இஸ்ரேலினால் 6000 பலஸ்தீன சிறுவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்

0 489

2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து குறைந்­தது 6000 பலஸ்­தீன சிறு­வர்கள் இஸ்­ரே­லினால் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீன கைதிகள் அமைப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது.

வரு­டாந்தம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­படும் பலஸ்­தீன சிறு­வர்கள் தினத்தை முன்­னிட்டு அரச சார்­பற்ற நிறு­வ­ன­மான பலஸ்­தீன கைதிகள் அமைப்பு வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் இஸ்­ரே­லினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 98 வீத­மான சிறு­வர்கள் ஒன்றில் உள­ரீ­தி­யான அல்­லது உடல்­ரீ­தி­யான அல்­லது இரு வகை­யா­ன­து­மான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்தப் பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

டசின் கணக்­கான சிறு­வர்கள் முதலில் இஸ்­ரே­லியப் படை­யி­னரால் சுடப்­பட்டு காயம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் இஸ்­ரே­லிய அதி­கா­ரி­களால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 18 வய­திற்கு உட்­பட்ட சுமார் 250 பலஸ்­தீன சிறு­வர்கள் தொடர்ந்தும் இஸ்­ரே­லிய சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

48 பெண்­களும் 250 சிறு­வர்­களும் உள்­ள­டங்­க­லாக 5,700 பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லிய சிறை­களில் அடைக்கப்பட்டுள்ளதாக ரமல்லாஹ்வை தலைமையகமாகக் கொண்ட பலஸ்தீன அதிகாரசபையின் கைதிகள் விவகாரத்திற் கான குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.