துருக்கியின் ரஷ்ய ஏவுகணை கொள்வனவின் பின்னணி என்ன?

0 1,036
  • ஏ.எச்.ரெஸா உல் ஹக்

(சிரேஷ்ட பொறிமுறைப் பொறியியலாளர்)

துருக்கி,S-400வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை(Air & Missile Defence System)ரஷ்­யா­வி­ட­மி­ருந்து தரு­விப்­பது ஒரு முடி­வா­கி­விட்ட(Done Deal)ஒப்­பந்­த­மாகும்.அதில் பின்­வாங்­குதல் என்­பது கிடை­யாது!துருக்­கியைச் சுற்றி ஏவு­க­ணைகள் சூழ்ந்­துள்­ளன.நேட்­டோ­வா­னது துருக்­கியின் வான் பரப்­பினைப் பாது­காப்­பதில் வினைத்­திறன் குறைந்­த­தா­க­வுள்­ளது.நாம் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து    S-400 வான்­பா­து­காப்பு ஏவு­க­ணை­களைக் கொள்­வ­னவு செய்­கின்றோம் என்­ப­தற்­காக அமெ­ரிக்கா,துருக்­கிக்கு F-35 போர்­வி­மா­னங்­களை வழங்­கு­வதா?இல்­லையா? என்று கேள்­வி­யெ­ழுப்ப முடி­யாது.ஏனெனில் F-35 போர் விமா­னங்­களை துருக்­கிக்கு வழங்­கு­வ­தா­னது அமெ­ரிக்கா, வெறு­மனே ஒரு பொரு­ளினை உற்­பத்தி செய்து துருக்­கிக்கு வழங்­கு­வது போன்­ற­தன்று.F-35 உற்­பத்­தி­யா­னது, நேட்டோ நாடுகள் அனைத்தும் சேர்ந்த ஒரு கூட்டு (Join Project) உற்­பத்தித் திட்­ட­மாகும். இத்­திட்­டத்­திற்கு துருக்கி 1.2 பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்­துள்­ளது. இன்னும் 2.3 பில்­லி­யன்கள் இத்­திட்­டத்­திற்­காக நகர்த்­தப்­ப­ட­வுள்­ளது. மேலும் அப் போர் விமா­னத்தின் பல பாகங்­களை துருக்கி உற்­பத்தி செய்து இத்­திட்­டத்­திற்கு வழங்­கியும் வரு­கின்­றது! என துருக்­கிய வெளி­வி­வ­கார அமைச்சர் நேட்­டோவின் 70ஆவது ஆண்டு நிறை­வினை முன்­னிட்ட கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ரஷ்­யா­வி­ட­மி­ருந்து நேட்டோ அணி நாடான துருக்கி, S-400 வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களைக் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ளமை குறித்து பெரும் சர்ச்­சை­யினை அமெ­ரிக்கா கிளப்­பி­விட்­டுள்­ளது.அதன் உச்ச கட்­ட­மாக, துருக்கி S-400 வான் பாது­காப்பு ஏவு­க­ணை­களை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து கொள்­வ­னவு செய்­யு­மெனில்   நேட்­டோவின் அனைத்து நாடு­களும் முத­லீடு செய்­துள்ள கூட்டு உற்­பத்தித் திட்­ட­மான அமெ­ரிக்க F-35 போர்­வி­மா­னங்­களை துருக்கி பெற்றுக் கொள்­வதா? அல்­லது ரஷ்­யா­வி­ட­மி­ருந்து S-400 வான்­பா­து­காப்பு ஏவு­க­ணை­களைப் பெற்றுக் கொள்­வதா? என்­ப­தனை துருக்கி தெரிவு செய்து கொள்­ளட்டும் என அமெ­ரிக்க தரப்பு அறி­வித்­தி­ருந்­தது. அமெ­ரிக்க அறி­விப்­பிற்­கான துருக்­கியின் பிர­தி­ப­லிப்பே, மேற்­படி அதன் வெளி­வி­வ­கார அமைச்­சரின் கூற்­றாக வெளிப்­பட்­டது. துருக்­கிக்கும் அமெ­ரிக்­கா­விற்­கு­மி­டை­யி­லான வான் பாது­காப்புக் கட்­ட­மைப்பு தொடர்­பான சர்ச்சை,மூலோ­பாய மற்றும் ராஜ­தந்­திர ரீதி­யான பின்­ன­ணி­களைக் கொண்­டுள்­ளது. மேலும் அது, உலகின் பிர­பல பல முகாம்­களின் (Power Blocks)பாது­காப்பு மற்றும் அவற்றின் போரியல் விஞ்­ஞா­னத்­துடன் நெருங்­கிய தொடர்­பினைக்  கொண்­டுள்­ளது. இதனை சற்று விரி­வாகக் காண்போம்.

அமெ­ரிக்க அணி­யி­னது வளை குடா யுத்­தங்கள் மற்றும் பிற போர் முன்­னெ­டுப்­பு­களின் அனு­ப­வங்கள் என்­பன 21ஆம் நூற்றாண்டின் போரி­ய­லினை புதிய பரி­மா­ணத்­திற்கு மாற்­று­வதில் செல்­வாக்குச் செலுத்­தின.நேட்டோ அணி­யி­னது ஒவ்­வொரு அங்­கத்­துவ நாட்­டி­னதும் மூலோ­பாய இலக்­குகள் மறு­த­லை­யாக நேட்­டோ­வி­னது மேலோங்­குகை மற்றும் பாது­காப்பு என்­ப­ன­வற்­றினை நிச்­ச­யிப்­பதில் புதிய அணு­கு­முறை பிர­யோ­கிக்­கப்­பட்­டது.இத­ன­டி­யாக கூட்டு பாது­காப்பனை (Collective Defence) நிச்­ச­யிப்­பதில் நேட்டோ அணி நாடுகள் தமது சொந்த இராணுவ தள­வா­டங்­க­ளுக்குப் பிரத்­தி­யே­க­மான மொத்த நேட்டோ அணியும் ஒரே வகை­யான இராணுவ தள­பா­டங்­க­ளையும் முறை­மை­க­ளையும் (Same Military Hardware and Related Systems) தமது பாது­காப்பில் ஈடு­ப­டுத்­துதல் வேண்­டப்­பட்­டது. ஏனெனில் போரொன்றின் போது குறிப்­பாக ரஷ்­யா­வு­ட­னான போரொன்றின் போது நேட்­டோவின்  முழு அள­வி­லான தயார் நிலை­யினை (Full Spectrum Readiness)நிச்­ச­யிப்­ப­தி­னூ­டாக கூட்­டணி மூலோ­பா­யத்தின் வினைத்­தி­ற­னினை உறு­திப்­ப­டுத்­து­வதே இதி­லுள்ள பிர­தான வியூ­க­மாகும்.அவ்­வா­றில்­லாத போது, நேட்டோ அணி­யி­லுள்ள ஒவ்­வொரு நாடும் அவற்­றிற்­கே­யு­ரிய இராணுவ தள­பா­டங்­க­ளையும் முறை­மை­க­ளையும் பயன்­ப­டுத்­து­மெனில் அத்­த­ள­பா­டங்­களின் அவற்­றிற்­கே­யு­ரிய குறை­பா­டுகள் நேட்­டோவின் மொத்த தாக்­குதல் வினைத்­தி­றனை பாதிப்­ப­துடன் குறித்த ஒரு போரின் பிர­தான மூலோ­பா­யத்­தினை கேள்விக் குறி­யாக்­கி­விடும் நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது.எனவே தான் அனைத்து நேட்டோ நாடு­களும் ஒரே மாதி­ரி­யான இராணுவ தள­வா­டங்­க­ளையும் முறை­மை­க­ளையும் கொண்­டி­ருக்க வேண்டும் என்­கின்ற புதிய அணு­கு­மு­றை­யா­னது நேட்­டோ­வினுள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத­ன­டி­யாக நேட்­டோவின் மத்­திய கட்­டளைத் தளத்­திற்கு ஒரு குறிப்­பிட்ட போர் நிலைமை மற்றும் பாது­காப்பு அச்­சு­றுத்தல் குறித்த சூழலில் வியூகம் அமைத்தல் ; கட்­டளை மற்றும் கட்­டுப்­பாடு(Command & Control)என்­ப­வற்­றினை மேற்­கொள்ள முடி­யு­மாக இருக்கும்.எனினும் நேட்­டோவின் இந்த அணு­கு­மு­றை­யா­னது நேட்டோ அங்­கத்­துவ நாடுகள் ஒவ்­வொன்றும் அவற்­றிற்­கே­யு­ரிய இராணுவ தள­வா­டங்கள் மற்றும் முறை­களை (Native and Indigenous Defence Hardware & Systems) தமது தனிப்­பட்ட ரீதியில் பயன்­ப­டுத்­து­த­லினைத் தடுக்­க­வில்லை. தடுக்­கவும் முடி­யாது. ஏனெனில் ஒரு நாடு நேட்­டோவில் அங்­கத்­துவம் வகிக்­கின்­றது என்­ப­தற்­காகத் தனது நாட்­டி­னது சுய­மான விஞ்­ஞான மற்றும் தொழி­நுட்ப முன்­னெ­டுப்­புகள்;தமது பாது­காப்பு சம்­பந்­த­மான சுய­மான முடி­வு­களை எடுப்­பதில் ஒரு நாட்­டிற்­கு­ரிய இறை­யாண்­மை­யான உரிமை என்­ப­வற்­றினை அக்­கூட்­ட­ணிக்கு அடகு வைப்­ப­தற்கோ அல்­லது முற்­றிலும் அதன் மீது  தங்­கி­யி­ருப்­ப­தற்கோ எந்­த­வொரு நாடும் விரும்­பப்­போ­வ­தில்லை.அத்­த­கைய அழுத்­தத்­தினை நேட்டோ, குறித்த நாட்டின் மீது பிர­யோ­கிக்க முற்­படும் எனில் இந்­நாடு அக்­கூட்­ட­ணிக்கு வழங்கும் ஒத்­து­ழைப்­பினைத் தளர்த்­து­வ­தற்கு இவ்­வ­ழுத்தம் எத்­த­னிக்கும்.ஒரு பாது­காப்புக் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் போது அனைத்து அங்­கத்­துவ நாடு­க­ளி­னதும் பாது­காப்­பினை நிச்­ச­யிப்­பதின் பாலான பல கடப்­பா­டு­களை குறித்த ஒவ்­வொரு நாடும் பேண­வேண்­டி­யமை வாஸ்­தவம் தான். எனினும் அதனை முற்­ப­டுத்தி அக்­கூட்­ட­ணியின் எந்­த­வொரு நாடும் தமது மறை­வான நிகழ்ச்சி நிரல் மற்றும் காழ்ப்­பு­ணர்வின் கார­ண­மாக குறித்­த­வொரு நாட்­டினை அக்­கூட்­ட­ணியின் மாயை­யினால் அப் பெய­ரினைப் பயன் படுத்திக் கட்­டுப்­ப­டுத்த முனை­வதும் ஏற்றுக் கொள்ள முடி­யாத விட­ய­மாகக் கரு­தப்­படும். ஆக, அமெ­ரிக்­கா­வா­னது துருக்­கியின் ரஷ்­யா­வி­ட­மி­ருந்­தான S-400 ஏவு­கணைக் கொள்­வ­ன­வா­னது, நேட்­டோவின் பிர­தான தாக்­குதல் வியூகம் மற்றும் அதனை அமுல்­ப­டுத்தும் பொறி­மு­றை­யி­லுள்ள முறை­மை­க­ளுடன் (Incompatible with Defence and Operation Mechanism)ஒத்­துப்­போகா­தது என்­கின்ற அடிப்­ப­டையில் துருக்­கியின் மீதான தமது குற்­றச்­சாட்­டினை முன்­வைப்­ப­தற்­கான அடிப்­ப­டை­யாக முன் நகர்த்­து­கின்­றது. அதற்கு பதி­லாகத் துருக்கி,ரஷ்­யா­வி­ட­மி­ருந்து நாம் பெறப்­போகும் வான்­பா­து­காப்பு ஏவு­க­ணை­களை (எமது பங்­கிற்­கான) நேட்­டோவின் பாது­காப்பு பொறி­முறை மற்றும் முறை­மை­யி­னுள்ளே நாம் புகுத்­தப்­போ­வ­தில்லை என்­ப­துடன் இது நமது சொந்த பாது­காப்­பிற்­கான பிர­யோ­க­மான ஏற்­பா­டாகும் என அறி­வித்­தது.ஒரு படி மேலே சென்று, மேற்­படி S-400 ரஷ்யன் வான்­பா­து­காப்பு கட்­ட­மைப்­பினை தமது இராணு­வத்தில் உள்­வாங்­கு­வ­தா­னது நேட்­டோவின் தமது பங்­கிற்­கான செயற்­பாட்டின் வினைத்­தி­ற­னினைக் குறைத்து நேட்­டோவின் மூலோ­பா­யத்­தி­னதோ பொறி­மு­றை­யி­னதோ செயற்­பாட்­டிற்கு மறைப்­பெ­று­மா­னத்தில் தாக்கம் (Negative Impect) செலுத்­துமா என்­ப­தனை உறு­தி­ப­டுத்­து­வ­தற்கு ஒரு தொழி­நுட்பக் குழு­வினை (Technical Investigation Committee) நேட்டோ அமைக்­கட்டும் என துருக்கி உறு­தி­யாக அறி­வித்­துள்­ளது. நாம் இன்னும் சற்று விரி­வாகச் செல்வோம்.

வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­புகள்(Air & Missile Defence System Batteries)என்­பது ஒரு நாட்டின் பாது­காப்­புடன் மிக முக்­கிய வகி­பா­கத்­தினை ஆற்­ற­வல்ல பிர­தான வியூ­க­மாகும். அது வான் வழி­யாக ஒரு நாட்டின் மீதான விமான மற்றும் ஏவ­கணைத் தாக்­கு­த­லினை முறி­ய­டிப்­ப­தற்கு இது அவ­சியம். ஒரு நாட்­டி­னது இராணுவம், தனது வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை நவீன மயப்­ப­டுத்திக் கொள்ள வில்­லை­யெனில் அந்­நாடு மிகச் சுல­ப­மாக தனது முப்­ப­டை­களின் தளங்கள் மற்றும் கலங்­களை (Military Bases and Defence Assets) எதிரித் தாக்­கு­தலில் அழி­வுக்­குட்­ப­டுத்திக் கொள்ள வேண்டி ஏற்­ப­டு­வ­துடன் குறித்த போரினை தோற்க வேண்­டியும் ஏற்­படும். ஏனெனில்  வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­புகள் ஒரு நாட்டின் ‘பிராந்­திய மறுப்பு’ மூலோ­பா­யத்­தினை பலப்­ப­டுத்­து­கின்­றது. அதா­வது, தமது வான்,தரை மற்றும் கடல் பரப்­பி­னூ­டான எதி­ரிப்­ப­டை­களின் நட­வ­டிக்­கை­யினை முறி­ய­டித்து அப் பிர­தே­சத்தில் சுயா­தீ­ன­மாக எதி­ரியை நக­ர­வி­டாமல் அவை தடுக்­கின்­றன. ஆக, தரை­யி­லி­ருந்து வானுக்­கான (Surface to Air-SAM) S-400 ட்ரியம்ஃப் ஏவு­க­ணைகள்  , வானின் சூரப்­பு­லி­க­ளான விமான மற்றும் ஏவு­கணை எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளாகும். தரைக்கு மேல் பதி­னாறு அடிகள்(16) முதல் தொன்­னூற்றி எட்­டா­யிரம்(98400) அடிகள் வரையில் மேலெ­ழுந்து நானூறு கிலோ­மீற்­றர்கள் (400km) வரை எதிரி விமா­னத்­தையோ ஏவு­க­ணை­யி­னையோ விரட்டித் தாக்கும் திறன் மிக்­கவை. அதி நவீன அமெ­ரிக்க F-35 முதல் எத்­த­கை­ய­தொரு போர் விமா­னமும் இத­னி­ட­மி­ருந்து தப்பி தனது இலக்கைத் தாக்­கி­விட்டுச் செல்­வது என்­பது சிம்­ம­சொப்­ப­னமே. ஆக, இத்­த­கைய வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­க­ளையே துருக்கி,  ரஷ்­யா­வி­ட­மி­ருந்து கோரி­யுள்­ளது. துருக்கி ,அதி நவீன (SAM) S-400 ட்ரியம்ஃப்  ஏவு­க­ணை­க­ளுடன் கூடிய வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களைப்(Batteries) பெற்று தமது ‘பிராந்­திய மறுப்பு’ மூலோ­பா­யத்­தினை பலப்­ப­டுத்­திக்­கொள்ள எத்­த­னிப்­பது ஏன்?

மிக நீண்ட கால­மாக ஈரா­னுக்கும் ரஷ்­யா­விற்­கு­மி­டையில் இழு­ப­றியில் இருந்த  S-300 (SAM) வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­புகள் குறித்த ‘டீல்’ அமெ­ரிக்க பராக் ஒபாமா நிர்­வாகம் இணைத் தலைமை நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அமெ­ரிக்க ஈரா­னிய அணு ஒத்­து­ழைப்பின் பின்­ன­ரான ஈரா­னுக்­கெ­தி­ராக இருந்த தடை நீக்­கப்­பட்­ட­தனைத் தொடர்ந்து ஒரு முடி­வுக்கு வந்­தது. அதனைத் தொடர்ந்தே ரஷ்யா மேற்­படி கட்­ட­மைப்­பு­களை ஈரா­னுக்கு வழங்­கி­யது.  ஈரான், ரஷ்­யா­வி­ட­மி­ருந்து  பெற்ற  S-300 (SAM) வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை  பரீட்­சித்துக் காட்­டி­யது. ஈரானின் S-300 தரு­விப்­பா­னது, அமெ­ரிக்­கா­விற்கோ அல்­லது இஸ்­ரே­லிற்கோ உண்­மையில் ஒரு சவால் அல்ல.ஏனெனில் ஐந்தாம் தலை­முறை போர்­வி­மா­னங்­களை விமா­னப்­ப­டையில் ஈடு­ப­டுத்தும் முஸ்­தீ­பு­களை இவை ஏற்­க­னவே எடுத்­துள்­ளன.  ஆக, மத்­திய கிழக்கின் F -15 மற்றும் F -16 அல்­லது அதனை ஒத்த போர்­வி­மா­னங்கள் சேவையில் உள்ள நாடு­க­ளுக்கு தமது சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஈரானின் S-300 தரு­விப்­பா­னது அழுத்தங் கொடுக்க வல்­லன. ஆக, சவூதி தலை­மைய நாடுகள் F-22 முதல் F-35 ஐந்தாம் தலை­முறை போர்­வி­மா­னங்­களைப் பெற எத்­த­னிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் இங்கு எழு­கின்­றது. எனினும் ஈரான் முன்­னெ­டுத்த இந்த  S-300 டீலா­னது வினைத்­திறன் குறைந்த ஒரு முத­லீ­டா­கவே  பெரும்­பாலும் இருக்­கின்­றது. ஏனெனில் ரஷ்யா தனது பழைய மாதிரி S-300PS வகை­ய­றாக்­களை நீக்­கி­வ­ரு­கின்­றது. நவீன மயப்­ப­டுத்­தப்­பட்ட  தற்­போ­தைய தனது வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­க­ளாக S-400 கட்­ட­மைப்­பு­களை S-300VM4; BUK-M3; S-350 Vityaz ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து சேவையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் S-500 ‘ப்ரிமி­தியஸ்’ பெட்­ட­ரி’­களை கள­மி­றக்கும்  முஸ்­தீ­பு­களை ரஷ்யா எடுத்து வரு­கின்­றது. ஆக, ஈரா­னி­னாலும் ஈரா­னிய ஆத­ரவுத் தளங்­க­ளி­னாலும் போற்­றப்­பட்ட S-300 கொள்­வ­ன­வா­னது உண்­மையில் இஸ்­ரே­லுக்கும் அமெ­ரிக்­கா­விற்­குமே மிகப் பெரிய வெற்­றியை வழங்­கி­யுள்­ளது. அது எவ்­வா­றெனில், இஸ்­ரே­லா­னது தனது F -15 மற்றும் F -16 அல்­லது அதனை ஒத்த போர்­வி­மா­னங்கள், ஈரான் பெற்­றுள்ள  S-300 ஏவு­க­ணை­களின் தாக்­குதல் அச்­சு­றுத்­த­லினைக் கொண்­டுள்­ளன எனக்­காட்­டு­வதன் மூல­மாக அதி நவீன ஐந்தாம் தலை­முறை F-35 போர்­வி­மா­னங்­களை இஸ்­ரே­லுக்கு எந்த எதிர்ப்­பு­மின்றி பெற்றுக் கொடுக்கும் அமெ­ரிக்க முஸ்­தீ­புக்குத் துணை போனது. ஆக, இஸ்­ரே­லி­னது அதிக எண்­ணிக்­கை­யி­லான F -35 போர் விமா­னங்­களின்  ‘ஓடர்’இன் முதற்­கட்­ட­மாக இரண்டு F -35 போர் விமா­னங்கள் இஸ்ரேல் பெற்­றுக்­கொண்­டது. இவ்­வா­றா­கவே நகர்ந்து இஸ்­ரே­லா­னது ஈரா­னிய வான் அச்­சு­றுத்­த­லினைப் பறை­சாற்றி அண்­மையில் உலகின் அதி நவீன வான் பாது­காப்பு ஏவு­கணைக் கட்­ட­மைப்­பான அமெ­ரிக்க ‘தாட்’ கட்­ட­மைப்­பினை ட்ரம்ப் நிர்­வா­கத்­தி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டது. ஆக, இஸ்­ரே­லா­னது F -35 களை தமது வான் படையில் சேவையில் ஈடு­ப­டுத்தும் போது முதற்­கட்­ட­மாக அதனை சம­நி­லைப்­ப­டுத்த துருக்­கி­யா­னது தமது பிராந்­திய மறுப்பு மூலோ­பா­யத்­தினை F -35 களை முகங்­கொ­டுக்கத் தக்­க­வாறு போஷித்­துக்­கொள்ள வேண்டும். ஆக­வேதான், S-400 களைப் பெறும் முஸ்­தீ­பு­களை துருக்கி முடுக்­கி­யுள்­ளது. விட­யங்கள் இத்­துடன் முடி­ய­வில்லை.

துருக்கி, ரஷ்­யா­வி­ட­மி­ருந்து S-400 களைப் பெறும் முஸ்­தீ­பு­களை அமெ­ரிக்கா எதிர்ப்­பது அதனை முடக்­க­ எத்­த­னிப்­பது இஸ்­ரே­லு­ட­னான மூலோ­பாயப் பாது­காப்பு அச்­சு­றுத்தல் என்­பது போக மேலும் பல விட­யங்­க­ளுடன் தொடர்­பு­ப­டு­கின்­றது. துருக்கி நேட்­டோவின் அங்­கத்­துவ நாடு என்­கின்ற போதிலும் அமெ­ரிக்கா, எர்­டோவான் நிர்­வா­கத்­தினை தமது பூகோள இலக்­கு­களை அடை­வ­தற்­கான அச்­சு­றுத்­த­லா­கவே பார்க்­கின்­றது. துருக்­கி­யா­னது அமெ­ரிக்க அணிக்கு அசைக்க முடி­யாத மூலோ­பாயப் பங்­காளி என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை! எனினும் அது, எர்­டோவான் நிர்­வா­க­மற்ற தமது சொல்­லுக்குக் கட்­டுப்­படும் வேறொரு துருக்­கி­யாகும்!! பொது­வாகத் துருக்­கியை அமெ­ரிக்க அணிக்கு தவிர்க்க முடி­யாமல் இருப்­ப­தற்கு துருக்­கியின் அமை­விடம்; புவியியல் ரீதி­யான கார­ணங்கள் என்­பன துருக்­கியின் மூலோ­பாய வகி­பா­கத்தின் முக்­கி­யத்­து­வத்­தினை போஷிக்­கின்­றது. ஆனால், எர்­டோவான் நிர்­வா­கத்தின் முஸ்லிம் உலகம் சார்­பான முன்­னெ­டுப்­புகள் மற்றும் கொள்­கைகள் என்­பன அமெ­ரிக்க கூட்­ட­மைப்­பி­னது கூட்டு மூலோ­பாயம் மற்றும் நலன்­களைப் (Coalition Strategy and Interests) போஷிப்­பதில் அச்­சு­றுத்­த­லாகச் செயற்­படும் என அமெ­ரிக்கத் தரப்பு கரு­து­கின்­றது. எர்­டோவான் நிர்­வா­கத்­திற்கு எதி­ரான இராணுவக் கல­கத்­திற்கு பின்­பு­லத்­தினை அமெ­ரிக்கா வழங்­கி­ய­தாக துருக்­கியின் பெரும்­பா­லா­ன­வர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் அதனை முத­லிட்டு மிகப் பெரிய வெற்­றி­யினை எர்­டோவான் சுவீ­க­ரித்துக் கொண்­டமை அவ­ரு­டைய நிர்­வா­கத்தின் முதிர்ந்த அர­சியல் சாணக்­கி­யத்­தினை உல­கிற்குப் பறை­சாற்றப் போது­மாக இருந்­தது. அதில் ஒன்று ரஷ்யன் போர் விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­யதில் புட்­டி­னுடன் ஏற்­பட்ட முறு­க­லினை நீக்கிக் கொண்டு மீண்டும் ரஷ்யாவுடன் மூலோபாய உறவுகளை எர்டோவான் பலப்படுத்திக் கொண்டமை. மற்றையது, துருக்கியில் மேலும் தமது பலத்தினை எர்டோவான் அதிகரித்துக் கொண்டமை. எனவே, ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்குமிடையில் இருந்து கொண்டு ஐரோப்பாவின் இயக்கத்திற்கு குருதியினை ‘பம்ப்’ பண்ணும் இயற்கை வாயு குழாய்களின் மத்திய நிலையத்தினைக் கட்டுப்படுத்திக்கொண்டு இரண்டு பல முகாம்களுக்கிடையில் சாணக்கிய அரசியல் நடத்துகின்றது துருக்கியின் எர்டோவான் நிர்வாகம். ஆக, முற்று முழுதாக நேட்டோவில் தங்கியிராமல் தனது நிர்வாகத்தினை மறைமுகமாக மாற்றீடு செய்ய எத்தனிக்கும் எத்தகைய நவீன வான் அச்சுறுத்தலுக்குமெதிராக எர்டோவான் நிர்வாகம் தன்னை பலப்படுத்திக்கொள்ள நினைக்கின்றது. மேலும் பத்து ஆண்டுகளாக அமெரிக்காவிடமிருந்து அமெரிக்க ‘பேட்ரியட்’ வான் பாதுகாப்பு கட்டமைப்புகளைக் கேட்டும் அதனை அமெரிக்கா, துருக்கிக்கு வழங்காத அமெரிக்க காழ்ப்புணர்வு மற்றும் பக்கச் சார்பான போக்கு துருக்கியை   ரஷ்யாவின் பக்கம் தனது வான்பாதுகாப்பு குறித்து நகர நிர்ப்பந்தித்துள்ளது. மேலும் முற்றிலும் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பக்கம் சாராமல்,நம்பிக்கை வைக்காமல் ரஷ்யாவைக் கொண்டு தமது இருப்பினை சமநிலைப்படுத்தி பலப்படுத்திக் கொள்கின்றது துருக்கிய எர்டோவான் நிர்வாகம். இதனூடாக மிகப் பெரிய வீழ்ச்சியிலுள்ள அச்சுறுத்தலிலுள்ள முஸ்லிம் உலகின் தற்போதைய சூழலுடன்  அதனை முகங்கொடுப்பதற்கான தமது வெளிநாட்டு அரசியல் மூலோபாயத்தினை போஷித்துக் கொள்வதற்கு துருக்கிய எர்டோவான் நிர்வாகம் முனைகின்றது. இதனையே ரஷ்யாவிடமிருந்து துருக்கி S-400 களைப் பெறும் முஸ்தீபுகள் சுட்டிக் காட்டுகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.