ஐந்தாம் தர புலமைப் பரீட்சை கட்டாயம் இல்லை

சுற்றுநிருபம் வெளியிட்டது கல்வி அமைச்சு

0 570

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அனைத்து மாண­வர்­க­ளுக்கும் கட்­டா­ய­மா­ன­தல்ல எனக் குறிப்­பிட்டு நேற்­றைய தினம் கல்வி அமைச்­சினால் சுற்­று­நி­ருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஐந்­தாம்­தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை கட்­ட­மைப்பை மறு­சீ­ர­மைப்புச் செய்­வ­தற்­கான மீளாய்­வினை மேற்­கொள்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட குழுவின் பரிந்­து­ரை­களின் பிர­கா­ரமே கல்வி அமைச்­சினால் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

குறித்த விடயம் தொடர்­பாக இதற்கு முன்னர் வெளி­யி­டப்­பட்ட கல்விச் செய­லா­ள­ரி­னது 1995.06.09 ஆம் திக­திய 1995/16 ஆம் இலக்க சுற்­ற­றிக்கை இரத்து செய்­யப்­ப­டு­வ­தோடு இதன் பின்னர் இச் சுற்­ற­றிக்­கை­யி­னது ஆலோ­ச­னை­களே அமுலில் இருக்கும்.

குறிப்­பிட்ட வரு­மான எல்­லைக்­குட்­பட்ட குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களின் கற்­றலில் திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கா­கவும் பாட­சா­லை­களில் ஆறாம் ஆண்­டுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கா­கவும் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யா­னது ஒரு தெரிவுப் பரீட்­சை­யாக வரு­டாந்தம் நடத்­தப்­ப­டு­கின்­றது.

எனினும் தற்­போது அப்­பி­ர­தான நோக்­கங்­களில் இருந்து விலகி மிகவும் போட்­டி­க­ர­மான நிலை தோன்­றி­யுள்­ள­தா­கவும், பெரும்­பா­லான பாட­சா­லை­களில் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சைப் பெறு­பே­று­களை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­காக மாண­வர்­க­ளி­னது பல்­த­ரப்­பட்ட தன்மை மற்றும் அறி­வு­வி­ருத்­தி­யினை கருத்­தில்­கொள்­ளாது சகல மாண­வர்­க­ளுக்கும் அதிக அழுத்தம் செலுத்­தப்­ப­டுவ தாகவும் தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே, இதன் பின்னர் பாட­சா­லை­களில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்­கின்ற புல­மைப்­ப­ரி­சி­லிற்கு உரித்­து­டைய வரு­மான எல்­லைக்கு உட்­பட்ட, குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் தவிர்ந்த ஏனைய சகல மாண­வர்­க­ளையும் இப் பரீட்­சைக்கு தோற்­றச்­செய்­வது கட்­டா­ய­மில்லை. இது தொடர்பில் மாண­வர்கள் மீது எவ்­வி­தத்­திலும் அழுத்தம் செலுத்­தப்­ப­ட­லா­காது என்­ப­த­னையும் கவ­னத்தில் கொள்ள விரும்­பு­கின்றேன்.

அதே­போன்று 5 ஆம் தரத்­துடன் நிறை­வு­பெறும் பாட­சா­லை­களில் கல்வி கற்கும் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றாத மாண­வர்­க­ளுக்கு 6 ஆம் தரத்­திற்கு பாட­சா­லை­யினைப் பெற்­றுக்­கொ­டுப்­பது வலயக் கல்விப் பணிப்­பா­ளரின் பொறுப்­பாகும்.

மேலும் மாண­வர்­க­ளுக்கு தத்­த­மது விருப்­பத்தின் பிர­காரம் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றா­தி­ருப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்க முடி­வ­தோடு, இது தொடர்­பாக பெற்­றோர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி பெற்­றோ­ரது ஒரு­மைப்­பாடு தொடர்­பான தக­வல்கள் அடங்­கிய ஆவ­ணக்­கோவை ஒன்றை பாட­சா­லையில் பேணுதல் வேண்டும்.

அவ்­வாறே ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் பெறு­பேற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு போட்டித் தன்­மையை அதி­க­ரிக்கும் வகையில் சுவ­ரொட்­டிகள், பனர்கள் போன்ற பிர­சார செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளக்­கூ­டாது என்­ப­தையும் மேலும் அறியத் தரு­கிறேன். மேலும் பாட­சா­லை­களில் ஆறாம் ஆண்­டுக்கு மாண­வர்­களை அனு­ம­திக்­கும்­போதும் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிப்பதற்கு உரிய சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கு ஏற்ப வசதிகள் சேவைகள் கட்டணம், பாடசாலை அபிவிருத்திச் சங்க கட்டணம் போன்ற அனுமதிக்கப்பட்ட கட்டணங்கள் தவிர்ந்த ஏனைய உதவிகளை பணமாகவோ அல்லது வேறு பொருட்களாகவோ அறவிடவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.