மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

0 585

மேல்­மா­காண சபை உறுப்­பினர்  ஏ.ஜே.எம்.பாயிஸின் மட்­டக்­கு­ளிய கிம்­பு­லா­னவில் அமைந்­துள்ள வீட்டின் மீது நேற்று அதி­காலை பெற்றோல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் இரவு 12 மணிக்குப் பின்­னரே மாகாண சபை உறுப்­பினர் வீட்­டுக்கு வந்­துள்ளார். இந்­நி­லையில் அதி­காலை 2.50 மணி­ய­ளவில் இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

வீட்டில் உறங்­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்­ட­தா­கவும் உடனே எழுந்து பார்த்­த­போது வீட்டின் பின்­பு­றத்தில் தீப்­பற்­றி­யி­ருந்த  நிலையில் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அறி­வித்தேன் என மாகாண சபை உறுப்­பினர் பாயிஸ் தெரி­வித்தார். பின்னர் 3.10 மணி­ய­ளவில் மட்­டக்­குளி பொலிஸார் தாக்­கு­த­லுக்­குள்­ளான வீட்­டிற்கு வந்­துள்­ளனர். அத்­துடன், பொலிஸ் மோப்­பநாய் கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்த தாக்­குதல் குறித்து மாகாண சபை உறுப்­பினர் தெரி­விக்­கையில், ஏற்­கெ­னவே இரண்டு தட­வைகள் என் மீது தாக்­குதல் நடத்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஒரு தடவை துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி நப­ரொ­ருவர் உயி­ரி­ழந்­தி­ருக்­கிறார். இது மூன்­றா­வது முயற்­சி­யாகும். வட­கொ­ழும்பில் வளர்ந்து வரும் அர­சி­யல்­வாதி என்ற வகையில் என்­மீது சிலர் பொறாமை கொண்டு அர­சியல் ரீதியில் படு­கொலை செய்ய முயற்­சிப்­ப­தாக கருதுகிறேன். என்னை பயமுறுத்துவதற்காகவே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.