பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சிறந்த சூழல் கிடைக்கப்பெற வேண்டும்

பாகிஸ்தானின் மூத்த மதகுருமார்கள் தெரிவிப்பு

0 677

பாகிஸ்­தானில் உள்ள சிறு­பான்­மை­யினர் வாழ்­வ­தற்கு சிறந்த சூழலை முஸ்­லிம்கள் வழங்க வேண்டும் என பாகிஸ்­தானின் மூத்த மத­கு­ரு­மார்கள் தெரி­வித்­துள்­ளனர்.

சிந்து மாகா­ணத்தில் இந்து மத சிறு­மிகள் கட்­டாய மத மாற்றம் செய்­யப்­பட்ட சம்­பவம் அதிர்ச்­சி­ய­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து பாகிஸ்­தானில் முதா­ஹிதா உலமா வாரியம் ஒரு இணைப்புக் கூட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இதில் பல்­வேறு மதத்தைச் சார்ந்த பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர்.

இதற்கு பதி­ல­ளித்து பேசிய பாகிஸ்­தானின் மூத்த மத­கு­ரு­மார்கள் இஸ்லாம் அல்­லா­த­வர்கள் கட்­டாய மத­மாற்றம் செய்­யப்­ப­டு­வதை இஸ்லாம் மதம் அனு­ம­திக்­க­வில்லை என்று தெரி­வித்­தனர்.

சிந்து மாகா­ணத்தில் இந்­து­ம­தத்தைச் சேர்ந்த சிறு­மிகள் கட்­டாய மத மாற்றம் மூலம் திரு­மணம் செய்து வைக்­கப்­பட்ட சம்­ப­வத்தை அவர்கள் மறுக்­க­வில்லை.

அதைத் தொடர்ந்து சட்டம் நீதி நிலை நாட்­டப்­பட்­ட­தா­கவும் அவர்கள் தெரி­வித்­தனர்.

இக்­கூட்­டத்­திற்கு முதா­ஹிதா உலமா வாரியம் மற்றும் பாகிஸ்தான் உலமா கவுன்­சிலின் தலைவர் முகம்­மது தாஹிர் மெஹ்மூத் அஷ்­ரஃபி தலைமை வகித்தார். இஸ்லாம் அமைதி, ஒற்­றுமை, ஸ்திரத்­தன்­மையைப் போற்றும் மத­மாகும். முஸ்லிம் நாடு­களில் வாழும் முஸ்­லிம்­அல்­லா­த­வர்­களின் உரி­மை­களைப் பற்றி தெளி­வாக வரை­ய­றுப்­ப­தோடு இஸ்லாம் அவற்றை போதிக்­கவும் செய்­கி­றது என்றார்.

இக்­கூட்­டத்தில் கல்­லூரி பேரா­சி­ரி­யர்கள், மௌலா­னாக்கள், பாதி­ரி­யார்கள், பாஸ்­டர்கள் பங்­கேற்­றனர். பாகிஸ்­தானில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­படும் சிக்­கல்கள் குறித்து பல்­வேறு சம்­ப­வங்­களை குறிப்­பிட்டு அவர்கள் விவா­தித்­தனர்.

பிர­தமர் இம்ரான் கானின் கட்­சியைச் சேர்ந்த இந்­து­மத எம்.பி ஒருவர் சில தினங்­க­ளுக்கு முன் கட்­டாய மத மாற்ற தடை சட்டத்திற்கான இரு மசோதாக்கள் கொண்டுவந்தார். இதன்மூலம் கட்டாய மத மாற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனைகள் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.