பயங்­க­ர­வா­திகள் பிடிக்­கப்­பட்­டாலும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் முடி­ய­வில்லை

பயங்­கர­வா­திகள் சிரி­யாவில் பயிற்சி பெற்­றுள்­ளனர் என்­கிறார் பிர­தமர்

0 487

புனித உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பல உண்­மைகள் விசா­ர­ணை­களில் வெளி­வந்­துள்­ளன. இந்தப் பயங்­க­ரவா­திகள் சிரியா சென்று ஆயு­தப்­ப­யிற்சி பெற்­றுள்­ள­துடன் இவர்­க­ளுடன் நெருக்­க­மான நபர்­களை கைது­செய்யும் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் இவர்­க­ளுக்கு எந்தப் பாகு­பாடும் பார்க்­காது தண்­டனை வழங்­கப்­ப­டு­மெனப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார். இலங்­கை­யி­லுள்ள பயங்­க­ர­வா­திகள் பிடிக்­கப்­பட்­டாலும் இந்தப் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் முடி­ய­வில்லை. வேறு எந்த வழி­யிலும் மீண்டும் வரலாம் எனவும் பிர­தமர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  செவ்­வாய்க்­கி­ழமை விசேட அறி­விப்பு ஒன்­றினை விடுத்­த­போதே பிர­தமர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற துர­திஷ்­ட­வ­ச­மான சம­்ப­வத்தில் கொல்­லப்­பட்ட மற்றும் பாதிக்­கப்­பட்ட சக­ல­ருக்கும் நஷ்­ட­ஈடு வழங்கும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல் இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை நடத்­திய குற்­றத்தில் கைது­செய்­யப்­பட்­டுள்ள குற்­ற­வா­ளிகள் அனை­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க அர­சாங்­க­மாக செயற்­பட்டு வரு­கின்றோம். பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளிடம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்தப் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் நெருக்­க­மாக செயற்­பட்டு தாக்­கு­த­லுக்கு துணை­போன நபர்­களை தேடும் பணியே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவர்­களை கைது­செய்து எந்­த­வித பாகு­பாடும் இல்­லாது சட்­டத்தின் மூல­மாக தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­பதே ஒரே நோக்­க­மாக உள்­ளது. அதற்­காக அர­சாங்கம் உரிய தரப்­பி­ன­ருக்கு சகல ஆலோ­ச­னை­க­ளையும் கொடுத்­துள்ளோம்.

மேலும் தற்­போ­தைய பாது­காப்பு நிலை­மைகள் குறித்து பொலிஸ்மா அதி­ப­ரிடம் முழு­மை­யான அறிக்­கையை பெற்­றுள்ளேன். இதில் சகல பாட­சா­லை­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது, சகல ஆல­யங்­களும் பாது­காக்­கப்­ப­டு­வ­துடன் மக்கள் வழ­மைபோல் வழி­பா­டு­களில் ஈடு­பட முடியும், போக்­கு­வ­ரத்து சேவைகள் வழ­மைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன, ஊர­டங்குச் சட்டம் நீக்­கப்­பட்­டுள்­ளது, விசா­ர­ணைகள் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட பல கார­ணி­களை பொலிஸ்மா அதிபர் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மேலும் இந்தப் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஐ.எஸ். இஸ்­லா­மிய அமைப்­பினால் நடத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலை­வ­ரினால் இஸ்­லா­மிய இராச்­சிய அழைப்பு விடுத்­த­போது பல நாடு­களில் இருந்து முஸ்­லிம்கள் சிரியா சென்று இணைந்து கொண்­டனர். இலங்­கையில் இருந்தும் சிலர் சென்­ற­தாக புல­னாய்வு அறிக்கை கூறு­கின்­றது. 2014 ஆம் ஆண்டில் இவர்கள் சென்­றுள்­ள­தாக புல­னாய்வு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. துருக்கி ஊடாக சென்­ற­தா­கவே கூறப்­ப­டு­கின்­றது. எனினும் 2014 ஆம் ஆண்டின் பின்னர் இஸ்­லா­மிய இராச்­சியம் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் இங்­கி­ருந்து சிரியா சென்று ஆயுத பயிற்சி பெற்று இங்கு வந்­த­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொல்­லப்­பட்ட நபர்கள் அனை­வரும் சிரியா சென்று ஆயுதப் பயிற்சி பெற்­றுள்­ளனர். அதேபோல் கைது செய்­யப்­பட்­டுள்ள சிலரும் சிரியா சென்று பயிற்சி பெற்­ற­தாக அறி­ய­மு­டிந்­துள்­ளது.

அதேபோல் இந்த தாக்­கு­தலின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் சஹ்ரான் என்ற நபர்  2015ஆம் ஆண்டு சிரியா சென்­றுள்­ள­தா­கவும் துருக்­கி­யி­லி­ருந்து சிரி­யா­வுக்கு சென்­ற­போது அவ­ரது பெற்றோரும் மற்றும் உற­வி­னர்­களும் சிரி­யா­வுக்கு சென்­றுள்­ளனர் என்ற தக­வலும் கிடைக்கப் பெற்­றுள்­ளது. அவ­ரது பெற்­றோர்கள் சிறிது காலம் சிரி­யாவில் தங்­கி­யி­ருந்து 2016 ஆம் ஆண்டு ஜன­வரி 16 ஆம் திகதி மீண்டும் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். அவர்கள் குறித்தும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கின்­றது. இந்தப் பயங்­க­ர­வாத நகர்­வு­களில்  18 தாக்­கு­தல்கள் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன. எனினும் அதற்­கான இடம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் பாது­காப்பு அறிக்கை கூறு­கின்­றது. அதேபோல் இந்த தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட நபர்­களின் குடும்­பங்­க­ளுக்கு 1 மில்­லியன் ரூபாய் வழங்­கவும் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஐந்து இலட்சம் வழங்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வாரங்­க­ளுக்குள் முதற்­கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதேபோல் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்ட தேவா­ல­யங்­களை புன­ர­மைக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் மக்­களின் அன்­றாட வாழ்க்­கையை வழ­மைக்கு கொண்­டு­வரும் சகல நட­வ­டி­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். பாட­சா­லை­களை வழ­மைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆல­யங்­களில் வழி­பா­டு­களும் வழ­மை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மக்கள் அச்­சத்தில் உள்­ளதால் அதனை நீக்க நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

எவ்­வாறு இருப்­பினும் இந்த அச்­சு­றுத்தல் முடிந்­து­வி­ட­வில்லை, இந்த பயங்­க­ர­வாதம் உல­க­ளா­விய பயங்­க­ர­வாதம். இதனை இல­கு­வாக முடிக்க முடி­யாது. இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட இலங்­கை­யர்­களை கைது­செய்து தடுத்­தாலும் வேறு எந்த வழியிலும் இந்த பயங்கரவாதம் தலைதூக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இதனை சர்வதேச ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான சகல தரப்புடன் இணைந்து புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் நாட்டில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கான புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாம் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம். சர்வதேச இராணுவத்தை நாட்டுக்குள் அனுமதிக்க போவதில்லை ஆனால் சர்வதேச ஒத்துழைப்பு வேண்டும். இவ்வாறான காரணிகளை கொண்டு எவரும் தத்தமது அரசியல் சுயலாபம் காணாது நாடாக நாம் அனைரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.