புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள்

0 705

 

சுமார் 300 பேரைப் பலி கொண்டு 450 பேருக்கும் மேற்­பட்­டோரை காயத்­திற்­குள்­ளாக்­கிய கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் கார­ண­மாக தசாப்­தத்தின் மிக மோச­மான மனிதப் படு­கொ­லை­களில் இலங்கை சிக்கிக் கொண்­டுள்­ளது. இந் நிலையில் பல தசாப்­தங்­க­ளாக இரத்தம் தோய்ந்த முரண்­பா­டு­க­ளி­லி­ருந்து மீண்­டு­கொண்­டி­ருக்கும் தென்­னா­சி­யாவின் முக்­கி­யத்­து­வ­மிக்க இடத்தில் அமைந்­தி­ருக்கும் தீவு புதி­ய­தொரு பாது­காப்பு அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டுள்­ளது.

பிரி­வி­னை­வாத தமிழ் புலிகள் மற்றும் இரு மாக்­ஸிச எழுச்­சி­க­ளோடு தொடர்­பு­பட்ட சுமார் 30 வருட தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து குருத்­தோலை ஞாயிறு தினத்­தன்று மூன்று முன்­னணி தேவா­ல­யங்கள் மற்றும் மூன்று உயர்­மட்ட ஹோட்­டல்­க­ளையும் இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் அள­விலும் அமைப்­பிலும் வேறு­பட்­ட­வை­யாகக் காணப்­ப­டு­வ­தாக நாட்டின் பாது­காப்பு கட்­ட­மைப்­பினுள் உள்ளோர் தெரி­விக்­கின்­றனர்.

திட்­ட­மிடல், இலக்குத் தேர்வு, கூட்­டி­ணைப்பு மற்றும் நாட்டில் ஆழ­மான ஊடு­ருவல் என்­பன ‘முன்­னொ­ரு­போ­து­மில்­லாத புதிய அச்­சு­றுத்­தலை உணர்த்­து­வ­தாக’ நிக்கி ஏசியன் றிவியூ இணைத்­த­ளத்­திற்கு பாது­காப்பு வட்­டா­ர­மொன்று தெரி­வித்­தது.

இது சாதா­ரண குழு­வொன்றின் செயற்­பாடோ குற்றக் கும்­ப­லொன்றின் செயற்­பாடோ அல்ல என சிவில் யுத்த காலத்­தின்­போது கொழும்பின் பாது­காப்­புக்குப் பொறுப்­பாக இருந்த இலங்­கையின் முன்னாள் கடற்­படைத் தள­பதி ஜெயநாத் கொலம்­பகே தெரி­வித்தார். குண்டு தயா­ரிப்பு, இலக்­கு­க­ளுக்கு அவற்றைக் கொண்டு சேர்த்தல் மற்றும் தாக்­குதல் நடத்தும் நேரத் தெரிவு என்­ப­ன­வற்றில் நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்­களின் தொடர்பு இருக்­கின்­றது.
ஆசி­யாவில் மென்­மை­யான இலக்­குகள் மீது மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்கள் தொடர்பில் பரிச்­ச­ய­மிக்க சர்­வ­தேச பயங்­க­ர­வாத நிபு­ணர்கள் இதனை ஏற்­றுக்­கொள்­கின்­றனர்.

அதி­கூ­டிய சேதத்தை ஏற்­ப­டுத்­து­வதை இலக்­காகக் கொண்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களே இவை­யாகும் என ஹொங் கொங்கைத் தள­மாகக் கொண்ட பாது­காப்பு ஆலோ­சனை மைய­மான ‘ஐ.எஸ். ஆபத்து பயங்­க­ர­வாத நிபு­ணத்­துவ’ அமைப்பின் தலை­வ­ரான பில் ஹைன்ஸ் தெரி­வித்தார்.
இந்த அள­விற்கு தாக்­கு­த­லொன்றை நடத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க அளவில் உள்ளூர் ஆத­ரவு இருந்­தி­ருக்க வேண்டும். சுமார் 80 தொடக்கம் 100 பேர் இதில் பங்­கேற்­றி­ருப்பர்.

ஆனால் இதன் நோக்கம் என்ன? எனத் தெரி­வித்த ஹைன்ஸ் ‘இதற்கு குறைந்­தது மூன்று மாத திட்­ட­மி­டலும் நிதி வழங்­கலும் தேவைப்­பட்­டி­ருக்கும்.
இது அண்­மையில் நடை­பெற்ற ஏதேனும் சிறிய செயற்­பா­டொன்­றிற்­கான பதில் நட­வ­டிக்­கை­யல்ல’ எனவும் தெரி­வித்தார்.

விடை­களைக் கண்­ட­றி­வ­தற்­கான தேடலில், தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களைக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இத் தாக்­கு­தல்­களில் தொடர்­பு­பட்­ட­வர்கள் என உள்ளூர் முஸ்லிம் தீவி­ர­வாதக் குழு­வினைச் சேர்ந்­த­வர்கள் என பொலி­ஸாரும் புல­னாய்வு வட்­டா­ரங்­களும் சந்­தே­கித்து வரும் நிலையில் விசா­ர­ணை­யா­ளர்­களும் அதே திசையில் தமது கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளனர்.
தற்­கொலைத் தாக்­கு­தல்­தா­ரி­களுள் ஒருவர் கொழும்­பி­லுள்ள கோடீஸ்­வர வர்த்­தகர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பொலிஸ் விசா­ர­ணை­யா­ளர்கள் குழு­வொன்று வருகை தந்­த­தை­ய­டுத்து கொழும்­பி­லுள்ள குடி­மனைக் கட்­டடத் தொகு­தி­யொன்றில் குண்­டொன்று வெடித்­ததைத் தொடர்ந்து இவ் விப­ரங்கள் தெரி­ய­வந்­துள்­ளன. இந்தத் தேடு­த­லின்­போது மூன்று பொலிஸார் உயி­ரி­ழந்­தனர்.
இக் கொலை­களைத் தடுப்­பதில் இலங்­கையின் பாது­காப்புக் கட்­ட­மைப்பு பாரிய தவ­றினை இழைத்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
முன்­னணி தேவா­ல­யங்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் திட்­ட­மி­டு­வ­தாக ஏப்ரல் 11 ஆந் திகதி நாட்டின் பொலிஸ் தலை­மை­ய­தி­கா­ரி­யினால் புல­னாய்வு சமூ­கத்­திற்கு எச்­ச­ரித்­தி­ருந்த தகவல் தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து இது தொடர்­பான கருத்­துக்கள் கொழும்­பி­லுள்ள இரா­ஜ­தந்­திர சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்தும் அர­சியல் அவ­தா­னிகள் மத்­தி­யி­லி­ருந்தும் வெளி­யா­கின.

முன்­ன­தா­கவே தாக்­குதல் தொடர்­பான தக­வல்கள் கொடுக்­கப்­பட்­டி­ருந்தும் பாது­காப்பில் தவறு நேர்ந்­துள்­ளது என்­பதை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த திங்­கட்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தினார்.

ஏன் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது தொடர்பில் நாம் கட்­டாயம் ஆராய வேண்டும். எனக்கோ அமைச்­சர்­க­ளுக்கோ இது தொடர்பில் அறி­விக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.
நாட்டில் தாக்­கு­த­லொன்று நடை­பெ­ற­வுள்­ள­தாக ஏப்ரல் மாத முற்­ப­கு­தி­யி­லி­ருந்து வதந்­திகள் காணப்­பட்­ட­தாக கொழும்பில் வசிக்கும் சிலர் தெரி­வித்­தனர். இம் மாதம் முழு­வதும் ஏதோ­வொன்று நடை­பெறப் போகி­றது என்ற வதந்தி காணப்­பட்­டது, மக்கள் அதனைப் பற்றி பேசி­னார்கள். அது அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மையை சீர்­கு­லைப்­ப­தற்­கான செயற்­பா­டாக இருக்கும் என்ற வகை­யிலும் பல கதைகள் உலா­வின என சுதந்­திர மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­க­மான சோசியல் ஆக்­கி­டெக்ட்டின் பணிப்­பா­ள­ரான சிரீன் சேவியர் தெரி­வித்தார்.

நாட்டின் புல­னாய்­வுத்­து­றையில் தவறு நேர்ந்­த­மைக்கு எச்­ச­ரிக்கை வெளி­யி­டப்­பட்ட காலமும் ஒரு கார­ண­மாகும். அறு­வடை காலத்தின் முடி­வினைக் குறிக்கும் சிங்­கள மற்றும் தமிழ் புத்­தாண்­டி­னை­யொட்­டிய இலங்­கையின் நீண்ட விடு­மு­றைக்­கான ஆரம்­பத்­தின்­போது இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஏப்ரல் 12 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை­யான விடு­மு­றைக்­கான ஆயத்­தத்தில் அனை­வரும் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கும்­போது இந்த எச்­ச­ரிக்கை வெளி­யி­டப்­பட்­டது, அப்­போது ஓய்வு மனோ­நி­லையே காணப்­பட்­டது என அர­சி­ய­லினுள் உள்ள ஒருவர் தெரி­வித்தார்.

ஆனால் இந்த பாது­காப்புத் தவறின் வேர்கள் மேலும் ஆழ­மா­ன­வை­யா­கவும் இருக்க முடியும். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து அதி­கா­ரத்­திற்கு வந்த ஆளும் கூட்­டணி அர­சாங்கம் ஸ்திரத்­தன்­மை­யற்­ற­தாகக் காணப்­படும் அதே­வேளை அதன் இரு பிரி­வு­களும் அர­சாங்­கத்தை கொண்டு நடத்­து­வதில் ஏட்­டிக்குப் போட்­டி­யாக செயற்­பட்டு வரு­கின்­றன.

நாட்டின் நிரு­வா­கத்­திற்கு தலை­மை­தாங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வரு­டத்தின் பிற்­ப­கு­தியில் இடம்­பெற்ற தோல்­வியில் முடி­வ­டைந்த அர­சி­ய­ல­மைப்பு சதிப்­பு­ரட்சி உள்­ள­டங்­க­லாக தொடர்ச்­சி­யாக விக்கி­ர­ம­சிங்­கவை வெளி­யேற்­று­வ­தற்கே முயற்­சிக்­கின்றார். இது இரு­கட்சி அர­சாங்கம்.
இரு தலை­வர்­களும் வெவ்­வேறு திசை­க­ளுக்கு இழுக்­கின்­றனர் என இரா­ஜ­தந்­திர வட்­டாரம் தெரி­வித்­தது.

பாது­காப்புக் கட்­ட­மைப்பு உள்­ள­டங்­க­லாக பணி­யக அமைப்­பினுள் தீர்­மானம் எடுத்தல் என்ற விடயம் நாட்டின் தலை­மைத்­து­வத்தின் உச்­சத்­தி­லுள்ள அர­சியல் ஸ்திர­மின்­மையால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பகுப்­பாய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். நாட்டின் புல­னாய்வு சமூ­கமும் 2015 ஆம் ஆண்டு சிரி­சே­ன­வினால் அதிர்ச்சித் தோல்­விக்­குள்­ளாக்­கப்­படும் வரை சுமார் ஒரு தசாப்த காலம் நாட்டை சர்­வா­தி­காரத் தன்­மை­யோடு ஆட்சி செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை அதி­க­ளவில் சார்ந்தே செயற்­பட்டு வரு­கின்­றது.
சக்­தி­மிக்க நபர் என்ற வகை­யிலும் உள்­நாட்டு யுத்­தத்­தின்­போது தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய தமிழ் புலி­களைத் தோற்­க­டித்த அர­சாங்­கத்தின் தலைவர் என்ற வகை­யிலும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் மிக ஆழ­மான பிர­ப­லத்தைக் கொண்­ட­வ­ராக ராஜ­பக் ஷ காணப்­ப­டு­கின்றார். இன முரண்­பாடு கார­ண­மாக சுமார் 100,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
முதல் தட­வை­யாக 1970 களின் ஆரம்­பத்­திலும் இரண்டாம் தட­வை­யாக 1980 களின் நடுப் பகு­தி­யிலும் ஏற்­பட்ட மாக்­ஸிச எழுச்சி மிகக் கொடூ­ர­மா­ன­வை­யாகும். ஏமாற்­ற­ம­டைந்த சிங்­கள இளை­ஞர்கள் அர­சாங்­கத்தை தூக்­கி­யெ­றிய முனைந்­தார்கள். இரு எழுச்­சி­க­ளின்­போதும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர்.

இந்த நாட்டின் முஸ்­லிம்கள் சுமார் 10 வீத சனத்­தொ­கை­யினைக் கொண்ட இரண்­டா­வது பெரும்­பான்மை சம­யத்தைச் சேர்ந்த சிறு­பான்­மை­யி­ன­ராவர்.
இவர்கள் உள்­நாட்டு யுத்­தத்­தின்­போதும் எழுச்­சி­களின் போதும் நேர­டி­யாக தம்மை ஈடு­ப­டுத்திக் கொள்­ள­வில்லை, எனினும் அண்­மைய ஆண்­டு­களில் சில கிறிஸ்­தவ சமய நிறு­வ­னங்கள் எதிர்­கொண்­ட­தைப்­போன்று சிங்­கள பெரும்­பான்மை கும்­பல்­களால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்­கப்­பட்­டது.
நாட்டின் சுமார் 70 வீத­மான மக்கள் பௌத்­தர்­க­ளாக இருக்கும் அதே­வேளை மொத்த சனத்­தொ­கையில் இந்­துக்கள் சுமார் 12 வீத­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

பதற்­ற­மான சூழலின் பின்­ன­ணியில் கொழும்­புக்குக் கிழக்கே அமைந்­துள்ள கிராமியப் பகுதியான மாவனெல்லை போன்ற இடங்களில் சொற்ப எண்ணிக்கையான இளைஞர்கள் சிலர் அடிப்படைவாதிகளாக மாறிவருவதாக அண்மைக்கால புலனாய்வு அறிக்கைகள் எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்தன. எனினும் பெரும் எண்ணிக்கையிலான அடிப்படைவாத இளைஞர்கள் சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத வலையமைப்புக்களில் இணைந்துள்ளமையை உறுதிப்படுத்துவதற்கான வெளிப்படையான தொடர்புகள் எவையும் இல்லை.

பயங்கரவாத செயற்பாட்டின் அதிர்ச்சி இன்னும் மாறாதிருக்கும் நிலையில் அதன் வலி மெதுமெதுவாக குறைந்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தளம்பல் நிலையில் இருக்கும் இனங்களுக்கிடையிலான சமாதானம் நின்று நிலைக்குமா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் மென்மையான இலக்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டவையாகும் என்பதோடு அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவையல்ல. எனவே பதில் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும், அதுதான் மிகவும் கவலையளிக்கின்றது என இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.

நிக்கி ஏசியன் ரிவீவ் இணையதளத்தில் மர்வான் மாகான் மாகார் எழுதிய ஆக்கத்தின் தமிழ் வடிவம்

தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.