இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

0 741

லோக்­சபா தேர்­தலில் மீண்டும் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க ஆட்­சி­ய­மைந்தால் அமைதிப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான வாய்ப்பு அதி­க­மாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.

இதற்கு அவர் கூறும் காரணம் புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. தர்க்­க­பூர்­வ­மா­ன­தாக தொனித்­தாலும், எதிர்க்­கட்சி ஆட்சி அமைத்தால் எந்த முன்­னெ­டுப்­பையும் பா.ஜ.க அப்­போது அனு­ம­திக்­காது என்ற தொனியில் பேசி­யுள்ளார்.

அதா­வது அடுத்து காங்­கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பாகிஸ்­தா­னுடன் ஆன எந்த ஒரு அமைதிப் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுப்­பையும் அப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் பா.ஜ.க எடுக்க அனு­ம­திக்­காது. ஆட்­சியைப் பிடித்­தாலும் வலது சாரி­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளாகப் பயந்து காஷ்மீர் விவ­காரம் குறித்து எந்த முன்­னெ­டுப்­பையும் அது எடுக்­காது.

இந்தக் கார­ணங்­க­ளினால், “ஒரு­வேளை வலது சாரி பா.ஜ.க வென்று விட்டால் காஷ்மீர் விவ­காரம் குறித்து ஏதா­வது ஒரு முடிவு எட்­டப்­பட வாய்ப்­பி­ருக்­கி­றது” என்று கணி­ச­மான அயல் நாட்டு நிரு­பர்கள் முன்­னி­லையில் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்தார்.

“இந்­தி­யாவில் இப்­போது நடந்து வரு­வதை நான் எண்ணிக் கூட பார்க்­க­வில்லை. முஸ்­லி­மாக இருப்­பதே அங்கு தாக்­கப்­பட்டு வரு­கி­றது. பல ஆண்­டு­க­ளாக இந்­தி­யாவில் மகிழ்ச்­சி­யுடன் வாழ்ந்து வரும் முஸ்­லிம்கள் இன்­றைய தினம் மிகு இந்து தேசி­ய­வா­தத்­தினால் கவ­லை­ய­டைந்­துள்­ளனர். இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யாகு போலவே  மோடியும் அங்­கு ‘­அச்சம் மற்றும் தேசிய உணர்வு’ ஆகி­ய­வற்றைக் கொண்டு தேர்தல் பிர­சாரம் செய்து வரு­கிறார்.

காஷ்­மீரில் பிற மாநி­லத்­த­வர்கள் சொத்து வாங்­கு­வதைத் தடை செய்யும் காஷ்மீர் சிறப்பு உரி­மைகள் சட்டம் ரத்து செய்­யப்­படும் என்ற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்­கு­றுதி கூட பிர­சா­ர­மா­கவே இருக்க வாய்ப்­புள்­ளது.

பாகிஸ்தான் ஏழை மக்­களை ஏழ்­மை­யி­லி­ருந்து விடுவிக்க வேண்டுமென்றால் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் ஆகியவற்றுடன் அமைதியான உறவுகளை பேணுவது அவசியம்” என்றார் இம்ரான் கான்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.