லிபி­யா­வுக்கு பாதுகாப்பு நிதி­யாக ஐந்து இலட்சம் டொலர்­கள்

அமெ­ரிக்கா வழங்­கு­கி­றது

0 756

ஐக்­கிய நாடுகள் சபையின் ஆத­ர­வு­ட­னான லிபிய அர­சாங்­கத்தின் பாது­காப்பு நிதி­யு­த­வி­யாக ஐந்து இலட்சம் டொலர்­களை வழங்­கு­வ­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமெ­ரிக்கா உறு­தி­ய­ளித்­துள்­ளது.

லிபியத் தலை­நகர் திரிப்­போ­லியில் லிபியப் பிர­தமர் பயேஸ் அல்-­சர்­ரா­ஜினை திரிப்­போ­லிக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் பீட்டர் பொடெல் மற்றும் அப்­பி­ரிக்கொம் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் தோமஸ் வொல்­ஹெ­ளஸர் ஆகியோர் சந்­தித்­தனர்.

லிபிய மக்­க­ளுக்கு சேவை­யாற்றக் கூடிய ஒரு­மித்த, பாது­காப்­பான மற்றும் செழிப்­பான தேசம் என்ற வகையில் லிபி­யா­வுக்­கான வொஷிங்­டனின் அத­ரவு தொடர்பில் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் உறு­தி­ய­ளித்­த­தாக லிபி­யா­வி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திரிப்­போலி பாது­காப்புப் பணி­ய­கத்தின் ஆளு­மை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு உள்­துறை அமைச்சு எடுத்­து­வரும் முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வாக இந்த நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கின்­றது.

தேசிய உடன்­ப­டிக்கை முன்­னு­ரிமை அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் தற்­போது வழங்­கப்­பட்­டு­வரும் 30 மில்­லியன் டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாகவே இந்த உதவி வழங்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவின் பின்னணியில் இடம்பெற்ற எழுச்சியினை அடுத்து நான்கு தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதன் பின்னர் 2011 ஆம் ஆண்டிலிருந்து லிபியாவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

 

Leave A Reply

Your email address will not be published.