­வுக்கு வரும் என்­பதை மறந்­து­விட வேண்டாம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக சபையில் தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி, பிர­த­மரின் தனிப்­பட்ட அர­சியல் போட்­டியில் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்­தி­விட்­டார்கள். முதலில் இவர்கள் தமது தனிப்­பட்ட அர­சியல் விளை­யாட்டை கைவிட்டு ஜனா­தி­ப­தியும் -பிர­த­மரும் ஒன்­றி­ணைய வேண்டும், அர­சாங்­க­மாகப் பய­ணிக்கத் தயா­ராக வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று 21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இந்தக் குற்றம் தடுக்க முடி­யாது போன­தற்கு அர­சியல் போட்­டியே கார­ண­மாகும்.  ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பிர­தமர் நாற்­கா­லியை தக்­க­வைக்­கவும், அடுத்­த­தாக தான் ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர வேண்டும் என்ற அவா­வு­டனும், ஜனா­தி­பதி, மீண்டும் தான் ஜனா­தி­பதி ஆச­னத்தில் அம­ர­வேண்டும் என்ற ஆசை­யிலும் தேசிய பாது­காப்பை கவ­னத்தில் கொள்­ளாது அர­சியல் கார­ணி­களை தேடவே புல­னாய்­வுத்­துறை பயன்­ப­டுத்­தப்­பட்­டது. கோத்­தா­பய, பசில் என்ன செய்­கின்­றார்கள்  என்­பதை தேடவே புல­னாய்வு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த அர­சியல் மோதலின் விளை­வா­கவே கடந்த 21 ஆம் திகதி நாட்டில் பயங்­க­ர­வாதம் வெடித்­தது. இது­கு­றித்து பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் இந்த சபையில் பொறுப்­புக்­கூ­றி­யாக வேண்டும். இந்தக் கார­ணி­களை கைவிட்டு செல்ல முடி­யாது. இந்த தாக்­குதல் இர­க­சிய தாக்­குதல் அல்ல. கடந்த காலங்­களில் அள­வுக்கு அதி­க­மாக இந்த தாக்­குதல் குறித்து பேசப்­பட்டு இயக்­க­மாக செயற்­பட்­ட­போதே அதனை தடுக்க முடி­யாது நடக்­க­விட்டு இந்த ஆட்­சி­யா­ளர்கள் வேடிக்கை பார்த்­தனர் .

அதேபோல் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முஸ்லிம் மக்கள் குறித்து கவ­னிக்­காது வியா­பாரம் மட்­டுமே செய்­தீர்கள். முஸ்லிம் வாக்­கு­களை கொண்டு அர­சியல் வியா­பாரம் செய்­தீர்கள். ஒவ்­வொரு முஸ்லிம் அமைச்­சரும் மக்­க­ளுக்­காக அர­சியல் செய்­ய­வில்லை. இந்த அர­சி­யல்­வா­திகள் ஒரு­போதும் தற்­கொலை செய்­யப்­போ­வ­தில்லை ஏனெனில் இவர்­களின் வாழ்க்கை வேறு. இவர்­க­ளுக்கு உள்ள சலு­கைகள் எவற்­றையும் கைவிட முடி­யாது. ஆக­வேதான் இந்த  பூதத்தை சாடியில் இருந்து வெளியில் எடுத்­தது முஸ்லிம் அமைச்­சர்­களே. அமைச்­சர்கள் நேர­டி­யாக குண்­டுத்­தாக்­கு­தலை செய்­யாது போனாலும் கூட அதற்­கான சூழலை அமைத்­துக்­கொ­டுத்­தது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே.  இப்­போது இது கிறிஸ்­த­வர்­களை இலக்கு வைத்து ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால்  இறு­தியில்  இந்தப் பூதம் முஸ்­லி­க­ளையும் அழித்­து­விட்டே முடி­வுக்கு வரும். இந்தப் பூதத்தை உரு­வாக்­கிய நீங்­களே இறு­தியில் அதற்கு இலக்­கா­வீர்கள் என்­பதை மறந்­து­விட வேண்டாம்.

தமிழர் தரப்பை நிரா­க­ரித்து அவர்­களை இந்தப் பாரா­ளு­மன்­றத்தில் இருந்து வெளி­யேற்­றி­யதன் விளைவு இறு­தியில் விடு­தலைப் புலி­களில் வந்து முடிந்­தது. அதே தவறை  இப்­போதும் நாம் செய்ய வேண்­டுமா? இப்­போது முஸ்லிம் சமூ­கத்தை அவ்­வாறு வழி­ந­டத்த வேண்­டுமா. இதனை தடுக்க வேண்­டி­யது முஸ்லிம் தலை­வர்கள் மூல­மா­கவே. அதேபோல் முஸ்லிம் சமூகம் இதற்கு இட­ம­ளிக்க வேண்டாம். முஸ்லிம் சமூ­கத்­தில்தான் இந்த அடிப்­ப­டை­வாத குழுக்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. இதனை வளர்ப்­பதா அழிப்­பதா என்­பதை முஸ்லிம் மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இந்தக் குற்­றங்­களை தடுக்க வேறு சமூ­கத்தால் முடி­யாது. முஸ்லிம் சமூ­கமே இதனை நீக்க வேண்டும். ஆகவே நீங்­களே இதற்கு தீர்வை கூறுங்கள்.

அதேபோல் பொது சமூ­க­மாக நாம் அனை­வரும் என்ன செய்ய வேண்டும். இன்று எது­வுமே நியா­ய­மான செயற்­பா­டுகள் அல்ல. ஒரு­புறம் சிங்­கள இன­வாதம், இன்­னொரு புறம் தமிழ் இன­வாதம், இன்­னொரு புறம் முஸ்லிம் இன­வாதம் தான் அர­சி­யலை கொண்டு செல்­கின்­றது. ஒரு இன­வா­தத்தை இன்­னொரு இன­வா­தத்தால் அழிக்க முடி­யாது. ஆனால் சிலர் இந்த கார­ணி­களை வைத்­துக்­கொண்டு மகிழ்ச்­சி­க­ர­மான அர­சி­யலை செய்­கின்­றனர். அதற்கு இன­வா­தத்தை கையில் எடுக்­கின்­றனர். இன­வா­தமும் அடிப்­ப­டை­வா­தமும் இன்­னொரு இன­வா­தத்தை பலப்­ப­டுத்தும். அது அழி­வினை உரு­வாக்கும். இந்த நேரத்தில் மிகவும் கடி­ன­மான அர­சியல் என்­ன­வென்றால் ஜன­நா­யக அர­சியல். அதனை செய்­யவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். அர­சியல் செய்ய எவ்­வ­ளவோ கார­ணிகள் உள்­ளன. அதனை விடுத்து இன­வா­தத்தை அர­சி­ய­லாக்க வேண்டாம். இப்­போது இதனை கைவிட்டு தேசிய ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

ஜனா­தி­ப­திக்கு எதி­ராக சபை முதல்வர் கடிதம் எழு­து­கின்றார், பிர­தமர் ஒரு­வரை குற்றம் சுமத்­து­கின்றார், ஜனா­தி­பதி வேறு ஒருவர் மீது குற்றம் சுமத்­து­கின்றார். அர­சாங்­கமே அடித்­துக்­கொண்டால் மக்கள் மீதான பாது­காப்பை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்த முடியும். முதலில்  பிர­தமர், ஜனா­தி­பதி இரு­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். உங்­களின் கற்­பனை ஜனா­தி­பதி கன­வுகள் அனைத்­தையும் ஒரு ஓர­மாக வைத்­து­விட்டு முதலில் இரண்டு தலை­வர்­களும் மீண்டும் ஓரி­டத்­துக்கு வர­வேண்டும். தேசிய ஒற்­றுமை, சமா­தானம் என்­ப­வற்றை கருத்­திற்­கொண்டு மீண்டும் ஓரி­டத்­திற்கு வர­வேண்டும். அதுதான் தலை­மைத்­துவ பண்பு. ஜனா­தி­பதி தனது கடமை பொறுப்­புக்­களை தெரிந்­து­கொள்ள வேண்டும். பிர­த­மரும் அதையே செய்ய வேண்டும். இவர்கள் இதற்குத் தகு­தி­யா­ன­வர்­களா என்­பதை நீங்­களே கேட்­டுக்­கொள்ள வேண்டும். உங்­களின் தனிப்­பட்ட அர­சியல் நிலைப்­பாட்டை கைவிட்டு பொது­மக்கள் குறித்து கருத்­திற்­கொண்டு தேசிய பாது­காப்பு மற்றும் நாட்டின் இறை­யாண்­மையை கட்­டி­யெ­ழுப்ப ஒன்­றி­ணைய வேண்டும்.

அத்­துடன் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை இல்­லா­ம­லாக்க வேண்டும். இதனை தோற்­க­டிக்க அர­சாங்கம் முயற்சிக்க வேண்டும். பாடசாலை கல்வி  முறைமையில் இருந்து இது குறித்து கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் இதனால் இன்னொரு இனவாதத்தை வளர்த்துவிடவும் வேண்டாம். சகல மக்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அதற்கும் அரசாங்கம் தயாரில்லை என்பது தெரிகின்றது. இந்த அரசாங்கம் தூரநோக்குடன் இன்னமும் செயற்படவில்லை. சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். பொறுப்புள்ள அமைச்சர்கள் என்ற வகையில் இவர்கள் செயற்படவில்லை. விளையாட்டு வீடுகளுக்கான அரசாங்கமே இந்த அரசாங்கம். ஆகவே இப்போதாவது உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.