லிபியாவின் திரிப்போலி மீதான ஹப்தரின் தாக்குதல்களுக்கு அறிஞர்கள் கண்டனம்

0 521

கிழக்கு லிபி­யாவைத் தள­மாகக் கொண்ட தள­பதி ஹலீபா ஹப்­த­ரினால் தலை­நகர் திரிப்­போ­லியைக் கைப்­பற்­று­வ­தற்கு மேற்­கொள்­ளப்­படும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை தோஹாவைத் தள­மாகக் கொண்ட முஸ்லிம் அறி­ஞர்கள் அமைப்பு கண்­டித்­துள்­ளது.

இரத்­தத்தை ஓட்­டு­வ­தற்கும், குழப்­பங்­களை பரவச் செய்­வ­தற்கும் லிபிய மக்­களைப் பிரிப்­ப­தற்கும் சில அர­புக்­க­ளிடம் நிதி­யி­னையும் ஆத­ர­வி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்ள ஹப்தர் தலை­ந­கரை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கும் அரபு நாடு­க­ளி­னாலும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் தலைப்­பட்­டி­ருக்­கின்றார் என முஸ்லிம் அறி­ஞர்­களின் சர்­வ­தேச ஒன்­றியம் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது.

திரிப்­போ­லி­யி­லுள்ள தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் அரபு லீக் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை ஆகி­ய­வற்றில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட உறுப்­பு­ரிமை கொண்­ட­தாகும் எனவும் முஸ்லிம் அறி­ஞர்­களின் சர்­வ­தேச ஒன்­றியம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

எனினும் கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் இரா­ணுவம் மற்றும் படை­யி­னரின் செயற்­பா­டு­களை எதிர்­கொள்ளும் நிலையில் அவை அந்த அர­சாங்­கத்­தினை கைவிட்­டுள்­ள­மை­யினைக் கண்­டித்­துள்ள அவ்­வ­மைப்பு அரபு நாடுகள் சபையும் ஹப்­தரின் தாக்­கு­த­லுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வன்­மு­றை­களைத் தோற்­க­டிக்­கவும் ஒற்­று­மையை அடைந்து கொள்­வ­தற்கும் லிபிய மக்­க­ளுக்கு சட்ட ரீதி­யான தன்­மையும் ஸ்திரத் தன்­மையும் கிடைப்­ப­தற்கு போது­மான ஆத­ர­வினை தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்­திற்கு வழங்க வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்கப் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து திரிப்­போ­லியை மீளக் கைப்­பற்­று­வ­தற்­கான இரா­ணுவ நட­வ­டிக்கை ஹப்­த­ரினால் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

சுமார் நான்கு தசாப்­தங்­க­ளாக அதி­கா­ரத்­தி­லி­ருந்­ததன் பின்னர் ஜனா­தி­பதி முஅம்மர் கடாபி , நேட்டோ ஆத­ர­வு­ட­னான கிளர்ச்­சி­யினை அடுத்து பதவி கவிழ்க்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட 2011 ஆம் ஆண்டின் பின்னர் லிபி­யாவில் நெருக்­கடி நிலை தொடர்கின்றது.

அதிலிருந்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் வேறுபாடு அதிகாரப் போட்டியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பு ஹப்தருடன் தொடர்புபட்ட கிழக்கு நகரான அல்-பைதாவிலும் மற்றைய தரப்பு திரிப்போலியிலும் இருக்கின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.