துருக்கி தேர்தலில் குளறுபடிகள் வாக்குகளை மீள எண்ண நடவடிக்கை

0 579

“துருக்­கியில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற தேர்­தலைத் தொடர்ந்து ஏழு மாவட்­டங்­களின் சில பகு­தி­களில் வாக்­கு­களை மீள எண்­ணு­வ­தென கடந்த புதன்­கி­ழமை துருக்­கியின் அதி­யுயர் தேர்தல் சபை தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்கு முன்­ன­தாக, துருக்­கியின் அதி­யுயர் தேர்தல் சபைக்கு நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் மேன்­மு­றை­யீட்டை அடுத்து வலி­தற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட சில்லி, பைரம்­பாசா, அட்­ட­சே­ஹேயிர், உம்­ரா­னியே, பெயிகோஸ், பதீஹ் மற்றும் கஸை­யோ­மன்­பசா ஆகிய மாவட்ட வட்­டார சபை­க­ளுக்­கான வாக்­கு­களே மீள எண்­ணப்­ப­ட­வுள்­ளன.

எனினும், பிர­தான எதிர்க் கட்­சி­யான குடி­ய­ரசு மக்கள் கட்­சியின் மேன்­மு­றை­யீட்­டினைத் தொடர்ந்து இந்த மீளாய்வு மற்றும் மீள எண்­ணுதல் போன்ற விட­யங்­களை இடை­நி­றுத்த இஸ்­தான்பூல் மாகாண தேர்தல் சபை தீர்­மா­னித்­துள்­ளது.

இந்த இடை­நி­றுத்தல் தீர்­மா­னத்­திற்கு நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே அதி­வி­ஷேட கூட்­ட­மொன்றைக் கூட்­டிய துருக்­கியின் அதி­யுயர் தேர்தல் சபை, மாகாண தேர்தல் சபையின் தீர்­மா­னத்தைப் புறந்­தள்ள தீர்­மா­னித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி இஸ்­தான்பூல் பெரு­ந­கர உள்­ளூ­ராட்சி மன்­றத்தின் கீழான 39 மாவட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் முடி­வுகள் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான எதிர்ப்­பினை வெளி­யிட்­டது.

தேர்தல் பெறு­பே­று­களில் குறிப்­பி­டத்­தக்க குள­று­ப­டிகள் காணப்­ப­டு­வது அவ­தா­னிக்கப்பட்­டுள்­ள­தாக நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் இஸ்­தான்பூல் தலைவர் பைராம் செனோகெக் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­தான்பூல் மேயர் பத­விக்கு போட்­டி­யிட்ட பிர­தான எதிர்க் கட்­சி­யான குடி­ய­ரசு மக்கள் கட்­சியின் எக்ராம் இமா­மொக்லு 48.79 வாக்­கு­களைப் பெற்ற அதே­வேளை நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வேட்­பா­ள­ரான பினாலி இல்ட்ரிம் 48.51 வீத வாக்­கு­களைப் பெற்றார்.

மிகச் சொற்­ப­மான வாக்கு வித்­தி­யா­சத்­தி­லேயே எக்ராம் இமா­மொக்லு முன்­ன­ணியில் காணப்­ப­டு­கின்றார்.

அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு பதவி வகிப்­ப­தற்­கான துருக்­கிய மேயர்கள், நகர சபை உறுப்பினர்கள், முக்தார்கள் (அயலக அதிகாரிகள்) மற்றும் முதியோர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான துருக்கிய மக்கள் வாக்களித்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.