அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?

0 772
  • ஏ.ஜே.எம். நிழாம்

1833 ஆம் ஆண்டு கோல்­புரூக் ஆணைக்­குழு முதல் ­மு­றை­யாக சட்ட நிர்­ணய சபையை நிறுவி ஆறு­பேரை உத்­தி­யோக பூர்­வ­மற்ற அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மித்­தது. ஆங்­கி­லேயர் மூவர் சிங்­க­ளவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்­கியர் ஒருவர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்த பிர­தி­நி­தித்­து­வமும் இல்லை. பூர்­வீக முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­காத பிர­தி­நி­தித்­து­வத்தை இடையில் குடி­யே­றிய பறங்­கி­ய­ருக்கு வழங்­கி­யமை அவ­தா­னிக்­கத்­தக்­க­தாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்டு 1912 ஆம் ஆண்டு அமு­லாக்­கப்­பட்ட—- அர­சியல் சீர்­தி­ருத்­தத்தின் மூலம் இந்­நாட்டு சனத்­தொ­கையில் 100 க்கு 4 சத­வீ­தத்­தி­ன­ருக்கே வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

படித்­த­வர்­க­ளுக்கும் செல்­வந்­தர்­க­ளுக்கும் மட்­டுமே வாக்­கு­ரிமை இருந்­தது. அப்­போ­தும்­கூட நான்கு அங்­கத்­தவர் தெரிவு செய்­யப்­பட்­டதில் ஆங்­கி­லே­ய­ருக்கு 2 உறுப்­பி­னர்­களும் பறங்­கி­ய­ருக்கு ஒரு உறுப்­பி­னரும் வழங்­கப்­பட்­டி­ருக்­கையில் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், மலாயர் எனும் வகையில் இவர்கள் அனை­வ­ருக்கும் ஒரு பொது உறுப்­பி­னரே வழங்­கப்­பட்­டி­ருந்தது. 4 சமூ­கங்­க­ளுக்கும் ஒரு பிர­தி­நி­தித்­து­வத்தை மட்­டுமே வழங்­கினால் என்­னாகும்? 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்­க­ல­வ­ரத்­துக்கு இதுவே கார­ண­மா­யிற்று. இதன் மூலம் அர­சவை பிர­தி­நி­தித்­து­வத்தின் முக்­கி­யத்­து­வத்தை இன்­றைய முஸ்லிம் தலை­முறை தெளி­வாக அறிந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். எந்த வகை­யிலும் இதில் அச­மந்­த­மாக இருந்து விடக்­கூ­டாது.

2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த விகி­தா­சா­ரத்­தேர்­த­லின்­ப­டியே பாரா­ளு­மன்­றத்­துக்கு எல்லாக் கட்­சி­க­ளி­லி­ருந்தும் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் தெரி­வா­கி­யி­ருந்­தார்கள். தற்­போது ஹிஸ்­புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளு­ந­ராக ஆனபின் இப்­போது 20 எம்.பி.க்களே இருக்­கின்­றனர்.

முஸ்­லிம்கள் 100 க்கு 8 வீதம் எனும் வகையில் இது நியா­ய­மான தொகையே ஆகும். எனினும் அண்­மையில் நிகழ்ந்த எல்லை நிர்­ணயக் கமி­ஷனின் செயற்­பாட்­டின்­படி 13 முஸ்லிம் எம்.பி.க்களே எதிர்­கா­லத்தில் தெரி­வாவர் எனக்­கூ­றப்­பட்­டது. அந்தச் செய்தி பற்றி இப்­போது பேச்சே இல்லை. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், முஸ்லிம் எம்.பி.க்களும் இது­பற்றி அர­சிடம் தீர்க்­க­மாக கேட்­கா­தி­ருக்­கி­றார்­களே? ஏன்?  7 முஸ்லிம் எம்.பி.க்கள் குறை­வ­தென்­பது சாதா­ரண விட­யமா? புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தொகுதி நிர்­ணய தலை­வரும் இதைக் குறிப்­பிட்­டுள்­ளாரே.

முஸ்லிம் 100 வீதம் வாக்­க­ளித்த அரசில் முஸ்லிம் கட்­சிகள் ஏகோ­பித்து ஒத்­து­ழைத்த அரசில் 7 முஸ்லிம் எம்.பி.க்கள் குறை­வ­தென்­பதும், அது­கேட்டு முஸ்லிம் சமூகம் பாரா­மு­க­மாக இருப்­பதும் எப்­படி-? தற்­போது இந்த தொகுதி நிர்­ணயம் கைவி­டப்­பட்டு விட்­டதா? முஸ்­லிம்கள் இலங்­கையில் செறிந்து வாழும் அம்­பாறை மாவட்­டத்தில் பொத்­துவில், சம்­மாந்­துறை, கல்­முனை ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து சில பகு­தி­களைப் பிரித்­தெ­டுத்து மூன்று சிங்­களத் தொகு­தி­களை உரு­வாக்கப் பார்த்­தார்­களே? அப்­போது உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக பைசர் முஸ்­தபா எனும் முஸ்­லிம்­தானே இருந்தார். சமூக நோக்­கோடு அவர் இம்­மு­யற்­சியை ஆட்­சே­பித்­தி­ருக்­க­லாமே? பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் இதைச்­சுட்­டிக்­காட்­டா­தி­ருந்தால் இந்த விடயம் வெளி­வந்­தி­ருக்­காது அல்­லவா?

இலங்­கையில் சிங்­கள மக்­க­ளுக்கு 18 மாவட்­டங்­களும், தமி­ழர்­க­ளுக்கு 7 மாவட்­டங்­களும் இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­டமும் இல்லை. பைசர் முஸ்­த­பாவால் சமூகம் சார்ந்து இதை­யா­வது வழங்க முடிந்­ததா? ஆக அந்த கரை­யோர மாவட்டம் அமைய வேண்­டிய அதே பகு­தியைத் துண்­டாக்கி முஸ்லிம் மாவட்டக் கோரிக்­கையை இல்­லா­ம­லாக்­கவே அதே இடத்தில் மூன்று சிங்­களத் தொகு­தி­களை உரு­வாக்க முயன்­றி­ருக்­கி­றார்கள் என்­றா­கி­றதே.

சிறு­பான்­மைகள் அதி­க­மாக வாழும் அம்­பாறை மாவட்­டத்தின் மாவட்டச் செய­லா­ள­ராக ஒரு சிறு­பான்மை இனத்­தவர் இல்லை. அங்கு தமிழ் பேசுவோர் அதி­க­மாக வாழ்­கி­றார்கள். எனினும் செயற்­பா­டுகள் சிங்­கள மொழி­யி­லேயே இடம்­பெ­று­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள 20 முஸ்லிம் எம்.பி.க்களும் இனி­யேனும் இவ்­வி­ட­யங்­களில் கூடிய அக்­கறை காட்­டி­யாக வேண்டும்.

சோல்­பரி யாப்பே இந்­நாட்டில் சமூக ரீதி­யான பிர­தி­நி­தித்­து­வத்தை ஒழித்து தொகுதி முறை­யி­லான பிர­தி­நி­தித்­து­வத்­தோடு விசேட பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கும் வழி செய்­தது. அதன்­ப­டிதான் அது முஸ்லிம் சிறு­பான்­மை­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கும் வழி­வ­கை­களைச் செய்­தி­ருந்­தது. இன்றேல் முழு நாட்­டிலும் சித­றி­வாழும் முஸ்­லிம்­களின் நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வங்கள் அடி­யோடு குறைந்­தி­ருக்கும். அத்­த­கைய நியா­ய­மான ஏற்­பாட்டை இப்­போதும் மேற்­கொள்ள வேண்டும். காரணம் முஸ்­லிம்கள் நாடெங்கும் சிங்­க­ளவர் மத்­தி­யிலும் தமிழர் மத்­தி­யிலும் கலந்து சிறு­சிறு தொகை­யி­ன­ராக வாழ்­வ­தே­யாகும்.

இத­னால்தான் சோல்­பரி யாப்பில் சில தொகு­தி­க­ளுக்குப் பல பிர­தி­நி­தித்­துவ (Multi Members) முறை கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.

  1. கொழும்பு மத்­திய தொகுதி –

3 எம்.பி.க்கள்

  1. பேரு­வளை – 2 எம்.பி.க்கள்
  2. மட்­டக்­க­ளப்பு – 2 எம்.பி.க்கள்
  3. மூதூர் – 2 எம்.பி.க்கள்
  4. அக்­கு­றணை – 2 எம்.பி.க்கள்

தற்­போது ஹரிஸ்­பத்­துவ என அழைக்­கப்­படும் தொகு­தியே முன்பு அக்­கு­றணை என அழைக்­கப்­பட்­டி­ருந்­தது.

1972 ஆம் ஆண்டின் குடி­ய­ரசு யாப்­பி­லும்­கூட இந்த முறை நடை­மு­றையில் இருக்­கவே செய்­தது. 1978 ஆம் ஆண்­டுக்குப் பின் விகி­தா­சாரத் தேர்­த­லுக்குப் பின்பே தொகு­தி­முறை இல்­லா­ம­லாக்­கப்­பட்­டதால் பல அங்­கத்­துவத் தொகு­தி­களும் இல்­லா­மற்­போ­யின.

அக்குரணையில் முஸ்­லிம்­களின் தொகை குறைவு என்­ப­தற்­கா­கவே அது இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யாக ஆக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்­பிலும் முஸ்­லிம்கள் குறைவு அத­னால்தான் அதுவும் இரட்டை எம்.பி.க்கள் உள்ள தொகு­தி­யாக ஆக்­கப்­பட்­டது. மூதூர் தொகு­தியும் இதே கார­ணத்­துக்­காக இரட்டை எம்.பி.க்களுக்­கான தொகு­தி­யாக ஆக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்­கா­கவே புத்­தளம் தொகு­தியும் கல்­முனைத் தொகு­தியும் உரு­வாக்­கப்­பட்­டன.

முன்பு பொத்­துவில் எனும் தொகு­தியும் நிந்­தவூர் எனும் தொகு­தியும் வெவ்­வே­றாக இருந்­தன. பின்னர் இரண்­டையும் இணைத்தே இரட்டை எம்.பி.க்களுக்­கான தொகு­தி­யாக பொத்­துவில் எல்லை உரு­வாக்­கப்­பட்­டது. சம்­மாந்­து­றையும் இத­னோடு இணைக்­கப்­பட்­டி­ருந்­தது. தமிழ் மக்கள் தொகுதி நிர்­ணயக் கமி­ஷ­னுக்குச் சமர்ப்­பித்த மக­ஜர்­க­ளையும் வாக்­கு­மூ­லங்­க­ளையும் சீர்­தூக்­கிப்­பார்த்தே தமி­ழ­ருக்கும் அங்கு எம்.பி. கிடைக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. ஆக, 1972 ஆம் ஆண்டின் குடி­ய­ரசு யாப்­பிலும் கூட சோல்­ப­ரி­யாப்பின் இந்த தொகுதி அமைப்பு முறை அப்­ப­டியே இருந்­தது. அத­னால்தான் 1977 ஆம் ஆண்டு பொத்­துவில் தொகு­தியில் ஒரு தமிழ் எம்.பி. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஆக முஸ்­லிம்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கு­வ­தெனில் விஷேட ஏற்­பா­டுகள் செய்தே ஆக­வேண்டும். காரணம் முஸ்­லிம்கள் நாடு­மு­ழுக்க சித­ற­லாக வாழ்­வதால் எந்­த­வொரு தொகு­தி­யிலும் தனித்து நின்று எம்.பி.யாக ஆவ­தென்­பது முஸ்­லிம்­க­ளுக்கு சற்று சிரமம் என்­ப­தி­னா­லே­யாகும்.

உண்­மையில் தனித்­துவத் தலைவர் அஷ்­ர­பிடம் இருந்த விழிப்­பு­ணர்வு இப்­போது எல்­லோ­ரி­டமும் இல்­லா­ம­லேயே போயி­ருக்­கி­றது. விகி­தா­சாரத் தேர்தல் முறை­யி­லி­ருந்த 12% வீத வெட்டுப் புள்­ளியை பிரே­ம­தா­ச­விடம் கூறி 5% வீத­மாகக் குறைக்­கச்­செய்து அவர் சிறு­பான்­மை­களின் தனித்­துவப் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு வகை செய்­தி­ருந்தார் அல்­லவா? இதன் மூலமே பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் குர­லாக பெருந்­தே­சியக் கட்­சிகள் ஒலிப்­பதை அவர் தடுத்து விட்டார். அவ­ரது இறப்­புக்­குப்பின் இப்­போது பெருந்­தே­சியக் கட்­சிகள் அவ­ரது வழி­வா­று­களை முக­வர்­க­ளாக்­கித்­த­மது குரல்­க­ளையே பேச­வைக்­கின்­றன. இதைத்­தற்­கா­லிக முன்­னெ­டுப்­பாக்­கிக்­கொண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை அடி­யோடு குறைக்கும் செயற்­பாட்­டையே முழு­மை­யான திட்­ட­மாக்­கி­யி­ருக்­கின்­றது.

பெறு­ம­தி­யான வசதி, வாய்ப்­பு­களை வழங்­கு­வதன் மூலமும் மதிப்­புள்ள அமைச்­சுக்­களைக் கொடுப்­பதன் மூலமும் முஸ்லிம் சமூ­கத்தை கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கலாம் எனும் உண்மை பெரும் தேசியக் கட்­சி­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். இவ்­வி­ட­யத்தில் கடந்­த­கால அனு­பவம் அவற்­றுக்கு நிறை­யவே உண்டு.

  1. 1948 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கைக்கு டொமி­னியன் சுதந்­திரம் வழங்­கு­கையில் முஸ்­லிம்கள் எந்த நிபந்­த­னையும் விதிக்­காமல் சிங்­களத் தலை­வர்­க­ளையே சார்ந்து நின்­றமை.
  2. அரச மொழி சிங்­களம் மட்டும் எனும் சட்டம் கொண்டு வரப்­பட்ட போது முஸ்­லிம்கள் தாய்­மொழி தமி­ழா­ன­போதும் அதை ஆத­ரித்து வாக்­க­ளித்­தமை.
  3. அரசு பக்­கமே சார்ந்து நின்று தனியார் பாட­சாலைத் தமக்குக் கிடைத்த கல்­வி­அ­மைச்சு மூலம் சுவீ­க­ரித்­தமை
  4. தமக்கு கிடைத்த கல்­வி­அ­மைச்சு மூலம் தரப்­ப­டுத்தல் முறையைக் கொண்டு வந்து சிறு­பான்­மை­களின் கல்வி வளர்ச்­சியை முடக்­கி­யமை.
  5. 1972 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட பௌத்த சாசன முன்­னு­ரிமை யாப்பில் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை நீக்­கி­ய­போது எதிர்க்­காமை.

தற்­போது முஸ்­லிம்கள் அனு­ப­வித்­து­வரும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் காதிகோட், வக்புசபை, விவாக விவா­க­ரத்து சொத்­து­ரிமை யாவும் அதில் அடங்கும். அவற்றில் கைவைத்தால் முஸ்லிம் சமூகம் எதிர்க்கும் என்­ப­தா­லேயே அவை விட்டு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. மீண்டும் அது போன்ற ஒரு ஷரத்தை கொண்டு வந்­தா­லன்றி அவற்­றுக்கு எதிர்­கா­லத்தில் எத்­த­கைய உத்­த­ர­வா­தமும் இருக்­காது.

மேலே­ழுந்த வாரி­யாகப் பார்த்தால் அவற்றின் மூலம் முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மைகள் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது போல் தெரியும். அவை சலு­கை­க­ளா­கவே விட்­டு­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. விரும்­பினால் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையால் அவற்றை இரத்­தாக்­கவும் முடியும். காரணம் சோல்­ப­ரியின் 29 ஆம் சிறு­பான்மைக் காப்­பீட்டு ஷரத்தைப் போல் தற்­போ­தைய யாப்பில் இல்லை.

சிறு­பான்மைக் காப்­பீட்டு ஷரத்தை மட்­டு­மல்ல அதைக் காப்­பீடு செய்­யவும் கூட தனி­யாக வேறொரு ஷரத்தை கொண்­டு­வந்­தாக வேண்டும். ஏனெனில் சோல்­பரி யாப்பில் 29 ஆம் ஷரத்­துக்கும் காப்­பீடு இல்­லா­ம­லி­ருந்­தது. முன்பு யாப்பு மாற்­றப்­பட்­டதன் மூலமே அது நீக்­கப்­பட்­ட­தல்­லவா? புதிய யாப்பில் சிறு­பான்மைக் காப்­பீட்டை இடம் பெறச்­செய்­வ­தோடு எதிர்­கா­லத்தில் எந்த யாப்பு இயற்­று­கை­யிலும் இது இடம் பெறா­விட்டால் செல்­லாது எனும் ஷரத்தும் இடம்­பெறச் செய்ய வேண்டும். இதற்­கான பொருட்­கோடல் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டமே தங்­கி­யி­ருக்க வேண்டும். ஏனெனில் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்புத் தீர்வும் சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்க முடி­யாது.

ஒரு கோட்டை சிறி­ய­தாக்­கு­வ­தாயின் அதற்குப் பக்­கத்தில் பெரி­ய­கோட்டை வரைந்தால் முன்­பி­ருந்த கோடு சிறி­ய­தா­கி­விடும். பேரினக் குடி­யேற்­ற­வா­திகள் சிறு­பான்­மைகள் திர­ளாக வாழும் பகு­தி­களில் இதைக்­கை­யா­ளலாம் அந்த வகையில் சிறு­பான்­மை­யி­னரை அந்த அந்தப் பகு­தி­களில் மேலும் சிறு­பான்­மை­யி­ன­ராக்கித் தமது ஆளு­மைக்­குட்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். பேரி­ன­வா­திகள் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை மேலும் அதி­க­ரித்­துக்­கொள்­ளலாம். எம். பிக்­களின் தொகையில் மேலும் இரு­பதைக் கூட்டப் போகி­றார்கள். எல்லை நிர்­ணயம், அகழ்­வா­ராய்ச்சி, புரா­தன இடம், என்­றெல்லாம் கூறிக்­கொண்டு, கண்ட இட­மெல்லாம் சிலை­களை நிறு­விக்­கொண்டு, ஊர்­களின் பெய­ரையும் கிரா­மங்­களின் பெயர்­க­ளையும் மாற்­றிக்­கொண்டு, பெரும்­பான்­மை­யினர் நிஜ பூமி, பூமி புத்­தி­ரர்கள் எனவும் முழு­நாட்டு சுய நிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் உரிமை கோரிக்­கொண்டால் என்ன செய்­வது? முஸ்­லிம்கள் தமது இருப்­பையும் வாழ்­வா­தா­ரங்­க­ளையும் பாது­காப்­பையும், மார்க்க விழு­மி­யத்­தையும் பேணு­வ­தற்குக் கருத்து முரண்­பா­டு­க­ளையும் தனித்­தனி நிகழ்ச்­சி­நி­ரல்­க­ளையும் கைவிட்­டு­விட்டு சமூ­க­ரீ­தியில் ஒன்­றி­ணைய வேண்டும். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இட­ரேதும் விளைந்தால் சமூக உறை­வி­ட­மாக ஒரு பிர­தேசம் இருந்தே ஆக­வேண்டும். இது தனி நாடோ பிரி­வி­னையோ அல்ல. இது பேரி­னங்­க­ளுக்கும் மத்­தியில் இலங்­கைவாழ் முஸ்லிம் சமூகம் தனது பாது­காப்­பான இருப்­பையும், வாழ்­வா­தா­ரத்­தையும், வர­லாற்­றையும் சுய­நிர்­ண­யத்­தை­யும், கூட்டு இறை­மை­யையும் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கா­க­வே­யாகும். பின்­வரும் விட­யங்­களைச் சற்று அவ­தா­னி­யுங்கள்.

  1. எல்லை நிர்­ணயம் மூலம் சிறு­பான்­மைகள் திர­ளாக வாழும் பிர­தே­சங்கள் பிரிக்­கப்­பட்டு பெரும்­பான்மை வாழும் பகு­தி­க­ளோடு இணைக்­கப்­ப­டு­கின்­றன.
  2. புரா­தன அகழ்­வா­ராய்ச்சி மூலம் சிறு­பான்­மைகள் வாழும் பகு­திகள் உரித்­தாக்கப் படு­கின்­றன.
  3. சிலை வைப்­புக்கள் மூலமும் சிறு­பான்­மைகள் வாழும் பகு­திகள் அப­க­ரிக்கப் படு­கின்­றன.
  4. தெருப்­பெ­யர்­களும் ஊர்ப்­பெ­யர்­களும் நகரப் பெயர்­களும் மாற்­றப்­ப­டு­கின்­றன.
  5. முடிக்­கு­ரிய அரச காணி­களில் சிறு­பான்­மை­க­ளுக்கு உரிய விகி­தா­சாரப் பகிர்வு இல்லை.
  6. கிராம எழுச்சி மற்றும் வீட­மைப்புத் திட்­டங்­களில் விகி­தா­சாரப் பங்­கீடு இல்லை.
  7. கிழக்கைத் தவிர ஏனைய மாகா­ணங்­களில் ஏனைய சமூ­கங்­களின் மத்­தியில் சிறு சிறு தொகை­யி­ன­ராக முஸ்­லிம்கள் சிதறி வாழு­கி­றார்கள்.
  8. முஸ்­லிம்கள் வாழ்­வா­தாரத் தேவை­க­ளுக்­காகக் கடந்து செல்ல வேண்­டி­யுள்­ள­தோடு சுய­பா­து­காப்­பையும் உறு­தி­செய்ய வேண்­டி­யுள்­ளது. எல்­லாத்­தே­வை­க­ளுக்கும் பிற­ச­மூ­கங்­களைச் சார்ந்தே நிற்­க­வேண்­டி­யு­முள்­ளது.
  9. பாது­காப்புத் துறையில் 100 வீதம் பெரும்­பான்­மை­யி­னரே இருப்­பதால் விகி­தா­சாரப் பகிர்வு இல்­லா­தி­ருக்­கி­றது.
  10. யாப்பு பேரின வடிவில் இருப்பதோடு பெரும்பான்மையினரிடம் பூமி புத்திரக் கொள்கையும் காணப்படுகிறது.
  11. திட்டமிட்ட பெரும்பான்மைச் சமூகக் குடியேற்றங்களால் சிறுபான்மைகள் மேலும் சிறுபான்மைகளாகி விடுகிறார்கள்.
  12. அரச ஊழியர்களும், அரச அதிகாரிகளும், உள்ளூராட்சி நிருவாகங்களில் பெரும்பான்மைச் சமூகத்தினராகவே அமைவதால் நாடு முழுக்க பேரின ஆதிக்கம் வலுக்க வழியேற்படுகிறது.

எனவே, கிழக்கில் இலங்கை முஸ்லிம்களின் உறைவிடமாக முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற முறையில் தனித்துவத் தலைவர் அஷ்ரப் கோரிய முஸ்லிம் அதிகார அலகைப் பெறாவிட்டால் நாளடைவில் முஸ்லிம்கள் சீரணிக்கப்படுவார்கள்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.