தப்லீக் பணி முடிந்து பஸ்ஸுக்காக காத்திருந்த அரபுக்கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது

குருநாகலில் சம்பவம்

0 884

குரு­நாகல் நகரில் தப்லீக் ஜமாஅத் பணியில் ஈடு­பட்­டி­ருந்த அரபுக் கல்­லூரி மாண­வர்கள் நால்வர், நாட்டின் நிலை­மைகள் கார­ண­மாக பணியை முடித்து வீடு திரும்­பு­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்­றி­ருந்த சமயம் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.
குளி­யா­பிட்­டிய வல­யத்­துக்­குட்­பட்ட அரபுக் கல்­லூரி ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாண­வர்கள் தப்லீக் ஜமாஅத் பணிக்­காக குரு­நாகல் நகரை அண்­மித்த பள்­ளி­வாசல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். இந் நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்டில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நிலை­மைகள் மோச­ம­டைந்­ததால் தப்லீக் பணியை இடை­நி­றுத்தி சக­ல­ரையும் வீடு செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய குறித்த மாண­வர்­களில் இருவர் புத்­தளம் செல்ல வேண்­டிய நிலையில் வழி தெரி­யாது அநு­ரா­த­புரம் பஸ்ஸில் ஏறி­யுள்­ளனர். இத­னை­ய­றிந்த பஸ் நடத்­துனர் அவர்­களை உடன் பஸ்­ஸி­லி­ருந்து இறக்­கி­விட்­டுள்ளார். இந் நிலையில் இவர்கள் மீண்டும் குரு­நாகல் பஸ் நிலை­யத்தில் பஸ்­ஸுக்­காக காத்­தி­ருந்த சக மாண­வர்கள் இரு­வ­ரு­டனும் இணைந்­துள்­ளனர்.

இவர்கள் நீண்ட ஜுப்பா ஆடை­யு­டனும் கைகளில் பயணப் பைக­ளு­டனும் பஸ் நிலை­யத்தில் நின்­றி­ருந்த நிலையில், இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட பொலிசார் அவர்­களை நோக்கி வந்­துள்­ளனர்.

பொலிஸார் தம்மை நோக்கி வரு­வதை கண்­டதும் இவர்­களில் இருவர் அங்­கி­ருந்து ஓட ஆரம்­பித்­துள்­ளனர். அச் சமயம் இவர்­களில் இரு­வ­ரிடம் அடை­யாள அட்­டைகள் இருந்­தி­ருக்­க­வில்லை என்றும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
ஏன் ஓடி­னீர்கள் எனக் கேட்­ட­தற்கு, தமக்கு சிங்­களம் தெரி­யாது என்­ப­தா­லேயே ஓட முயன்­ற­தாகக் கூறி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து பொலிசார் இவர்கள் நால்­வ­ரையும் கைது செய்து குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்­துள்­ளனர்.

பின்னர் தக­வ­ல­றிந்து இவர்­களை உடன் விடு­விப்­ப­தற்­கான முயற்­சி­களை குரு­நாகல் பிர­தேச முஸ்லிம் பிர­மு­கர்கள் முன்­னெ­டுத்த போதிலும் அது பல­ன­ளிக்­க­வில்லை. எனினும் கைதான இம்மாணவர்கள் தொடர்பான விபரங்களை கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி இவர்கள் தொடர்பான விபரங்களை உறுதி செய்த பின்னரே மறுநாள் நால்வரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.