அல்­குர்ஆன் சிங்­கள மொழி விளக்­க­வுரை வெளியீட்டு நிகழ்வு

0 1,110

எமது நாட்டின் வர­லாற்றில் முக்­கிய நிகழ்­வொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அன்று சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மேல் மாகாண ஆளுநர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், பௌத்த குரு­மார்கள், கிறிஸ்­தவ, இந்து குரு­மார்கள், கல்­வி­மான்கள், சிரேஷ்ட உல­மாக்கள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள், வெளி­நாட்டுத் தூது­வர்கள், முன்னாள் அமைச்­சர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளர், அர­புக்­கல்­லூ­ரி­களின் அதி­பர்கள், உல­மாக்கள் எனப் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்பின் முதற்­பி­ரதி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்­தி­யினால் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. நிகழ்வில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கும் அல்­குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதி இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டது.

நிகழ்வில் உரை­யாற்­றிய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, ‘முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும், இஸ்லாம் தொடர்­பா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களும், மோச­மான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவற்­றுக்­கான தெளி­வு­க­ளையும் சரி­யான பதில்­க­ளையும் வழங்க வேண்­டிய கட்­டாய நிர்ப்­பந்­தத்­திற்கு இஸ்­லா­மிய அறி­ஞர்­களும், கல்­வி­மான்­களும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.

இந்தச் சவாலை ஏற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை புனித அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­யி­லான விளக்­க­வு­ரையை அனை­வரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகு மொழி­ந­டையில் மொழி­பெ­யர்க்கும் பணியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்­பித்து இன்று நிறைவு செய்­துள்­ளது’ என்றார்.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து முன்­னெ­டுத்த பொது­பல சேனா அமைப்பு குர்­ஆனை நிந்­தனை செய்­தது. அவ்­வ­மைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சா­ர­தேரர் குர்ஆன் தீவி­ர­வா­தத்தைப் போதித்­தி­ருப்­ப­தாக சவால்­விட்டார். அல்­லாஹ்­வையும், குர்­ஆ­னையும், நபிகள் (ஸல்) அவர்­க­ளையும் நிந்­தித்தார். குர்ஆன் தொடர்­பான விளக்­கங்­களை உலமா சபை ஞான­சா­ர­தே­ர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கி­யி­ருக்­கி­றது. அவ­ரது சந்­தே­கங்­க­ளுக்கு தெளிவு வழங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குர்ஆன் விளக்­க­வுரை சிங்­கள மொழியில் வெளி­யீடு செய்­ததன் மூலம் இஸ்லாம், தொடர்­பான சந்­தே­கங்­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

‘சிங்­கள மொழி மூல­மான குர்ஆன் விளக்­க­வுரை முழு நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் என நம்புகிறோம்’ என்றும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

மொழி­ரீ­தியில் நாம் பிள­வு­பட்டு நாங்கள் ஒவ்­வொ­ரு­வரும் குரோதம் கொள்­வ­தற்கும், சந்­தே­கக்கண் கொண்டு நோக்­கு­வ­தற்கும் எமது நாட்டு அர­சி­யல்­வா­தி­களின் தவ­று­களே காரணம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன­து­ரையில் குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், “வர­லாற்றை நாம் திரும்பிப் பார்க்­கையில் அர­சி­யல்­வா­திகள் புரிந்­துள்ள கடு­மை­யான தவறு என்­ன­வென்றால் சிங்­களம், தமிழ், முஸ்லிம் என இன­ரீ­தியில் பாட­சா­லை­களை வேறு­ப­டுத்­தி­ய­தாகும்.

உல­மா­ச­பையின் தலைவர் கூறி­யது போன்று அல்­குர்­ஆனை சிங்­கள மொழியில் மொழி­பெ­யர்ப்புச் செய்­தமை ஒரு முக்­கிய நிகழ்­வாக வர­லாற்றில் இடம்­பெறும். இன்று உலகில் மக்கள் பிள­வு­பட்டு இருப்­ப­தற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. பணம் உள்­ள­வர்கள் பணக்­கா­ரர்கள் என்றும், பணம் இல்­லா­த­வர்கள் ஏழைகள் என்றும் பிள­வு­பட்­டி­ருக்­கி­றார்கள். அத்­தோடு பேசும் மொழி தொடர்பில் மக்கள் பிளவுபட்­டி­ருப்­பது உலகில் பாரிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. இது அபி­வி­ருத்­தியை எட்­டாத சமூ­கத்­திற்­கான அடை­யா­ள­மாகும். கல்­வியில் உயர்ந்த சமூகம், அறி­வுள்ள சமூகம் மற்றும் முன்­னேற்றம் கண்­டுள்ள சமூகம் மொழி­யினால் வேறு­ப­டு­வ­தில்லை, பிரி­வு­க­ளுக்­குள்­ளா­வ­து­மில்லை.

எங்­க­ளது நாட்டை ஆங்­கி­லேயர் கைப்­பற்றி ஆட்சி செய்த காலத்தில் சிங்­கள போராட்­டக்­கா­ரர்­க­ளுடன் இணைந்து முஸ்­லிம்­களும் ஆங்­கில ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கெ­தி­ராக போரா­டி­னார்கள். சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக போரா­டி­னார்கள். 1940 காலப்­ப­கு­தியில் சிங்­க­ளவர், தமிழர், இஸ்­லா­மியர் என வேறு­பட்ட மொழிகள் பேசும் மக்­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக போரா­டி­னார்கள். அத­னா­லேயே எங்­க­ளுக்கு சுதந்­திரம் கிடைத்­தது.

என்­றாலும் எமது நாட்டின் அர­சியல் வாதி­களின் தவ­றினால் நாங்கள் மொழி­ரீ­தியில் பிள­வு­பட்டு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கி­டையில் குரோ­தங்­களை வளர்த்­துக்­கொண்டோம். மொழி­யி­னாலே  எங்­க­ளுக்குள் பிரிவு ஏற்­பட்­டது. நாங்கள் அனை­வரும் ஒரே வகை­யான உணவைச் சாப்­பிட முடி­யு­மென்றால் எமது உடல் அவ­ய­வங்கள் ஒரே மாதி­ரி­யென்றால் ஏன் நாங்கள் பிரிந்­தி­ருக்க வேண்டும். வேறு­பட்டு நிற்க வேண்டும். எங்கள் நாட்டின் புத்­தி­ஜீ­வி­களும் மார்க்க அறி­ஞர்­களும் இது தொடர்பில் சமூ­கத்தை  தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்த 50-–60 வருட கால எல்­லைக்குள் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களின் ஒற்­றுமை தொடர்பில் மகிழும் அதே­வேளை பிள­வுகள் தொடர்பில் நாம் கவ­லைப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்கு நான் கட்சி வேறு­பா­டு­க­ளின்றி அர­சி­யல்­வா­திகள் மீதே குற்றம் சுமத்­து­கிறேன். இந்­தி­யாவில் சுமார் 400 மொழிகள் பேசும் மக்கள் வாழ்­கி­றார்கள். அவர்கள் எவ­ரிடமும் உங்கள் சாதி என்ன என்று கேட்டால் அவர்கள் அனை­வரும் நாங்கள் இந்­தி­யர்கள் என்றே தெரி­விக்­கி­றார்கள். எமது நாட்­டிலோ சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என நாம் பிரிந்­தி­ருக்­கிறோம். இதுவே எங்கள் நாட்­டி­னது முன்­னேற்­றத்­திற்குத் தடை­யாக உள்­ளது.

அத்­தோடு எமது வர­லாற்றில் அர­சி­யல்­வா­திகள் புரிந்­துள்ள பாரிய தவறு பாட­சா­லை­களை சிங்­கள மகா வித்­தி­யா­லயம், தமிழ் மகா வித்­தி­யா­லயம், முஸ்லிம் மகா வித்­தி­யா­லயம் என்று வேறு­ப­டுத்­தி­யுள்­ள­மை­யாகும். இது கடந்த பல வரு­டங்­க­ளாக நாம் செய்­துள்ள பாரிய தவறு என நான் காண்­கிறேன். சில வாரங்­க­ளுக்கு முன்பு பொலன்­ன­றுவை நகரில் பாட­சாலை திறப்பு விழா ஒன்­றுக்கு சென்­றி­ருந்தேன். அந்தப் பாட­சா­லையில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் கல்வி பயில்­கி­றார்கள். இந்த உதா­ரணம் கடந்த காலங்­களில் செயற்­பட்­டி­ருந்தால் மக்­க­ளுக்­கி­டையே நிலவும் பிள­வுகள், சந்­தேகம் என்­பன இன்று இருந்­தி­ருக்­காது.

அல்­குர்ஆன் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளமை இந்­நாட்டில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேற்­கொண்ட சிறந்த முயற்­சி­யாகும். சிங்­கள மொழி பெயர்ப்­பினை பாட­சாலை மாண­வர்கள் எந்த வேறு­பா­டு­க­ளு­மின்றி வாசிப்­பார்கள். குர்­ஆனின் கோட்­பா­டு­களை தெளி­வாக விளங்கிக் கொள்­வார்கள். இதுவே மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

நாங்கள் பௌத்­தர்கள் என்ற வகையில் திரீ­பீடம், முஸ்­லிம்­களின் அல்­குர்ஆன், இந்­துக்­களின் பக­வத்­கீதை என்­ப­ன­வற்றை நாம் அனை­வரும் படித்துக் கொள்­வோ­மென்றால் நாங்கள் மிகவும் நல்­ல­வர்­க­ளாக புரிந்­து­ணர்வு உள்­ள­வர்­க­ளாக இருப்போம். அத்­தோடு எங்­க­ளுக்­கி­டையில் இருக்கும் வைராக்­கியம் இல்­லாமற் போகும். சிங்­க­ளவர், முஸ்­லிம்கள், தமிழர் என்று வேறு­ப­டு­வ­த­னா­லேயே எங்­க­ளுக்குள் சண்­டைகள் உரு­வா­கின்­றன, முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன.

பௌத்­த­ராக இருப்­ப­தென்றால் பௌத்த கோட்­பா­டுகள், சிந்­த­னைகள் அவ­ரிடம் இல்­லா­விட்டால் அதில் பல­னில்லை. அனைத்து சம­யங்­க­ளி­னதும் கோட்­பா­டுகள் உரிய முறையில் பின்­பற்­றப்­ப­டு­மாயின் முரண்­பா­டுகள் ஏற்­ப­டாது. வன்­மு­றைகள் உரு­வா­காது.

பௌத்­தர்கள் என்­றாலும், இந்­துக்கள் என்­றாலும் கிறிஸ்­த­வர்கள் என்­றாலும் தங்­க­ளது சமய கொள்­கை­களை சரி­யாக பின்­பற்­றா­மை­யி­னா­லேயே பிரச்­சி­னைகள், மோதல்கள் உரு­வா­கின்­றன. கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இந்­நாட்டில் தேசிய ஒற்­றுமையை, நல்­லி­ணக்­கத்தை இனங்­க­ளுக்­கி­டையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாம் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருக்­கிறோம். பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டலை நடத்தி சக­வாழ்­வினைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளோம்.

மக்கள் தாம் மர­ணிப்­ப­தில்லை என்­பதை நினைக்­காது கால அட்­ட­வ­ணைகள் தயா­ரித்துக் கொள்­கி­றார்கள். நாங்கள் எந்த நாளும் வாழ்வோம் என்று மர­ணத்தை நினைக்­காது வாழ்­வ­த­னா­லேயே பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

புனித அல்­குர்­ஆனின் உய­ரிய போத­னைகள் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் தேசிய ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கும் வழி திறக்­கப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா ­சபையின் இந்த உய­ரிய பணி குறித்து நான் மிகவும் மகிழ்­கிறேன் என்றார்.

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் பேராசிரியர்

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் பீட பேரா­சி­ரியர் தயா அம­ர­சே­கர உரை­யாற்­று­கையில், இது முக்­கி­ய­தொரு பய­னுள்ள நிகழ்­வாகும். உலமா சபையின் சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யீடு இன்­றல்ல இற்­றைக்குப் பல­வ­ரு­டங்­க­ளுக்கு முன்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்க வேண்டும்.  மொழி­பெ­யர்ப்பு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு வெளி­யி­டப்­பட்­டி­ருந்தால் தேசிய ஒரு­மைப்­பாடும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கமும் மேலும் வலுப்­பெற்­றி­ருக்கும்.

1970, 1980 களில் சாதி, சமய வேறு­பா­டுகள் கார­ண­மாக நாட்டில் பல்­வேறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. பௌத்த மக்­க­ளி­ட­மி­ருக்கும் தவ­றான கருத்­து­களை இல்­லாமற் செய்­வ­தற்கு சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை பெரிதும் உறு­து­ணை­யாக இருக்கும். நாம் இனம், மதம் என்ற வகையில் வேறு கலா­சா­ரங்­க­ளையும் கொள்­கை­க­ளையும் கொண்­டி­ருந்­தாலும் அனை­வரும் மனி­தர்கள் என்ற வகை­யிலும் ஒரே தேசத்­தவர் என்ற வகை­யிலும் ஒன்­று­பட வேண்டும்.

இச்­சந்­தர்ப்­பத்தில் எனது கல்­லூரி வாழ்க்கை நினை­வுக்கு வரு­கி­றது. கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் நான் பயின்ற போது முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அங்கு பயின்றார். அவர் கல்­லூ­ரியில் அனை­வ­ரதும் அன்­பினைப் பெற்­றி­ருந்தார். அனை­வ­ரு­டனும் சகோ­தர பாசத்­துடன் பழ­கினார். கல்­லூ­ரியில் மாணவ தலை­வ­ரா­கவும் நிய­மனம் பெற்றார். அன்று எங்­களை மொழியோ, சம­யமோ, இனமோ வேறு­ப­டுத்­த­வில்லை. அல்­குர்ஆன் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்­டி­ருப்­பது போன்று மகா­வம்­சமும் தமிழில் மொழி பெயர்க்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­லா­தீர்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள் என்று ஒரு­சாரார் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டு­கி­றார்கள். சிங்­க­ள­வர்­களின் கடை­க­ளிலே பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­யுங்கள் என்­கி­றார்கள். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்கள்  சில­காலம் கழித்து முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­வார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் உதவி செய்­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

எமது சமயம் என்று இறுக்­க­மான கோட்­பாட்டில் இருந்­த­வர்­க­ளுக்கு வர­லாற்றில் இடம் கிடைக்­க­வில்லை. நாம் எந்த சம­யத்­த­வர்­க­ளாக இருந்­தாலும் எமக்குள் நற்­கு­ணங்கள் இருக்­க­வேண்டும். இதுதான் எமது கலா­சாரம்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முஸ்லிம் மாண­வர்­களை விட முஸ்லிம் மாண­வி­க­ளையே காண்­கிறேன். முஸ்லிம் மாண­வர்கள் கல்­வியில் ஆர்­வ­மின்றி இருக்­கி­றார்கள். மாண­வி­களே கல்­வியில் அதிக ஆர்வம் காட்­டு­கி­றார்கள். முஸ்லிம் மாண­வர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணம் உழைத்துக் கொள்ள வேண்டும், பெரிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இலட்­சியம் கொண்­ட­வர்­க­ளாக கல்­வியில் அக்­க­றை­யின்றி பணம் ஈட்டும் செயற்­பா­டு­க­ளி­லேயே இருக்­கி­றார்கள். இதனால் ஏனைய மதத்­தி­ன­ருக்கு இவர்கள் மீது பொறாமை ஏற்­ப­டு­கி­றது. நாம் எமது வாழ்­நாளில் எதனை உழைத்துக் கொள்­ள­வேண்டும் என தம்­ம­ப­தவில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. பணம் வாழ்க்­கையில் நிம்­ம­தியைத் தராது. எனது சமயம், எனது இனம் என்­ப­தற்­கா­கவே இலங்­கையில் யுத்­தங்கள் ஏற்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் பற்றி சிங்­க­ளவர் மத்­தியில் நிலவும் தவ­றான கருத்­து­களை அல்­குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்பு நீக்­கி­விடும் என்று நினைக்­கிறேன். எமது நாட்டை ஆண்ட சிங்­கள மன்­னர்கள் இஸ்­லா­மிய நாடு­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­யி­ருந்­தமை வர­லாற்று காலம் முதல் சிங்­க­ள­வர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் இருந்த ஒற்­று­மையை பறை­சாற்­று­கி­றது.

ஒவ்­வொ­ருவர் பேசும் மொழியின் உள்ளே தான் கலா­சாரம் இருக்­கி­றது. எனவே நாம் கலா­சா­ரத்தை கௌர­விக்க வேண்­டு­மென்றால் மொழி மீது பற்­றுக்­கொள்ள வேண்டும் அனைத்து மொழி­க­ளையும் கற்­க­வேண்டும் என்றார்.

அ.இ.ஜ.உலமா சபையின் தலைவர்

முஸ்­லிம்­களின் தாய்­நாடு இலங்­கையே. இந்­நாட்டு முஸ்­லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்­தவ மக்­க­ளுடன் கைகோர்த்து ஒரே­தாயின் பிள்­ளை­களைப் போன்று வாழ்­கி­றார்கள். இத­னையே அல்­குர்­ஆனும் போதித்­துள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களின் தாய்­மொழி தமி­ழாக இருந்­தாலும் அதி­க­மான முஸ்­லிம்கள் சிங்­கள மொழி­யினைத் தாய் மொழி­யாகக் கொண்­டுள்­ளார்கள்.

இன்று வெளி­யிட்டு வைக்­கப்­படும் சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்தும் பால­மாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், ‘சிங்­க­ள­மொ­ழியை அரச மொழி­யாகக் கொண்­டுள்ள ஒரே நாடு இலங்­கை­யாகும். அல்­குர்ஆன் மனித சமு­தா­யத்­திற்­கான வழி­காட்­டி­யாகும். அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­ன­தல்ல, முழு சமு­தா­யத்­துக்கும் உரித்­தா­ன­தாகும். அல்­குர்ஆன் மனித உரிமை பற்றிப் பேசு­கி­றது. ஏனைய மதங்­களை கௌர­விக்­கும்­படி கூறி­யுள்­ளது. அடுத்­த­வர்­களைத் துன்­பத்­துக்கு உள்­ளாக்­கா­தீர்கள் என்­கி­றது. எதி­ரி­க­ளுக்கும் உதவி செய்­யும்­படி கூறி­யுள்­ளது. நல்­ல­தையே செய்­யும்­ப­டியே குர்ஆன் போதிக்­கி­றது. இது அல்­லாஹ்வின் போத­னை­க­ளாகும்.

குர்­ஆனைப் பற்­றிய பொய்ப் பிர­சா­ரங்­க­ளி­னாலும், முஸ்­லிம்­களைப் பற்­றிய தவ­றான கருத்­துக்­க­ளாலும் இந்­நாட்டில் முஸ்­லிம்கள் பல சவால்­களை எதிர்­கொண்­டார்கள். குர்­ஆனைப் பற்­றிய புரிதல் இன்­மையே இதற்குக் கார­ண­மாகும். குர்­ஆனைப் பற்றி தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக, குர்­ஆனின் போத­னை­களை விப­ரிப்­ப­தற்­கா­கவே சிங்­கள மொழி பெயர்ப்பு வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மொழி பெயர்ப்பு தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் பலப்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.