உங்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா?

0 1,116

கைதின் போது கைது செய்யும் உத்­தி­யோ­கத்­தரைக் கேட்க வேண்­டி­யவை:

  • கைதிற்­கான காரணம்
  • கைது செய்யும் உத்­தி­யோ­கத்­தரின் அடை­யாளம்
  • எந்தச் சட்­டத்தின் கீழ் அல்­லது ஒழுங்கு விதியின் கீழ கைது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது?
  • நீங்கள் அல்­லது உங்­க­ளது உற­வினர் கைது செய்­யப்­பட்டால் நீங்கள் எங்கே தடுத்து வைக்­கப்­ப­டு­வீர்கள்? அல்­லது அவன்/­அவள் எங்கே தடுத்து வைக்­கப்­ப­டுவார்?

உங்­க­ளது உற­வினர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தால் நீங்கள் உங்கள் நண்­ப­ரு­டனோ அல்­லது உற­வி­ன­ரு­டனோ பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று பின்­வ­ரு­வ­ன­வற்றை விசா­ரிக்­கலாம்.

  • உங்­க­ளது உற­வினர் எங்கே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்?
  • எந்தச் சட்­டத்தின் கீழ் அல்­லது ஒழுங்கு விதியின் கீழ் உங்கள் உற­வினர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்?
  • நீங்கள் உங்கள் உற­வி­னரைச் சென்று பார்­வை­யி­ட­லாமா அல்­லது கதைக்­க­லாமா?
  • கைது தொடர்பில் ஏதா­வது ஆவ­ணங்­களை நீங்கள் பெற்­றுக்­கொள்­ள­லாமா?

மேற்­கூ­றி­ய­வற்றை உங்­க­ளுக்குப் பதி­லாகச் செய்­வ­தற்கு சமு­தா­யத்தில் மதிப்­புள்ள ஒரு­வரை அல்­லது சட்­டத்­த­ரணி ஒரு­வரை அணு­கலாம். உங்கள் உற­வி­னரைச் சென்று பார்­வை­யிட அனுமதி கோருவதற்கான உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு! அவசரகாலத்தில் மாத்திரமே இந்த உரிமை மறுக்கப்படலாம்.

அட்டவணைகளை பார்க்க…

கீழ்­வரும் சட்­டங்கள் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கின்­றன.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களின் படி கைது செய்­யப்­பட்ட மற்றும் தடுத்து வைக்­கப்­பட்ட எவ­ரேனும் நப­ருக்கு:

கைதிற்­கான காரணம் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

அவர்­க­ளது சாதி, சம­யம், மொழி, பால் அல்­லது அர­சி­யற்­கொள்கை என்­ப­வற்றைப் பேணு­வ­தற்கு எதி­ராகப் பார­பட்சம் காட்­டப்­ப­டக்­கூ­டாது.

சித்­தி­ர­வ­தைக்கு அல்­லது கொடூ­ர­மான மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது இழி­வான நடாத்­து­கைக்கு அல்­லது தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­த­லா­காது.

கைதோ அல்­லது தடுத்து வைக்­கப்­ப­டலோ சட்­ட­மு­ர­ணாக அல்­லது எதேச்­சை­யா­ன­தாக இருந்தால் நீங்கள் உட­ன­டி­யாக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பாட்­டொன்றை செய்­யலாம்.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு எதேச்­சை­யான கைது தடுத்­து­வைப்பு மற்றும் சித்­தி­ர­வதை என்­பவை தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை விசா­ரிக்க மற்றும் புல­னாய்வு செய்ய அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அடிப்­படை உரி­மைகள் விண்­ணப்­ப­மா­னது குறித்த சம்­ப­வத்தை உட­ன­டுத்து தாக்கல் செய்­யப்­பட வேண்­டு­மா­கை­யால், வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பில் உட­ன­டி­யாக சட்­டத்­த­ர­ணியை அணுக வேண்டும்.

உங்­க­ளது உற­வினர் குற்­ற­வியல் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார் எனில் :

பொலிஸ் கைதிற்­கான கார­ணத்தை தெரி­விக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் உற­வி­னரைச் சென்று பார்­வை­யி­டலாம் அல்­லது கதைக்­கலாம்.

பெரும்­பான்­மை­யான குற்­றங்­க­ளுக்கு உங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள உற­வினர் நீதி­வானின் முன் 24 மணி நேரத்­துக்குள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

விதி­வி­லக்­கா­னவை தவிர மற்­றைய எல்லா வழக்­கு­க­ளிலும் உங்கள் உற­வினர் பிணையில் விடு­விக்­கப்­பட வேண்டும்.

உங்கள் உற­வி­னரை நீதி­மன்றில் சட்­டத்­த­ரணி மூலம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை உங்­க­ளுக்கு உண்டு அல்­லது உங்கள் உற­வினர் தங்­களைத் தாங்­களே நீதி­மன்றில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டு­த­்தலாம்.

உங்கள் உற­வினர் நீதிவான் நீதி­மன்றில் ஆஜ­ராக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு கேட்­கப்­ப­டு­வ­தற்­கான உரிமை உண்டு. மேலும் அவர்­க­ளது வழக்கை சுருக்­க­மாக கூற­வேண்டும் என்­ப­துடன் ஏதா­வது முறை­யில்லா நடாத்­து­கைக்­குட்­பட்­டி­ருந்தால் அது தொடர்பில் அறிக்கை செய்ய வேண்டும்.

ஒரு தடவை குற்றம் சாட்­டப்­பட்டால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள உங்கள் உற­வி­ன­ருக்கு பொலிஸ் பின்­வ­ரு­வ­னவற்றைக் கூற­வேண்டும்.

குற்­றச்­சாட்டு தொடர்­பான முதற்­த­கவல்

உங்கள் உற­வினர் யாருக்கு எதி­ராக குற்றம் செய்தார் என குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளாரோ அவரால் கூறப்­பட்ட ஏதேனும் கூற்­றுக்கள்.

உங்­க­ளது உற­வினர் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் அல்­லது அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் கைது

செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார் எனில் :

கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆட்­களின் அடிப்­படை உரி­மை­களைப் பாது­காத்தல் தொடர்பில் 07.07.2006 இல் வெளி­யி­டப்­பட்ட ஜனா­தி­பதி வழி­காட்­டல்கள் படி:

கைதை அல்­லது தடுத்து வைத்­தலை மேற்­கொள்ளும் நபர் தனது பெயர் பதவி மூலம் தன்னை கைது செய்­யப்­படும் ஆளுக்கு அல்­லது அவரின் உற­வி­ன­ருக்கு அல்­லது நண்­ப­ருக்கு இனங்­காட்ட வேண்டும்.

கைது செய்­யப்­பட்ட ஆளுக்கு கைதிற்­கான காரணம் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

கைது செய்­யப்­படும் ஆள் தான் இருக்கும் இடத்தை தனது குடும்­பத்­திற்கு அல்­லது நண்­பர்­க­ளுக்குத் தெரி­விப்­ப­தற்­காக அவர்­க­ளுடன் தொடர்­பு­கொள்ள அனு­ம­திக்­கப்­பட வேண்டும்.

கைது செய்­யப்­பட்ட அல்­லது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 18 வய­துக்கு குறைந்த பிள்ளை அல்­லது ஒரு பெண் தாம் தெரிவு செய்யும் ஆளுடன் சேர்ந்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட வேண்டும். இய­லு­மான வரை அவர்கள் ஆயுதம் தாங்­கிய படை­யி­னரின் அல்­லது பொலிஸின் மகளிர் பிரிவில் அல்­லது இன்­னொரு பெண் இரா­ணுவ அல்­லது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட்­டுக்­கா­வலில் வைக்­கப்­பட வேண்டும்.

கைது செய்­யப்­பட்ட அல்­லது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆட்கள் தாம் தெரிவு செய்யும் மொழியில் கூற்­றுக்­களை வழங்க அனு­ம­திக்­கப்­பட வேண்டும் அதன் பின்பு அந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தி கையெழுத்து பெறப்பட வேண்டும். (அவர்கள் தமது சொந்த கையெழுத்தில் கூற்றுக்களை மேற்கொள்ள விரும்பினால் அது அனுமதிக்கப்பட வேண்டும்.)

கைதை மேற்கொள்ளும் நபர் அல்லது தடுத்து வைத்தல் கட்டளையை வழங்கும் நபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 48 மணி நேரத்துக்குள் ஏதேனும் கைது அல்லது தடுத்து வைப்பு மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் என்பவற்றை அறிவிக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.