அனைவரையும் கைது செய்து பூண்டோடு ஒழிக்க வேண்டும்

சிங்கள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஹக்கீம்

0 828

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வார இறுதி சிங்­கள பத்­தி­ரிகை (அனித்தா)வுக்கு வழங்­கி­யி­ருந்த நேர்­கா­ணலில் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களின் பின்­புலம், விளை­வுகள் என்­பன பற்­றி­யெல்லாம் விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். அதன் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கின்­றது.

Q பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கையின் ஏனைய இனத்­தவர் முஸ்லிம் சமூ­கத்தை சந்­தேகப் பார்­வை­யோடு நோக்­கு­கின்ற கசப்­பான உண்­மையை ஏற்­றுக்­கொண்­டாக வேண்­டு­மல்­லவா?

இவ்­வா­றான கடும்­போக்குத் தீவி­ர­வாத சித்­தாந்­தத்தை எங்­க­ளது சமூ­கத்தில் திணிப்­ப­தற்கு இந்த சிறு குழு­வினர் முயற்­சித்­துள்ள போதிலும், பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் அதனால் ஈர்க்­கப்­ப­ட­வில்லை என்றே நம்­பு­கின்றோம். இவ்­வா­றான துவேஷக் கருத்­துக்­களை மையப்­ப­டுத்தி சம­யத்தை பின்­பற்­றுங்கள் என்று கூறு­வது எங்­க­ளது சமூ­கத்தில் அறவே எடு­ப­டாது. இதனை அடி­யோடு பிடுங்கி எறி­யலாம். இவ்­வா­றா­ன­வர்­களை கைது செய்­யு­மாறு எங்­க­ளது சமூ­கத்­தி­லி­ருந்தே வழங்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டா­தது எங்­க­ளது புல­னாய்வுப் பிரி­வி­ன­ரி­னதும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டிய தரப்­பி­ன­ரி­னதும் பாரிய பின்­ன­டைவு மற்றும் தோல்வி என்­றுதான் கூற­வேண்டும்.

விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வா­தத்­திற்கு பரந்­து­பட்ட அர­சியல் பின்­ன­ணிகள் இருந்­தன. அவர்­களை சுற்றி பாரிய ஆத­ர­வாளர் குழா­மொன்று இருந்­தது. மக்கள் விடு­தலை முன்­னணி போராட்­டங்­களில் ஈடு­பட்ட போது அதன் சித்­தாந்­தத்தில் ஒரு­வி­த­மான கவர்ச்சி காணப்­பட்­டது. ஆனால், இவ்­வா­றான கொள்­கைக்கு அணு­வ­ள­வேனும், அந்­த­ளவு ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆகை­யால்தான் நாங்கள் ஒரு­வரை ஒருவர் குற்­றஞ்­சாட்டிக் கொள்­ளாமல் அனை­வரும் ஒன்­று­பட்டு இதற்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுத்தால் இந்தப் பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்­ளலாம்.

முஸ்லிம் சமூகம் இது­காறும் இந்த நபர்­களை பற்றி அபாய அறி­விப்பு விடுத்­தி­ருந்­தது உண்மை. ஆனால், இவ்­வ­ளவு பெருந்­தொகை செல்வம் மற்றும் குற்­ற­மி­ழைக்கும் சக்தி என்­பன ஒரேயடி­யாக அவர்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கு­மென எண்­ணி­யி­ருக்­க­வில்லை. நாங்­களும் இந்தப் பிரச்­சி­னையை மிகவும் சாவ­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ளக் கூடி­ய­தென ஆரம்­பத்தில் எண்­ணி­யி­ருக்கக் கூடும். இந்தப் பிரச்­சி­னையின் பார­தூ­ரத்தை சரி­வரப் புரிந்­து­கொள்­வ­தற்கு தவ­றி­ய­மைக்கு அரச உயர் மட்­டத்­தி­ன­ரி­லி­ருந்து கீழ் மட்­டத்தில் சாதா­ரண பிரஜை வரை தத்­த­மது மட்­டத்தில் பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்­க­ளாவர்.

Qமுஸ்லிம் சமூ­கத்தின் பெரும்­பான்­மை­யி­னரின் ஒத்­து­ழைப்பு இல்­லாமல் இந்­த­ளவு பயங்­க­ர­மான குண்­டு­வெ­டிப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டது எவ்­வா­றென ஒரு­சாரார் கேள்வி எழுப்­பு­கின்­றனர்? ஆயினும், உல­கி­லுள்ள நவீன தொழில்­நுட்­பத்தை நன்கு பயன்­ப­டுத்தி ஒரு சிலர் பாரிய அழிவை திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­தது தங்­களை பாரிய சக்­தி­யாக எடுத்­து­காட்ட முயற்­சித்­துள்­ளனர் என்ற சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது அல்­லவா?

இந்த விசா­ரணை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்ற உளவுத் துறை­யி­னதும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­ன­ரி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பது இது­போன்ற தொழில்­நுட்ப அறிவை இந்த நாட்­டிலே பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­தாகும். இவை மிக நேர்த்­தி­யாக, திட்­ட­மிட்ட முறையில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லாகும். இவற்­றிற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­பொ­ருட்கள் என்ன, அவற்றின் அளவு எவ்­வ­ளவு, தாக்­கு­தல்கள் தொடுக்­கப்­பட்ட இடங்­களில் கூடு­த­லான மனிதப் படு­கொ­லை­களை உண்­டு­பண்­ணக்­கூ­டிய விதத்தில் குரூ­ர­மாக திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கான பயிற்­சி­களை வழங்­கி­ய­வர்கள் இத்­து­றையில் பாரிய அறி­வையும் அனு­ப­வத்­தையும் பெற்ற பயங்­க­ர­வா­திகள் என்­பது புலப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான திட்­ட­மி­டப்­பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கைகளை ஓரிரு மாதங்­க­ளுக்குள் செய்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இல்லை. பயங்­க­ர­வா­திகள் ஊக்­கு­விக்­கப்­பட கூடா­தென்­ப­தற்­காக இது தொடர்­பான மேல­திக விளக்­கங்­களை வெளி­யி­டாமல் தவிர்த்­துக்­கொள்­கின்றேன். ஆயினும், மிகவும் கொடூ­ர­மாக, மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் அவர்கள் திட்டம் தீட்­டி­யுள்­ளார்கள் என்­பது நன்கு தெளி­வா­கின்­றது. அவர்கள் இயன்­ற­வரை கூடு­த­லான மனிதப் படு­கொ­லை­களை செய்து சர்­வ­தே­சத்­திற்கு கன­தி­யான செய்­தி­யொன்றை சொல்­வ­தற்கு எத்­த­னித்­துள்­ளனர். அவர்­களால் இது பற்­றிய எவ்­வி­த­மான நோக்­கங்­களும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

நியூ­சி­லாந்தில் கிரைஸ்ட்சேர்ச் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொலை தாக்­கு­தல்­க­ளுக்கு பதில் தாக்­குதல் நட­வ­டிக்­கைதான் இது­வென அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­தன பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இக்­க­ருத்­தா­னது பயங்­க­ர­வா­தி­களின் திட்டம் தொடர்­பாக ஊகித்து கூறப்­பட்ட வெறும் அனு­மா­ன­மே­யாகும். ஐ.எஸ். அமைப்பு அல்­லது வேறு எந்­த­வொரு அமைப்பும் இவ்­வா­றான விட­யத்தை கூற­வில்லை. அதா­வது மனிதக் கொலை­களை மட்­டுமே மேற்­கொள்­வது இந்த பயங்­க­ர­வா­தி­களின் இலக்­காகும். மாவ­னெல்­லையில் புத்தர் சிலையை உடைத்து அநி­யாயம் செய்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் கவ­லை­ய­டைந்தோம். அன்று முதல் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான தவ­றான கருத்­துக்கள் களை­யப்­பட வேண்­டு­மென்ற விமர்­ச­ன­மொன்றும் காணப்­பட்­டது.

யுத்­த­மொன்றின் போது­கூட குழந்­தைகள், பிள்­ளைகள், வயது முதிர்ந்­த­வர்கள், பெண்கள் ஆகி­யோரை கொலை செய்­வது மட்­டு­மல்ல பயிர் பச்­சை­களைக் கூட நாசப்­ப­டுத்­து­வதை இஸ்லாம் தடுக்­கின்­றது. இவ்­வா­றான தர்­மங்­களை இஸ்லாம் கூறும் போது மனிதப் படு­கொ­லை­களை மேற்­கொள்ளும் கலா­சா­ர­மாக மாற்­று­வ­தற்கு பயங்­க­ர­வா­திகள் எத்­த­னித்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் இஸ்­லாத்தின் பக்­தர்கள் அல்லர். அவ்­வா­றான கருத்­துக்­க­ளைக்­கூட முஸ்­லிம்கள் விரும்ப மாட்­டார்கள். இதன் சூத்­தி­ர­தா­ரி­யான ஸஹ்ரான் எனப்­ப­டு­பவர் காத்­தான்­கு­டி­யி­லுள்ள அரபு மத்­ர­ஸா­வொன்றில் இருந்­தவர். அவரின் அடிப்­ப­டை­வாத கொடூரப் போக்கு காத்­தான்­கு­டியில் இருக்­கும்­போதே தெரி­ய­வந்­தது. தமது எதிரணி உறுப்பினரை வாளினால் வெட்ட முயற்­சித்­துள்ளார். அதன் பின்னர் கொடூர எண்ணம் கொண்ட அவர் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்டார். அவர் சில காலம் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். பின்னர் வெளியில் வந்தார். அப்­போது அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருப்­பதை மக்கள் போதி­ய­ளவு அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆயினும், அவர் தொடர்­பாக எதிர்வு கூறப்­பட்­டி­ருந்­தது.

Q அவ்­வாறு நோக்­கு­மி­டத்து இக்­கு­ழு­வினர் சிங்­கள சமூ­கத்தில் காணப்­ப­டு­வது போன்று தீவி­ர­வாத சிந்­த­னை­யு­டை­ய­வர்கள், ஆயு­தத்தைக் கைகளில் ஏந்தி மக்­களை அச்­சு­றுத்த முற்­ப­டு­ப­வர்­க­ளாவர். அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு மத­வாத விஷ­மூட்­டப்­பட்டு பயங்­கர ஆயு­தங்­களை வழங்கி மிகவும் மோச­மான அழிவை ஏற்­ப­டுத்த முயன்­றி­ருப்­பது வித்­தி­யா­ச­மான ஒன்­றல்­லவா?

ISIS சர்­வ­தேச பயங்­க­ர­வாத வலை­ய­மைப்­புக்குள் இவர்கள் எவ்­வாறு உள்­வாங்­கப்­பட்­டார்கள் என்­பதை ஊகித்­துக்­கொள்ள முடி­யா­துள்­ளது. இவ்­வா­றா­ன­வர்கள் பிர­தேச மட்­டத்தில் குண்­டர்­களைப் போல் செயல்­ப­டு­வதைக் கண்­கா­ணித்து இவர்­களை உள்­வாங்­கி­யி­ருக்கக் கூடும் என நினைக்­கின்றேன். அதன் பின்னர் மதம் என்­பது இதுதான் என நினைத்து பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கலாம். திட்­ட­வட்­ட­மாக இவர்­களின் குழுவில் மேலும் சிலர் இருக்­கலாம். இத­னுடன் தொடர்­பு­பட்ட சக­லரும் உட­ன­டி­யாகக் கைது செய்­யப்­பட வேண்டும்.

Q அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூ­கத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் மாற்­றங்கள் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. இந்த விமர்­ச­னங்­களை முன்­னெ­டுத்து ஆடை, அணி­கல­ன்கள் உள்­ளிட்ட கலா­சாரப் பழக்­க­வ­ழக்­கங்­களை மாற்றிக் கொள்ளும் கடப்­பாட்டை முஸ்லிம் சமூகம் கொண்­டுள்­ள­தல்­லவா?

அவ­சி­ய­மான விதத்தில் அவ்­வா­றான மாற்­றங்கள் வர­வேண்டும். மார்க்­கத்தில் திட்­ட­வட்­ட­மாக சொல்­லப்­ப­டாத விட­யங்­களை மார்க்­கத்தில் உள்­ள­தாகக் கருதி பின்­பற்றத் தேவை­யில்லை. சகோ­தர சமூ­கத்­தினர் எங்­களை எவ்­வாறு நோக்­கு­கின்­றனர் என்­பதை மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும். ஆனால், அது எங்கள் சமூ­கத்­தி­லி­ருந்தே வர­வேண்டும் என்றே நான் நினைக்­கின்றேன்.

ண்­களின் ஆடை, அணிகள் குறித்துக் கூட விமர்­ச­னங்கள் உள்­ள­ன­தானே. ஆயினும், எங்கள் சம­யத்தில் இல்­லா­த­வற்றைக் கூட பின்­பற்­றுவோர் உள்­ளனர். அதன் உச்­சத்­திற்கே சென்று காரணம் கற்­பிப்­ப­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். ஆனால், அவர்கள் கூறு­கின்ற அள­விற்கு மார்க்­கத்தில் ஆடை பற்றி உறு­தி­யாக வலி­யு­றுத்­தப்­ப­ட­வில்லை. அவை அந்­நிய நாட்டு கலா­சா­ரங்­க­ளி­லி­ருந்து தழு­வப்­பட்­ட­வை­யாகும். வேற்று நாட்டு கலா­சா­ரங்கள் சம­யத்தின் பாற்­பட்­ட­வை­யல்ல. நாட்டின் கலா­சா­ரத்தை சம­யத்தின் தேவைப்­பா­டாக புரிந்து கொண்­ட­வர்­களும் இருக்­கின்­றனர். அவற்றை பற்றி பேசும்­போது அவையே தங்­க­ளது தனித்­துவம் மற்றும் பண்­பாடு என கூச்­ச­லி­டு­ப­வர்­களும் இருக்­கின்­றனர். ஆனால், இந்த பேர­ழி­விற்கு பின் அவர்­க­ளோடு பேசிப் பய­னில்லை. இப்­பொ­ழுதே அவ்­வா­றா­ன­தொரு கருத்­தாடல் தலை­தூக்­கி­விட்­டது. ஆயினும், அர­சாங்­கத்­தினால் இவற்­றிற்கு தடை ஏற்­பட்டால் வேறு விளை­வுதான் ஏற்­படும். எவ­ரா­வது பல­வந்­த­மாக எத­னையும் திணிக்க முற்­பட்டால் நிலைமை வேறு. மாற்­ற­மாக, அவர்­களின் மத்­தி­யி­லி­ருந்தே உள்­ளங்­க­மாக மாற்­றங்கள் உரு­வாக வேண்டும். பெண்­களின் உரி­மையும் அவ்­வா­றா­னதே. ஆரம்ப காலத்தில் பெண்­க­ளுக்கு உச்­ச­கட்ட சுதந்­திரம் இருந்­தது. ஆனால், காலப்­போக்கில் பெண்­களின் உரி­மையை கலா­சாரம் என்ற கோதாவில் மறைப்­ப­தற்கு சிலர் முயல்­கின்­றனர். அந்த விட­யத்தில் மாற்­றங்கள் அவ­சி­ய­மா­னவை. இந்த பேர­ழிவு மாற்­றத்­திற்­கான கார­ண­மா­கவும் ஆக்கிக் கொள்­ளப்­ப­டலாம்.

Q வணாத்­த­வில்­லுவில் வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்ட பின்­னரும் புல­னாய்வுப் பிரி­வினர் இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்­தி­யி­ருக்­க­லா­மல்­லவா?

புல­னாய்வுப் பிரி­வினர் தங்­க­ளுக்கு கிடைத்த பட்­டி­ய­லுக்கு ஏற்ப கரு­ம­மாற்­றி­யி­ருக்­கி­றார்கள். ஆனால், இந்த விட­யத்தில் ஓர­ள­வா­வது கரி­ச­னை­யாக இருந்­தி­ருக்­கலாம். மாவ­னெல்லை சிலை உடைப்பின் பின்னர் சந்­தேக நபர்கள் சிலர் குறித்து பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பின்னர் அவர்கள் ஒரு­வ­ரது உற­வி­ன­ருடன் வணாத்­த­வில்­லு­விற்கு போன­தாக அறிந்து கொண்­டார்கள். அந்த உற­வி­னரின் காத­லியின் மூல­மா­கத்தான் அது தெரி­ய­வந்­தது. அதா­வது வணாத்­த­வில்­லுக்கு செல்­வ­தாக காத­லிக்கு செய்­தி­யொன்று அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. காத­லி­யி­ட­மி­ருந்து தான் தக­வல்கள் பெறப்­பட்­டன. அதில் உளவுப் பிரி­வினர் உஷா­ர­டைந்­தி­ருந்­தனர். அதில் கூடுதல் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆயினும், அவர்கள் வணாத்­த­வில்­லுவில் கவனம் செலுத்­திய அதே­வே­ளையில் கொழும்­பி­லி­ருந்த பெரும் வர்த்­தகப் பிர­மு­கரின் வீட்டில் இந்த தாக்­கு­தல்­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்­பது வியப்­புக்­கு­ரிய விட­ய­மாகும். அந்த வர்த்­தக பிர­முகர் இலங்கை சமூ­கத்தில் சமய மற்றும் கட்சி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் தொடர்­பு­களை பேணி­வந்த கண்­ணி­ய­மாக மதிக்­கப்­பட்­டி­ருந்த ஒரு­வ­ராவார். நானும் அவ­ருடன் பேசிப் பழகி இருக்­கின்றேன். அவ­ருக்குத் தெரி­யாமல் அவ­ரது புதல்­வர்கள் இவற்றை செய்­தி­ருக்­க­லா­மென அவ­ருடன் நெருங்கி பழ­கி­ய­வர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர். அது உண்­மையோ இல்­லையோ அத்­த­கைய வர்த்­தக பிர­மு­கரின் வீட்டில் இந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன என்­பது அனு­மா­னிக்க முடி­யாத விட­ய­மாகும்.

Qகத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளுக்கு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்ற உறு­தி­யான தகவல் கிடைத்­தி­ருந்த போதிலும், அதனைத் தடுக்க முடி­யாமல் போனமை மன்­னிக்க முடி­யாத குற்­ற­மல்­லவா?

அதுதான் இங்கு பாரிய கேள்­வியை எழுப்­பு­கின்ற விட­ய­மாகும். இதன் கார­ண­மாக சில பத­வி­க­ளி­லி­ருந்து சிலரை அகற்­றலாம். அதனை செய்து தப்­பி­விட முடி­யாது. இதற்கு அர­சாங்கம் பொறுப்­புக்­கூற வேண்­டு­மென மக்கள் மத்­தியில் ஏற்­க­னவே கருத்துப் பர­வி­யுள்­ளது. எனவே நாம் செய்ய வேண்­டி­யி­ருப்­பது எல்­லோரும் ஒரு முகப்­பட்டு, ஒன்­றி­ணைந்து, மும்­மு­ர­மாக ஈடு­பட்டு இவற்றைச் சரி­வர கண்­ட­றிந்து பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாகத் தோற்­க­டிக்க முன்­வர வேண்டும். இலங்­கைக்கு சர்­வ­தேச நாடுகள் ஒத்­து­ழைப்பு வழங்கும். அந்த உத­வி­க­ளையும் பெற்று ஒற்­று­மை­யுடன் இந்த பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். அத்­துடன் அந்த அமைப்பில் புதி­தாக எவரும் இணைந்து கொள்­ள­வி­டாமல் தடுப்­ப­தற்கும் முடியும் என எண்ணுகின்றேன்.

Qஇந்த நிகழ்வின் பின்னர் அதற்குப் பதிலளிப்பதை விட அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தலாமல்லவா?

ஒக்டோபர் நிகழ்வின் பின்னர் அரசாங்கத்தில் மாற்று கருத்துடையவர்கள் இருக்கத்தக்கதாக நம்பிக்கையை சீர்குலைக்கின்ற இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதனை யாரும் வெளிப்படையாக கண்டுகொள்ளவில்லை. வெளிப்படையாக குற்றம் சாட்டிக்கொள்ள ஆரம்பித்தால் சமூகம் வெறுப்புடன் நோக்கும் என உள்ளக பேச்சுவார்த்தைகளின் போது நான் கூறினேன். அவற்றை சுட்டிக் காட்டியபோது அதுபற்றி சிந்திப்போமென சிலரும் இன்னும் சிலர் அவ்வாறு முடியாதெனவும் கூறினர்.

பாதுகாப்பு சபை கூடுவதில் ஏற்பட்ட சிக்கல், பேரழிவின் பின்னர் படைத்தளபதிகள் சமுகமளிக்காமை முதலான விடயங்கள் தொடர்பாக உரையாடப்பட்டன. இவை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்படலாம். இவ்வாறான தருணத்தில் அரசாங்கம், ஒன்றுபட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என நான் நினைக்கின்றேன்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் அச்ச உணர்வும், நம்பிக்கை இழப்பும் மேலும் அதிகரிக்கலாம். இவை தொடர்பாக சிறுபான்மைத் தலைவர்கள் கடுமையாகப் பேசினார்கள். எங்களுக்குள் மோதிக்கொள்ளாது ஒன்றிணைந்து சவால்களை எதிர்நோக்குவோம் எனக் கூறினேன். இது ஒரு தேசிய ஆபத்தாகும். இதன் பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். எதிர்கட்சியினரையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதனூடாகத்தான் இதனை நாம் வெற்றிகொள்ள முடியும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.