அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசி ரீமா பதவியேற்பு

0 662

அமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூலம் இரா­ஜ­தந்­திர வர­லாற்றில் புதிய அத்­தி­யாயம் ஒன்றை அவர் தோற்­று­வித்­துள்ளார்.

ரியாதில் அமைந்­துள்ள அல்-­யெ­மாமாஹ் அரண்­ம­னையில் மன்னர் சல்மான் முன்­னி­லையில் இள­வ­ரசி ரீமா சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார். இதன்­மூலம் சவூதி அரே­பி­யாவின் முத­லா­வது பெண் தூது­வ­ராக இவர் வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்ளார்.

நான் எனது மார்க்­கத்­திற்கும், மன்­ன­ருக்கும் எனது நாட்­டுக்கும் விசு­வா­சத்­துடன் இருப்பேன் என்றும், எனது நாட்டின் இர­க­சி­யங்­களை வெளி­யி­ட­மாட்டேன் என்றும், உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அர­சாங்­கத்தின் நலன்­க­ளையும் சட்­டங்­க­ளையும் பேணிக் காப்பேன் என்றும் உண்­மை­யா­கவும் நேர்­மை­யா­கவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் எனது கட­மை­களை நிறை­வேற்­றுவேன் எனவும் எல்லாம் வல்ல அல்­லாஹ்வின் பெயரால் சத்­தியம் செய்­கின்றேன்” எனக் கூறி தனது பத­வி­யினை ஏற்­றுக்­கொண்டார்.

இள­வ­ரசி ரீமாவின் தந்­தை­யான இள­வ­ரசர் பந்தர் பின் சுல்தான் அமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பியத் தூது­வ­ராகப் பதவி வகித்­த­போது ரீமாவும் தனது இளைமைக் காலத்தில் நீண்­ட­காலம் அமெ­ரிக்­காவில் வாழ்ந்­துள்ளார். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நூத­ன­சாலை கற்­கைகள் துறையில் தனது பட்டப் படிப்­பி­னையும் பூர்த்தி செய்­துள்ளார்.

குறிப்­பி­டத்­தக்க தொழில் முயற்­சி­யா­ளரும் பரோ­ப­கா­ரி­யு­மான இள­வ­ரசி ரீமா இரா­ஜ­தந்­திர நிய­மனம் கிடைக்கப் பெறு­வ­தற்கு முன்­ன­தாக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பொது விளை­யாட்டு அதி­கார சபையில் பெண்கள் விவ­காரப் பிரிவின் பிரதித் தலை­வி­யாக பதவி வகித்­தி­ருந்தார்.

இந்த சத்­தி­யப்­பி­ர­மாண நிகழ்வில் ஒஸ்­ரி­யா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசர் அப்­துல்லாஹ் பின் காலித் பின் சுல்தான், கெம­ரூ­னுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக அப்­துல்லாஹ் மொஹமட் அல் ஷுஐபி மற்றும் சைபி­ர­ஸுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக காலித் பின் மொஹமட் அல்-­ஷாரிப் ஆகி­யோரும் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றிய இள­வ­ரசர் காலித் பின் பந்தர், மன்னர் சல்மானுக்கும் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் தன்னை ஐக்கிய இராச்சியத்திற்கான சவூதி அரேபிய தூதுவராக நியமித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.