முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கையாளாதீர்

கர்தினால் மல்கம் ரஞ்சித்

0 593

ஒரு சம்­ப­வத்தை கார­ண­மாக வைத்­து­க்கொண்டு  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக எவரும் வன்­மு­றை­களைக்  கையாள வேண்­டா­மென பணி­வாக வேண்­டுகோள் விடுக்­கிறேன் என கர்­தினால் மெல்க்கம் ரஞ்சித் நாட்டு மக்­க­ளிடம் கோரி­யுள்ளார். மனி­தா­பி­மா­ன­மற்ற சிலரே ஆயு­தத்தை நம்­பு­வார்கள், மக்கள் எப்­போதும் அமை­தி­யாக இருக்க வேண்டும்  எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை நேற்று வன்­மு­றைகள் இடம்­பெற்ற நீர்­கொ­ழும்பு பல­கத்­து­றைக்கு விஜயம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்­களை நேரில் சந்­தித்து ஆறுதல் கூறினார். பல­கத்­துறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கும் விஜயம் செய்து அங்கு சமு­க­ம­ளித்­தி­ருந்த முஸ்லிம் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார்.

நாட்டில் நடந்து முடிந்த பிரச்­சி­னை­க­ளுக்கு அனைத்து முஸ்­லிம்­களும் கார­ண­மல்ல. இஸ்லாம், கிறிஸ்­தவ மதத்தைப் போன்று சமா­தா­னத்­தையும், கரு­ணை­யை­யுமே போதித்­துள்­ளது. தீவி­ர­வா­தத்தை எதிர்த்­துள்­ளது.

முஸ்­லிம்கள் எமது நாட்டில் நீண்­ட­கால வர­லாற்­றினைக் கொண்­ட­வர்கள். அவர்கள் இலங்­கைக்கு வந்து நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பரவி வாழ்ந்­தார்கள். அங்­கெல்லாம் பள்­ளி­வா­சல்கள் நிறு­வப்­பட்­டன. கிறிஸ்­தவ சம­யத்­துக்கும் இஸ்­லாத்­துக்கும் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன.

நாட்டில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு அனைத்து முஸ்­லிம்கள் மீதும் விரல் நீட்­டக்­கூ­டாது. ஒரு சிலரே இந்த தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு பட்­ட­வர்கள். சட்­டத்­தையும், நீதி­யையும் நிலை­நாட்­டு­வ­தற்கும் நஷ்ட ஈடுகள் வழங்­கு­வ­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும்.

இந்த சூழலில் நாம் யாரும் ஆயுத போராட்டம் ஒன்­றுக்கு தயா­ரா­வது ஆரோக்­கி­ய­மான விடயம் அல்ல. உயிர்ப்­பில்­லாத மனி­தர்­களே ஆயு­தங்­களை கையில் எடுப்­பார்கள். அவர்­க­ளுக்கு ஆயுதம் ஏந்தும் ஒன்று மட்­டுமே தெரி­யுமே தவிர மனி­தா­பி­மானம் தெரி­யாது. சில­ருக்கு ஆயுதம் மட்­டுமே தேவை­யாக உள்­ளது. ஆயு­தங்­களை ஏந்­தாது அனை­வரும் தத்­த­மது மதங்­க­ளுக்கு ஏற்ப அனைத்து கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிக்க  தெரிந்­தி­ருக்க வேண்டும் அபோ­துதான் தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முடியும், ஒரு சம்­ப­வத்தை அடுத்து  சிறு சிறு முரண்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது பெரிய மோதலில் முடியும். ஆகவே இவற்­றுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. பாது­காப்பு தரப்­பினர் இதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்­களின் பாது­காப்பில் பாது­காப்­புப்­ப­டை­யி­னரின் பங்கு அதி­க­மாகும் என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும்.

அதேபோல் சிங்­கள, தமிழ், கிறிஸ்­தவ மக்கள் எப்­போதும் புத்­தி­சா­லித்­த­ன­மாக செயற்­பட வேண்டும் . குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுடன் அன்­புடன் எமது உற­வு­மு­றையை கையாள வேண்டும். பயங்­க­ர­வாத தாக்­கு­தலை வைத்து இத­னையே ஒரு ஆயு­த­மாக கையில் எடுக்க வேண்டாம். இதற்கு முன்னர் எவ்­வாறு ஒற்­று­மை­யாக வாழ்ந்­தோமோ அதேபோல் இனியும் வாழ வேண்டும். கிறிஸ்­த­வர்கள் எப்­போதும் பொறுமை அன்பு இரக்­கத்­துடன் வாழ வேண்டும்.  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக எவரும் வன்­மு­றை­களை கையாள வேண்டாம் என்­பது எனது பணி­வான வேண்­டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேராயரின் விஜயத்தில் நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களும், கிறிஸ்தவ ஆலயங்களின் மத குருமார்களும், பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.எம். ரிஸ்வி, செயலாளர் எம்.எம்.எம். இர்சாத் ஆகியோர் இணைந்திருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.