துருக்­கியின் டெனிஸ்­லியில் 5.7 ரிச்டர் அளவில் நில­ந­டுக்கம்

0 483

துருக்­கியின் தென்­மேற்கே நேற்று 5.7 ரிச்டர் அள­வி­ளான நில­ந­டுக்கம் ஏற்­பட்­ட­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

உள்ளூர் நேரப்­படி காலை 9.34 இற்கு டெனிஸ்லி மாகா­ணத்தை இந்த நில­ந­டுக்கம் தாக்­கி­ய­தாக அனர்த்த மற்றும் அவ­ச­ர­நிலை முகா­மைத்­துவ சபை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

இந்த நில­ந­டுக்­கத்தின் மையம் அந்த மாகா­ணத்தின் அசி­பாயம் மாவட்­டத்தின் தென்­ப­குதி கிரா­மப்­பு­றத்தில் 11.36 கிலோ­மீற்றர் (7 மைல்) ஆழத்தில் காணப்­ப­டு­கின்­றது.

இதற்கு முன்­ன­தாக கடந்த புதன்­கி­ழமை 4.8 மற்றும் 4.5 ரிச்டர் அள­வான நில­ந­டுக்­கங்­களும் அம் மாகா­ணத்தைத் தாக்­கி­யுள்­ளன.

இந்த நில­ந­டுக்கம் அயீ­ஜியன் பிராந்­தியம் முழு­வ­திலும் மற்றும் மர்­மாரா கடலின் தென்­ப­கு­தி­யிலும் உண­ரப்­பட்­டுள்­ளது.

மேலும் உயி­ரி­ழப்­புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என டெனிஸில் ஆளுநர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.