கண்டி – திகன வன்முறை: நஷ்டஈடுகள் வழங்க அமைச்சரவை அனுமதி

ஏப்ரலின் பின் கையளிக்க பிரதமர் உத்தரவு என்கிறார் ஹலீம்

0 558

கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி– திகனப் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட அனைத்து சொத்­து­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. நஷ்­ட­ஈ­டுகள் அனைத்­தையும் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்குப் பின்பு வழங்­கு­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

கண்டி– திகன வன்­செ­யல்கள் நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் தாம­த­மில்­லாமல் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­ததன் கார­ண­மா­கவே குறிப்­பிட்ட நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வது துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தற்­போது 174 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இதற்­கென 170 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் 546 சொத்­துகள் சேத­மாக்­கப்­பட்­டன. மற்றும் எரி­யூட்­டப்­பட்­டன. இவற்றில் 372 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக ஏற்­க­னவே 19 கோடி 48 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்டு விட்­டது என்றார்.

நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் புனர்­வாழ்வு அதி­கார சபையின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்­தீனைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது பாதிக்­கப்­பட்ட மேலும் 16 சொத்­து­க­ளுக்­கான மதிப்­பீ­டுகள் மேற்­கொள்­வதில் சில சிக்­கல்கள் உரு­வா­னதால் அதற்­கென குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சொத்துக்களின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.