சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்

ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் வேண்டாம்; ஜெனிவாவில் அரசாங்கம் திட்டவட்டம்

0 570

இலங்கை பிர­ஜைகள் அல்­லாத  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின்  வழக்கு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்.   அது கடி­ன­மா­னது. எனவே இலங்­கை­யா­னது உள்­ளகப் பொறி­மு­றையில் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு  சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்  என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன தெரி­வித்தார்.  அத்­துடன் இலங்­கையில் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மற்­றது என்றே இலங்கை அர­சாங்கம் கரு­து­கின்­றது.  அதனை எந்­த­வி­தத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற   இலங்கை தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு   உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

2017 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம்  மனித  உரிமை விட­யத்தில் பாரிய முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.  ஐ.நா. ஆணை­யா­ளரின் அறிக்­கையில் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்   வர­வேற்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நன்றி கூறு­கின்றோம்.  நாம்  பரந்­து­பட்ட ரீதியில் மனித உரிமை பேர­வை­யுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட விரும்­பு­கின்றோம். நாம் ஏற்­ப­டுத்தும்  முன்­னேற்­றங்கள்   தொடர்பில் இந்தப் பேர­வைக்கு  தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.  போருக்குப் பின்­ன­ரான  மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பது  ஒவ்­வொரு நாட்­டுக்கும் தனித்­து­வ­மா­ன­தாகும்.   நாம் ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து பாடம் கற்­கலாம். ஆனால்  எமது  உள்­நாட்டு செயற்­பாடே நாம்  நல்­லி­ணக்­கத்­திற்கு  பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டில் நாம் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை நிய­மித்­துள்ளோம். அதன் தொழில்­பா­டுகள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன. எமது அமைச்­சர்கள்   உண்­மையை  கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க  நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளோர்   தொடர்பில்  உடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.  பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை கொண்டு வர பேச்­சு­வார்த்­தைகள்  இடம்­பெ­று­கின்­றன. இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான சட்டம்  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் பல வேலைத்­திட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மிகக்­கு­று­கிய காலத்தில் இந்த சட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி்ன்­றன.  2018 ஆம் ஆண்டு  ஒக்­டோபர் மாதம் இடம்­பெற்ற  அர­சியல் நெருக்­கடி தொடர்பில் ஆணை­யாளர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில்  இலங்கை உயர் நீதி­மன்றம்  முக்­கிய வகி­பா­கத்தை வகித்­தது. அதன்­மூலம் சுயா­தீன நீதித்­துறை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  சட்டம் ஒழுங்கு  படைத்­த­ரப்­பினர்   மற்றும்  பொலி­ஸா­ரினால் முன்­னு­தா­ர­ண­மான வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இழப்­பீடு அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்ள வகையில் அதற்கு மூன்று ஆணை­யா­ளர்கள்  உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளனர்.    இதற்­காக  500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை தனது பிர­ஜை­க­ளுக்கு அனைத்து உரி­மை­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.  இந்தப் பேர­வையின் இறுதி யுத்­தத்தின் போது   ஏற்­பட்ட  உயி­ரி­ழப்­புக்கள் தொடர்­பான தவ­றான  புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.   2015 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யிலும் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  மேலும்  அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம்  முதல் இது­வரை 63257 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.  அதா­வது 88.87 வீத­மான காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.   இரா­ணுவம் வைத்­தி­ருந்த   தனியார் காணி­களில்  26 ஆயிரம்  ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விட­யத்தில் அர­சாங்கம் முன்­னு­ரிமை வழங்கி செயற்­ப­டு­கின்­றது. மேலும் காணி­களை விரைவில் விடு­விக்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியும் துரித நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்றார்.  ஜனா­தி­பதி செய­ல­ணியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் அனைத்துத் துறைசார் நிபுணர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி இலங்கையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அலுவலகம் அமைக்கப்படுவது அவசியமற்றது என்றே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.  அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.  ஐக்கிய நாடுகள்  சபை மற்றும்  மனித உரிமை பேரவையின் நிபுணத்துவ ஒத்துழைப்பை வரவேற்கின்றோம். குறிப்பாக தொழில்நுட்ப உதவிகளை வரவேற்கின்றோம்.  நாம் தொடர்ந்து  ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடனும் ஐ.நா.மனித உரிமை பொறிமுறையுடனும் இணைந்து செயற்பட  விரும்புகின்றோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.