இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்

முஸ்லிம் சமூகம் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் மாலா பெரேரா

0 1,702
  • எம்.எப்.எம்.பஸீர்

நாட்டில் போலி வைத்­தி­யர்கள், சட்­ட­வி­ரோத சிகிச்சை முறை­மைகள் ஒன்றும் புதி­தல்ல. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அண்­மைக்­கா­ல­மாக இஸ்­லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. அர­சாங்க மருத்­துவ முறை­மை­களைப் புறந்­தள்ளி, இஸ்­லா­மிய வைத்­தியம் எனும் பெயரில் உரிய தகை­மை­களும் சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியும் இல்­லாத நபர்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சிகிச்­சை­களின் பின்னால் ஒரு கூட்டம் செல்லத் தொடங்­கி­யுள்­ளது. குறிப்­பாக பலர் பிர­ச­வத்­திற்குக் கூட அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களை நாடாது, இவ்­வா­றான சட்­ட­வி­ரோத சிகிச்சை நிலை­யங்­களை நாடு­கின்­றனர். இது தொடர்­பான முறைப்­பா­டுகள் உரிய திணைக்­க­ளங்­க­ளுக்கு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற போதிலும் அவர்­க­ளாலும் இவற்றை முழு­மை­யாக தடுத்து நிறுத்த முடி­யாத நிலையே நீடிக்­கி­றது.
இந் நிலையில் அண்­மையில் கொழும்பில் அமைந்­துள்ள இவ்­வா­றான சிகிச்சை நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற சுற்­ற­ிவ­ளைப்பு நட­வ­டிக்கை மற்றும் அங்கு இடம்­பெ­று­வ­தாகக் கூறப்­படும் சிகிச்சை முறை­மைகள், அவற்றில் உள்ள ஆபத்­துகள் தொடர்பில் மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் வைத்­தியர் மாலா பெரே­ராவை ‘விடி­வெள்ளி’ சந்­தித்து வின­வி­யது. இதன்­போது அவர் வழங்­கிய தக­வல்­களை இங்கு தரு­கிறோம்.

கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி, சென் ஜோசப் வீதி, கொழும்பு – 14 இல் அமைந்­துள்ள ராஹா ஹிஜாமாஸ் சிகிச்சை நிலையம் மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் பிரி­வி­னரால் சுற்றிவளைக்­கப்­பட்­டது.
இந்த சுற்­றி­வ­ளைப்பை முன்­னெ­டுக்க இரு கார­ணங்கள் இருந்­தன. அதா­வது, குறித்த ஹிஜாமாஸ் சிகிச்சை நிலை­யத்­துக்கு எதி­ராக கடந்த 2019.01.18 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்­துக்கு கடிதம் மூலம் முறை­யிட்­டி­ருந்தார். அந்த முறைப்­பாட்­டுக்கு அமைய கடந்த 2019.01.24 அன்று முறைப்­பா­டாக பதி­வா­கிய அந்த கடி­தத்தை மையப்­ப­டுத்தி சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதே­வேளை இந்த சுற்­றி­வ­ளைப்­பா­னது ராஹா நிறு­வனம் தன்னை பதிவு செய்­யு­மாறு கடந்த 2018.11.07 ஆம் திகதி முன்­வைத்­துள்ள 2 ஆவது விண்­ணப்பம் மீதான ஸ்தல சோதனை நட­வ­டிக்­கை­யா­கவும் மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் வைத்­தியர் மாலா பெரே­ராவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய இந்த நட­வ­டிக்­கைகள் அந்த திணைக்­க­ளத்தின் நிறு­வன சோதனைக் குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
ஆயுர்­வேத திணைக்­கள நிறு­வன சோதனைப் பிரிவின் தலைவர் வைத்­தியர் எஸ்.கே.ஏ.எஸ். சில்வா, வைத்­தி­யர்­க­ளான எம்.ஏ.வி.வி. சந்­ர­ரத்ன, எல்.ஐ.ஏ.டி.சில்வா, குலுனு ஜய­தி­லக, எம்.ஜே.எம். ஹஸான், ஏ.எம். அலி சஜா ஆகி­யோரை உள்­ள­டக்­கிய குழு­வி­னரே இந்த சோதனை சுற்­றி­வ­ளைப்பை கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.
இந்த சுற்­றி­வ­ளைப்பின் இடையே, நிலைமை மோச­ம­டைந்த போது கிராண்பாஸ் பொலி­ஸாரின் உத­வி­யையும் ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினர் பெற­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் சுற்­றி­வ­ளைப்பு பிரி­வினர் சுற்றி வளைக்கும் போது, ராஹா நிறு­வ­னத்தில் தகை­மை­யுள்ள, பதி­வு­செய்­யப்­பட்ட வைத்­தியர் ஒருவர் சேவையில் இருக்­க­வில்லை என மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­கள ஆணை­யாளர் வைத்­தியர் மாலா பெரேரா ‘விடி­வெள்ளி’யிடம் தெரி­வித்தார்.
மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­கள அதி­கா­ரிகள் முன்­னெ­டுத்த சுற்­றி­வ­ளைப்பின் போது , ராஹா சிகிச்சை நிலை­யத்தில் இரு ஹிஜாமா சிகிச்­சைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­துள்­ளன. இதன்­போது ஆயுர்­வேத திணைக்­கள அதி­கா­ரி­க­ளிடம் தாம் வைத்­தி­யர்கள் என கூறி முன்­னி­லை­யான ராஹா ஊழி­யர்கள் எவரும் இலங்கை மருத்­துவ சபையில் பதிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளல்லர்.
அங்கு இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த இரு ஹிஜாமா சிகிச்­சை­க­ளையும் முன்­னெ­டுத்த எவ­ருக்கும் அது தொடர்பில் எந்­த­வொரு பயிற்­சியும், தகை­மையும் இருக்­க­வில்லை என்றும் மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.
அத்­துடன் அந்த ஹிஜாமா சிகிச்­சைகள் தொற்று நோய்கள் அவ­ச­ர­மாக தொற்­றிக்­கொள்ளும் வகை­யி­லான சூழலில் பாது­காப்­பற்ற முறையில், ஆயுர்­வேத வைத்­திய தர்­மத்­துக்கு எதி­ரான வகையில் இடம்­பெற்­றுள்­ளன.
இங்கு சுற்­றி­வ­ளைப்பின் போது சிகிச்­சை­ய­ளித்­துக்­கொண்­டி­ருந்த யுவதி, அதே நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான சிறுவர் முன் பள்ளி ஆசி­ரியை எனவும் அவ­ருக்கும் எந்த தகு­தியும் இருக்­க­வில்லை எனவும் ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினர் கூறு­கின்­றனர்.
ஒள­ட­தங்கள் சட்டக் கோவையில் உள்­ள­டங்­காத ஒள­டத சூத்­திர குழுவின் அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டாத சில மருந்து வகைகள் ( பெயர், உள்­ளிட்ட விப­ரங்கள் கூட இல்லை) இந்த சிகிச்­சை­களின் போது பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
இந் நிலையில் ஆயுர்­வேத திணைக்­கள அதி­கா­ரிகள் ராஹாவை சுற்றி வளைத்து குறித்த சோத­னை­களை முன்­னெ­டுக்கும் போது அந் நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் எனக் கூறப்­படும் சிலரால் சுற்றி வளைப்பு அதி­கா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு கிராண்ட்பாஸ் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டே மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந் நிலை­யி­லேயே கிராண்ட்பாஸ் பொலிஸார், உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்கக் கூடிய அல்­லது அபா­ய­க­ர­மான நோய்கள் பரவக் கூடிய இட­மொன்­றினை நடாத்திச் சென்ற குற்­றச்­சாட்டில் ராஹா நிறு­வ­னத்தில் சேவை­யாற்­றிய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.
காலி பகு­தியைச் சேர்ந்த மொகமட் அலீல் அப்துர் ரஹ்மான் மற்றும் கிராண்ட்பாஸ் நாக­லகம் வீதியைச் சேர்ந்த முத்தான் அலி ருகையா ஆகிய இரு­வ­ரை­யுமே பொலிஸார் கைது செய்து அவர்­க­ளுக்கு எதி­ராக 3572/19 எனும் இலக்­கத்தின் கீழ் மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தனர்.
இதன்­போது அவ்­வி­ரு­வரும் குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட நிலையில் தலா 2000 ரூபா அப­ராதம் விதித்து விடு­விக்­கப்­பட்­டனர். மேலும் ஆயுர்­வேத சட்­டத்தின் கீழ் ஆயுர்­வேத ஆணை­யாளர் நாய­கத்­துக்­குள்ள அதி­கா­ரத்தின் கீழ் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்­யப்­படல் வேண்டும் என நீதிவான் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இந்த வைத்­திய நிலையம் தொடர்பில் மேல் மாகாண ஆயுர்­வேத ஆணை­யாளர் மாலா பெரேரா கூறு­கையில், ‘ ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் உள்ள நிர்­ண­யங்­களின் பிர­காரம் அவர்கள் செயற்­ப­டு­வார்­க­ளாக இருப்பின் எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஆயுர்­வேத திணைக்­களம் ஒரு நிறு­வனம் எப்­படி இருக்­க­வேண்டும்? அது செயற்­படும் போது கடைப்­பி­டிக்­க­வேண்­டிய நடை­மு­றைகள் குறித்து தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளன. அவற்றை மீறி, அவற்றை கணக்கில் கொள்­ளாது ஒரு நிறு­வனம் செயற்­ப­டு­மாக இருப்பின் அது சட்­ட­வி­ரோ­த­மான நிறு­வ­ன­மா­கவே கரு­தப்­படும். சட்ட விரோ­த­மான நிறு­வ­னங்கள் செயற்­பட நாம் அனு­ம­திக்க முடி­யாது.
சட்­ட­வி­ரோத ஆயுர்­வேத நிலை­யங்கள் பல இருக்க முடியும். எனினும் எமக்கு ஒரு முறைப்­பாடு கிடைத்த பின்­னரும், அதனைச் சோதனை செய்­யாமல் அந் நிறு­வ­னத்தை தொடர்ந்து செயற்­பட அனு­ம­திக்க முடி­யாது.
உண்­மையில் ராஹா நிறு­வ­னத்தைப் பொறுத்­த­வரை நாம் இரு கார­ணங்­க­ளுக்­காக பரி­சோ­த­னைக்கு சென்றோம். ஒன்று முறைப்­பாட்­டுக்கு அமை­வாக. மற்­றை­யது அவர்கள் கோரி­யி­ருந்த பதிவு தொடர்­பி­லான சோத­னைக்­காக. இரண்­டி­லுமே அவர்கள் தேற­வில்லை. எனவே அது சட்ட ரீதி­யான நிறு­வனம் அல்ல.
உண்­மையில் ராஹா நிறு­வனம் சிகிச்சை நிலை­ய­மாக அன்றி, மருந்து உற்­பத்தி நிறு­வ­ன­மா­கவே பதி­வுக்கு விண்­ணப்­பித்­துள்­ளார்கள். எனினும் அங்கு மருந்து உற்­பத்தி இல்லை. வேறு சிகிச்­சை­களே இடம்­பெ­று­கின்­றன.
மருந்து உற்­பத்தி செய்­வ­தானால் அங்கு ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­தியர் ஒருவர் இருக்­க­வேண்டும். ஆயுர்­வேத மருந்து எனில் இந் நியமம் கட்­டா­ய­மா­னது.
அவர்கள் ஆயுர்­வேத மருந்து உற்­பத்தி செய்­வ­தாக கூறிய போதும் பதி­வுக்­காக சித்த வைத்­தியர் ஒரு­வரை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பதிவை கோரு­கின்­றனர். சித்த வைத்­தியர் ஒரு­வ­ருக்கு சித்த மருந்­துகள் உற்­பத்தி செய்­யலாம். எனினும் அவரால் ஆயுர்­வேத மருந்து உற்­பத்தி செய்ய முடி­யாது. ஆகவே தகை­மை­யுள்ள வைத்­தியர் ஒருவர் இல்லை என்ற கார­ணத்தை மையப்­ப­டுத்தி உடனே அந்த பதிவுக் கோரிக்­கையை நிரா­க­ரிக்க வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது.’ என்றார்.
இந் நிறு­வனம் தொடர்பில் மேலும் ஆயுர்­வேத ஆணை­யாளர் மாலா பெரேரா கூறு­கையில் ‘ இவர்கள் மருந்து உற்­பத்­திக்கு என அனு­மதிப் பத்­திரம் கோரி, அங்கு தனியார் நிறு­வனம் ஒன்று எனும் விம்­பத்தில் சிகிச்­சை­ய­ளிக்கும் நிலை­யத்­தையே நடாத்­து­கின்­றனர். அது சிகிச்­சையா என்ற கேள்­வியும் எழு­கின்­றது. ஏனெனில் அங்கு தகை­மை­யான பதிவு செய்­யப்­பட்ட வைத்­தியர் இருக்­க­வில்லை.
இவர்­க­ளுக்கு கிடைக்கும் பணத்­துடன் ஒப்­பி­டு­கையில், அவர்கள் தமக்கு சட்டம் எதுவும் தேவை இல்லை என்ற நிலை­மைக்கு தற்­போது வந்­தி­ருக்­கின்­றார்கள். அங்கு வரும் பொது மக்­களும் அப்­பா­விகள். அவர்கள் கல்­வியில் உயர்ந்த தரங்­களைக் கொண்ட மக்கள் அல்லர். அங்கு வரு­ப­வர்­க­ளுக்கு பதிவு குறித்தோ வைத்­தி­யரின் தரம் குறித்தோ கேள்வி கேட்க சந்­தர்ப்பம் இல்லை. அவற்றை கேள்வி கேட்கும் அள­வுக்கு அறிந்­த­வர்கள் அங்கு வரு­வ­தில்லை.
எமக்­குள்ள தற்­போ­தைய பிரச்­சினை, நாம் ஒரு­முறை சுற்­றி­வ­ளைத்த போதும் அவர்கள் மீண்டும் தற்­போது அவ்­வாறே பழைய சிகிச்­சை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். முறைப்­பாட்­டா­ளர்கள் மீளவும் எமக்கு முறை­யி­டு­கின்­றனர்.
பொலி­ஸாரும் அவர்­களை அந் நிறு­வ­னத்தை மூடு­மாறு கூறினர். மூட­வில்லை. இரண்டு நாட்­க­ளுக்கு மட்­டுமே மூடப்­பட்­டி­ருந்­தது. நீதி­மன்றில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டனர். எனினும் அவர்கள் வெளியே வந்­ததும் மீண்டும் அதே குற்­றத்­தை­யல்­லவா செய்­கின்­றார்கள். எம்மால் ஒவ்­வொரு நாளும் அந் நிறு­வ­னத்தை சுற்­றி­வ­ளைத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யுமா? இது நடை­மு­றைக்கு சாத்­தி­யமா? எனவே அந் நிறு­வனம் தொடர்பில் சுற்­றி­யுள்ள சமூ­கத்­தினர் தான் முடி­வொன்­றினை எடுக்க வேண்டும்.
குறித்த நிறு­வனம் தொடர்பில் எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள முக்­கி­ய­மான விட­யங்­களில் ஒன்று, அவர்கள் வீட்டு பிர­ச­வங்­களை ஊக்­கு­விப்­ப­தா­கவும், வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு பிர­ச­வத்­துக்­காக செல்­வதை தவிர்க்­கு­மாறு பிர­சாரம் செய்­வ­தா­கவும் உள்ள குற்­றச்­சாட்­டாகும். உண்­மையில் இங்கு அவ்­வாறு இடம்­பெ­று­மானால் பிர­ச­வத்­துக்கு தயா­ராக உள்ள ஒரு பெண்ணின் நிலை­மையை யோசித்துப் பாருங்கள். ஆயுர்­வேத வைத்­தியர் ஒரு­வ­ருக்கு கூட பொறுப்­பேற்­க­மு­டி­யாத நிலை­மைகள் பிர­ச­வத்தின் போது ஏற்­ப­டலாம். எனவே இவ்­வ­ளவு நவீன மருத்­துவ வச­திகள் இருக்கும் போதும் இன்று இத்­த­கைய ஒரு நிலைமை ஏற்­ப­டு­மானால் அதன் பார­தூ­ர­மான நிலை­மைக்கு யார் பொறுப்­பேற்­பது?’ என சுட்­டிக்­காட்­டினார்.
கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பு தொடர்பில் தெளி­வு­ப­டுத்­திய வைத்­தியர் மாலா பெரேரா, ‘ உண்­மையில் அன்று முன்­னெ­டுத்த சுற்றி வளைப்பின் போது அங்கு தகை­மை­யான எவரும் இருக்­க­வில்லை. பொறுப்புக் கூறத்­தக்க எவரும் இருக்­க­வில்லை. ஆனால் ஹிஜாமா சிகிச்­சைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. அதனை செய்­த­வர்­க­ளுக்கு எந்த பயிற்­சியும் இல்லை. ஒருவர் அந்த சிகிச்சை நிலை­யத்தின் கீழ் இயங்­கி­வரும் சிறுவர் பாட­சா­லையில் கற்­பித்­துக்­கொண்­டி­ருந்த பெண். அவர்கள் இஸ்­லா­மிய கலா­சார ஆடை­க­ளுக்குள் மறைந்­தி­ருந்து இந்த சிகிச்­சை­களை முன்­னெ­டுத்­தனர். இதனால் முஸ்லிம் சமூ­கமே அதிக பாதிப்­புக்­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் உள்­ளா­கின்­றது.
சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் இடங்­களில் முஸ்­லிம்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் ஆடை­களை அவர்கள் அணிந்­தி­ருப்­பது முழு சமூ­கத்­தையும் காட்­டிக்­கொ­டுக்கும் செயற்­பாடே. அங்கு சிகிச்­சைக்கு வரு­வோ­ருக்கு சிகிச்­சை­ய­ளிப்­பது வைத்­தி­யரா வேறு எவ­ருமா என்று கூட தெரி­யாது. ஏனெனில் முகத்தை முழு­மை­யாக மறைத்து ஆடை அணிந்த பெண்­களே சக பெண்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் போது எப்­படி அடை­யாளம் காண்­பது? வருத்­தத்தில் வருவோர் தனக்கு சிகிச்­சை­ய­ளிப்போர் தகு­தி­யா­ன­வர்கள் என எண்­ணி­யல்­லவா சேவையைப் பெற முயற்­சிப்பர்.
எமது பரி­சோ­த­னையின் போது அவர்கள் மார்க்க ரீதி­யாக ஏதோ வைத்­தியம் செய்­வ­தாக பல புத்­த­கங்­க­ளையும் உங்­க­ளு­டைய புனித குர்­ஆ­னையும் காட்­டி­னார்கள். எம்மைப் பொறுத்­த­வரை எமது திணைக்­களம் அத்­த­கைய வைத்­திய முறைக்கு அனு­மதி கொடுப்­ப­தில்லை. மேலும் அதை நாம் கட்­டுப்­ப­டுத்­து­வ­து­மில்லை. அது உங்கள் சமூகம் சார்ந்த அங்­கீ­காரம் உள்ள அமைப்­புக்கள் கவனம் செலுத்­த­வேண்­டிய ஒரு பகுதி. நாம் நடாத்­திய இரண்டு சோத­னை­களில் இருந்தும் ஒன்றை அவ­தா­னிக்க முடிந்­தது. அது மார்க்க கலா­சார ஆடை என ஒரு திரையைப் போட்டு மக்­க­ளுக்கு காட்டி அதற்கு பின்னால் ஒரு வியா­பாரம் நடப்­ப­துதான். இதுபோன்று பல சமூ­கங்­க­ளிலும் காணப்­ப­டு­கி­றது. இவற்றைத் தடுக்க நாட்டின் சட்­டங்கள் இன்னும் கடு­மை­யாக்­கப்­பட வேண்டும்.
உண்­மையில் இந்த சட்­ட­வி­ரோத சிகிச்சை நிலை­யத்தில் என்ன நடக்­கி­றது என்ற பாரிய கேள்வி எழு­கின்­றது. அங்கு நடக்கும் எந்த சிகிச்­சைக்கும், எந்த பிர­ச­வத்­துக்கும் பதிவு கிடை­யாது. அப்­ப­டி­யானால் அங்கு நடப்­பது சட்ட ரீதி­யாக பதி­யப்­ப­டாத பிறப்­புகள் அல்­லவா? அந் நிறு­வ­னத்­துக்கு அருகில் வசிப்­ப­வர்­களின் வாக்­கு­மூ­லங்களின் பிர­காரம், இரவில் பாரிய மனித அவலக் குரல்கள் கேட்­குமாம். காலையில் நீர் ஊற்றி அந் நிறு­வ­னத்தை கழு­விக்­கொண்­டி­ருப்­பார்­களாம். அங்கு நடப்­பது சிகிச்­சையா, அல்­லது யாரேனும் சிகிச்­சை­யி­டையே இறந்­த­னரா என ஒன்றும் தெரி­யாது. ஏனெனில் அனைத்தும் சட்­ட­வி­ரோ­த­மா­கவே அங்கு நடக்­கின்­றன. இது மிகவும் ஆபத்­தான ஒரு நிலைமை ‘ என்றார்.
எமது நேர்­கா­ண­லின்­போது அவர் முஸ்லிம் சமூ­கத்­திடம் ஒரு வின­ய­மான வேண்­டு­கோளை முன்­வைக்க விரும்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். ” நாம் உங்கள் சமூ­கத்­திடம் வேண்­டிக்­கொள்­வது, மருத்­துவம் என்­பது ஒரு சாதா­ரண விட­ய­மல்ல. அதைக் கற்றுத் தேறு­வதும் ஒரு இல­கு­வான விட­ய­மல்ல. ஒருவர் மருத்­து­வ­ரா­வ­தற்கு முறைப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வியும் அத்­துடன் கடு­மை­யான பயிற்­சியும் வழங்­கப்­ப­டு­கி­றது. அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வைத்­திய முறைகள் பல காணப்­ப­டு­கி­ன்றன.
ஆகவே உங்கள் வைத்­திய தேவை­களை அனு­ம­தி­யுள்ள வைத்­திய நிலை­யத்தில் தகு­தி­வாய்ந்த வைத்­தி­ய­ரிடம் நிறைவு செய்­து­கொள்­ளுங்கள். நாட்டின் எல்லா சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்தும் முறை­யற்ற சிகிச்­சையின் விளைவால் பல முறைப்­பா­டுகள் எமக்கு வந்­து­கொண்டே இருக்­கி­ன்றன. இதில் இணை­யத்­த­ளங்கள், சமூ­க­வ­லைத்­த­ளங்கள் , யூடியூப் மூலம் பார்த்­து­விட்டு வைத்­தியம் செய்ய முற்­பட்ட பல போலி வைத்­தி­யர்கள் தொடர்­பா­கவும் முறைப்­பா­டுகள் உள்­ளன.
என­வேதான் முஸ்லிம் சமூகம் உங்கள் சம­யத்தின் சமூ­கத்தின் பெயரால் முன்­னெ­டுக்­கப்­படும் போலி­யான, சட்­ட­வி­ரோத வைத்­திய முறைகள் தொடர்பில் மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும். இது தொடர்பில் முஸ்லிம் சமய, சமூகத் தலை­வர்கள் மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும்” ” என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.
மேல் மாகாண ஆயுர்­வேத திணைக்­கள சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­களின் போது, அங்கு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சில பிர­ச­வங்கள் குறித்த தக­வல்கள் அடங்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் அவை அரசாங்கத்துக்கு சேரவேண்டிய தகவல்கள் எனவும் அவற்றை அவர்கள் வைத்திருப்பதும் அங்கு சட்ட விரோதமாக பிரசவ சிகிச்சைகளை அளிப்பதும் ஆபத்தானது என்றும் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அந்த தகவல்கள் அரசாங்கத்துக்கு சேர எந்த முறைமையும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இதன் ஊடாக இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகமாகும். அப்படியானால் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாத குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்ற பாரிய சமூகப் பிரச்சினை தோற்றம் பெறும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.
வைத்தியர்களின் கருத்துப்படி இவ்வாறான சட்டவிரோத சிகிச்சை நிலையங்களில் இடம்பெறும் சிகிச்சைகளால் பிறக்கும் குழந்தைகள் மனிதக் கடத்தல்கள் மற்றும் உறுப்பு கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடிய சந்தர்ப்பம், அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர். கருக்கலைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த எவரேனும் இவ்வாறான சிகிச்சை நிலையத்துக்கு வந்து குழந்தை பெற்றால், வேண்டுமென்றே அக்குழந்தையை கொலை செய்யக் கூட வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இத்தகைய சட்டத்துக்கு அப்பால் சென்று இடம்பெறும் முஸ்லிம், இஸ்லாமிய பெயர் தாங்கிய, சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் எமது சமூகமே விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பாதிப்பு பணத்துக்காக எதனையும் செய்வோருக்கு அல்ல. மாறாக எமது சமூகத்துக்கே.

Leave A Reply

Your email address will not be published.