வெள்ளிக்கிழமை சாம்பியா செல்வதாக கூறிச் சென்ற இன்ஸாப் ஞாயிறன்று தற்கொலை குண்டுதாரியானார்

0 957

கொழும்பு, நீர்­கொ­ழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­குண்­டுகள், வெல்­லம்­பிட்­டி­யி­லுள்ள செப்புத் தொழிற்­சா­லை­யொன்றில் உற்­பத்தி செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர். இந்த செப்பு தொழிற்­சாலை, அண்­மையில் தற்­கொலைத் தாக்­கு­த­லொன்றை மேற்­கொண்ட இன்ஸாப் அஹமட் என்­ப­வ­ருக்கு சொந்­த­மா­னது என வெல்­லம்­பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இந்த தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களுள் ஒரு­வ­ரான இன்ஸாப் அஹமட் கண்­டியைச் சேர்ந்­தவர் என்றும், அவர் கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் கல்­வி­கற்­றவர் என்றும் இன்­ஸாபின் (மனை­வியின் சகோ­தரன்) மைத்­து­ன­ரான அஷ்கான் அலாம்தீன் பிரித்­தா­னி­யாவின் ‘டெய்லி மெயில்’ இணை­யத்­த­ளத்­துக்கு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அஷ்கான் அலாம்தீன் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ”அவர் எமது குடும்­பத்தை நாசம் செய்­தது மாத்­தி­ர­மல்­லாது பல மக்­களின் வாழ்க்­கை­யையும் வீண­டித்­துள்ளார். அவ­ரது திட்டம் தொடர்பில் நாம் அறிந்­தி­ருக்­க­வில்லை. அது தெரிந்­தி­ருந்தால் பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருப்போம். இந்தத் தாக்­கு­தலை இன்ஸாப் மாத்­திரம் மேற்­கொள்­ள­வில்லை. அவ­ரது சகோ­த­ர­னான இல்­ஹாமும் இதில் தொடர்­பு­பட்­டுள்ளார். அவர்கள் குறித்து நாம் வருத்­தப்­ப­ட­வில்லை. கோபம் மாத்­தி­ரமே உள்­ளது. அவர்கள் எல்லா வச­தி­க­ளு­டனும் வாழ்ந்­த­வர்கள்” என்றார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ”இந்த சம்­ப­வத்­துக்கு முன்­ன­ரான நாட்­களில் எனது மைத்­து­ன­ரான இன்ஸாப், சாம்­பியா நாட்­டுக்கு தொழில் நிமித்­த­மாக செல்­வ­தாக தனது மனை­வி­யி­டமும் கூறி­யுள்ளார். அதற்­க­மைய, அவ­ரது மனைவி, இன்­ஸாபை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (19) விமான நிலை­யத்­துக்கு சென்று வழி­ய­னுப்பி வைத்­துள்ளார். அன்­றைய தினம் மாலை 6.50 மணிக்கு புறப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் விமா­னத்தில் பய­ண­மா­வ­தற்கே அவர் சென்­ற­தாக தெரி­வித்தார்.

அதன்­போது, வழ­மைக்கு மாறாக அவர் தனது மனை­வியை ஆரத்­த­ழுவி, நீ தைரி­ய­மாக இருக்க வேண்டும் எனக்­கூறி விடை­பெற்­றுள்ளார். பின்னர் தற்­கொலை குண்­டு­தா­ரி­யான இன்ஸாப் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7.30 மணிக்கு அதா­வது குண்­டு­வெ­டிப்­புக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முன், தொலை­பே­சியில் தனது மனை­வியை தொடர்­பு­கொண்டு, பேசி­யுள்ளார்” என அலாம்தீன் தொடர்ந்தும் தெரி­வித்தார்.

இதன்­போது, அவர்­மேலும் தெரி­விக்­கையில், ”இந்த தற்­கொலை தாக்­கு­தலை மேற்­கொண்ட இனஸாப் அஹமட், 9 சகோ­தர, சகோ­த­ரி­களை கொண்­டுள்ள அதே­வேளை, அவ­ரது தந்தை இலங்­கைக்கு பல­ச­ரக்கு பொருட்­களை ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி செய்யும் வர்த்­த­க­ரொ­ரு­வ­ராவார்.

இந்தத் தாக்­கு­தலின் பின்னர், இன்­ஸா­புக்கு சொந்­த­மான கொழும்பு, வெல்­லம்­பிட்­டி­யி­லுள்ள செப்பு தொழிற்­சாலை சோத­னை­யி­டப்­பட்­ட­துடன் அங்­கி­ருந்த முகா­மை­யாளர், மேற்­பார்­வை­யாளர் மற்றும் தொழில்­நுட்ப அதி­கா­ரிகள் என 9 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டனர்.

இந்தத் தொழிற்­சா­லையை சோத­னை­யிட்ட பொலிஸார், குறித்த தொழிற்­சா­லையில் இன்ஸாப் உள்­ளிட்ட தற்­கொலை குண்­டு­தா­ரி­களால் வெடிக்க வைக்­கப்­பட்ட குண்­டு­களை இங்கு தயா­ரித்­தி­ருக்­கலாம் எனவும் அதற்­காக அவர்கள் ட்ரைஅ­ஸிடோன் ட்ரைபெ­ரொ­க்சைட் அல்­லது அல் கொய்தா அமைப்­பி­னரால் ‘சாத்­தானின் தாய்’ என அழைக்­கப்­படும் மூலப்­பொ­ருளை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என்றும் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் மற்றும் 2017 ஆம் ஆண்டு மென்­செஸ்­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டு­க­ளுக்கு இத்­த­கைய Triacetone Triperoxide என்ற வெடி­பொ­ருட்­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

வெடி­பொருள் தொடர்­பான விசேட நிபு­ண­ரொ­ருவர் தெரி­விக்­கையில், இவ்­வகை வெடி­பொ­ருட்­களால் பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்த முடியும் என்றார். இந்த தொழிற்­சா­லையில் தற்­போது மீத­மா­க­வுள்ள இந்­திய மற்றும் பங்­க­ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 12 தொழி­லா­ளிகள் டெய்லி மெயில் இணை­யத்­த­ளத்­துக்கு தெரி­விக்­கையில், குண்­டு­தா­ரி­யான இன்ஸாப் அஹமட், ஒவ்­வொரு நாளும் தனது வேலைத்­த­ளத்­துக்கு வந்து சுமார் 20 நிமி­டங்­களை மாத்­தி­ரமே அங்கு கழிப்பார் என்­றனர்.

அவர்­களில் பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த தொழி­லா­ளி­யொ­ருவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், இன்ஸாப் முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரிய கலா­சார உடை­களை அணி­ப­வ­ரல்ல. தொழிற்­சா­லைக்கு வந்­தாலும் முகா­மை­யா­ள­ருடன் மாத்­தி­ரமே பேசுவார். அத்­துடன் அவ­ருடன் இணைந்து புகைப்­படம் எடுப்­ப­தற்கு அவர் ஒரு­போதும் இட­ம­ளித்­த­தில்லை. அது தமது மதக் கோட்­பா­டு­க­ளுக்கு அது விரோ­த­மா­னது என்பார் எனத் தெரி­வித்தார்.

இதே­வேளை, இச்­சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் டெய்லி மெயி­லுக்கு தெரி­விக்­கையில் ”இன்­ஸாபின் வங்கிக் கணக்கில் மதிப்­பிட முடி­யா­த­ளவு பெருந்­தொகை பணம் இருக்­கி­றது. இவ­ருக்கு இவ்­வ­ளவு பணம் கிடைத்­தது எவ்­வாறு? வெளி­நாட்டு தீவி­ர­வாத அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து அவ­ருக்கு பணம் கிடைத்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தோடு அது தொடர்பில் விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளோம். இது புற்­றுநோய் போன்­றது. இதனை வள­ர­வி­டாமல் விரைவில் அழிப்போம்” என்றார்.

இன்ஸாப் இந்தத் தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் தனது சகோ­த­ர­ரொ­ரு­வரின் வீட்­டுக்குச் சென்று இரவு உணவை உட்­கொண்­டுள்ளார். அதன்­போது, விரைவில் விநோத சுற்­றுலா செல்­வது தொடர்­பிலும் பேசி­ய­தாக உற­வி­ன­ரான சகோ­த­ர­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.
இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், அவர் எந்த வித்­தி­யா­சத்­தையும் வெளிக்­காட்­ட­வில்லை. புன்­ன­கை­யு­ட­னேயே காணப்­பட்டார். அவர் இவ்­வா­றா­ன­தொரு காரி­யத்தை செய்தார் என நம்­ப­மு­டி­யா­துள்­ளது. அவ­ரது பிள்­ளைகள் நால்­வரும் 8, 6, 4 மற்றும் 2 வய­து­டை­ய­வர்கள் என்றார்.

தற்­கொலை குண்­டு­தாரி இன்ஸாப் அஹமட் தனது தந்­தை­யுடன் தெமட்­ட­கொ­ட­வி­லுள்ள அதி­சொ­குசு குடி­யி­ருப்­பொன்றில் வசித்­து­வந்தார். அந்த வீட்டை கடந்த 21 ஆம் திகதி சோத­னை­யிட சென்­ற­போது இடம்­பெற்ற வெடிப் பிலேயே மூன்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கொல்­லப்­பட்­டனர் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.