வில்பத்துவின் பெயரில் இனவாதம் தூண்டப்படுகிறது

வியாபார நோக்கிலேயே பிரசாரம் முன்னெடுப்பு என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

0 606

வில்­பத்து விவ­காரம் காட­ழிப்பு பற்றிய பிரச்­சி­னை­யல்ல. இன­வா­தத்தை தூண்ட மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கையே என கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அத்­துடன், சித்­திரை புத்­தாண்டு வரு­வ­தனால் வியா­பா­ரிகள் சிலர் ஒரு­சி­ல­ருக்கு பணம்­கொ­டுத்து இன­வா­தத்தை தூண்டி மீண்­டு­மொரு முஸ்லிம் – சிங்­கள பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர் என்றும் அவர் குற்றம் சுமத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் பாது­காப்பு அமைச்சு மற்றும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு, உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

வில்­பத்து சர­ணா­லய பிர­தே­சத்தில் முஸ்லிம் மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்து சமூ­கத்தை பிழை­யாக வழி­ந­டத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர். வில்­பத்து சர­ணா­லயம் அமைந்­தி­ருப்­பது அனு­ரா­த­புரம் மற்றும் புத்­தளம் மாவட்­டத்­தி­லாகும். ஆனால் தற்­போது மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டி­ருப்­பது மன்னார் மாவட்­டத்­துக்கு உட்­பட்ட பிர­தே­சத்­தி­லாகும்.

யுத்­த­கா­லத்தில் மன்­னாரில் இருந்து விடு­த­லைப்­பு­லி­களால் விரட்­டப்­பட்ட மக்கள் தெற்கில் பல்­வேறு பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்­தனர். 1990இல் தங்கள் சொந்த இடத்­தை­விட்டு வெறும் கைக­ளுடன் வெளி­யே­றிய அந்த மக்கள் யுத்தம் முடிந்த பின்னர் 2013இல் மீண்டும் அவர்­களின் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டார்கள். ஆனால் சூழ­லியல் வாதிகள் பொய் குற்­றச்­சாட்டு தெரி­வித்து வில்­பத்து சர­ணா­லய காட்டை அழித்­து­ அந்த மக்­களை குடி­யேற்றி இருப்­ப­தாக பிர­சாரம் செய்­கின்­றனர்.

மேலும் முஸ்லிம் மக்கள் விடு­தலை புலி­களை அன்று ஆத­ரித்­தி­ருந்தால் பிர­பா­க­ரனால் அவர்கள் விரட்­டப்­பட்­டி­ருக்க மாட்­டார்கள். என்­றாலும் அந்த மக்கள் நாட்டை காட்­டிக்­கொ­டுக்­காமல், நாட்டின் ஒற்­றை­யாட்­சியை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­தார்கள். இல்­லா­விட்டால் இன்றும் அவர்கள் தங்கள் சொந்த இடங்­களில் வாழ்ந்து வந்­தி­ருப்­பார்கள்.

என்­றாலும் நாட்டை காட்­டிக்­கொ­டுக்­கா­ததால் அவர்கள் விரட்­டப்­பட்­ட­போது தெற்கில் பல பிர­தே­சங்­க­ளிலும் வாழ்ந்­தார்கள். அப்­போது இந்த சூழ­லி­யல்­வா­திகள் அந்த மக்கள் தொடர்பில் பார்க்­க­வில்லை.

அத்­துடன் அந்த மக்கள் 1990 இல் தங்கள் சொந்த இடங்­களில் இருந்து சென்ற பின்னர் மீண்டும் 2013 இல் மீண்டும் வரு­கின்­றனர். ஆனால் அந்த பிர­தே­சங்கள் பெரும் காடாக இருந்­ததால் 2012இல் அந்த பிர­தே­சங்­களை வனப்­பா­து­காப்பு பிர­தே­ச­மாக வர்த்த­மானி அறிவித்தல் வெளியிடப்­ப­டு­கின்­றது. இதனை பயன்­ப­டுத்­திக்­கொண்டே காட­ழிப்­ப­தாக சூழ­லி­யல்­வா­திகள் பிர­சாரம் செய்­கின்­றனர்.

அத்­துடன் வவு­னியா கருங்­காகம் குளம் பிர­தேசம் பாது­காப்பு வனாந்­திரம் என 1921ஆம் ஆண்டு வன­பா­து­காப்பு திணைக்­க­ளத்தால் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த பிர­தே­சத்தில் 3ஆயிரம் ஏக்­கரில் காடு­களை அழித்து நாமல்­கம என்ற கிரா­மத்தை அமைத்து அம்­பாந்­தோட்டை மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இருந்து மக்­களை கொண்­டு­சென்று நாமல் ராஜபக் ஷ குடி­யேற்­றினார். அப்­போது இந்த சூழ­லி­யல்­வா­திகள் எங்­கி­ருந்­தார்கள். வில்­பத்து தொடர்­பாக கதைப்­ப­வர்கள் நாமல் ராஜபக் ஷ காட­ழிப்­பது தொடர்­பாக கதைப்­ப­தில்லை.

எனவே இது காட­ழிக்கும் பிரச்­சி­னை­யல்ல. இன­வா­தத்தை தூண்ட மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­யாகும். சித்­திரை புத்­தாண்டு வரு­வ­தனால் வியா­பா­ரிகள் சிலர் ஒரு­சி­ல­ருக்கு பணம்­கொ­டுத்து இன­வா­தத்தை தூண்டி மீண்­டு­மொரு முஸ்லிம், சிங்­கள பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் தொடர்பில் தேடிப்பார்க்கவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.