கண்டி,திக்கான இன வமுறைகள்: நஷ்டஈடு வழங்கும் பணிகள் துரிதம்

பிரதமர் இன்று அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பார்

0 538

கடந்த வருடம் கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்கும் பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­களில் இது­வ­ரை­காலம் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள 174 சொத்­துக்­க­ளுக்கு 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபாய் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்­காக அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக புனர்­வாழ்வு அதி­கார சபைக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராகச் செயற்­படும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இது தொடர்பில் புனர்­வாழ்வு அதி­கார சபையின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதூர்தீன் கருத்து தெரி­விக்­கையில், கடந்த வருடம் கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிப்­புக்­குள்­ளான 546 சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு புனர்­வாழ்வு அதி­கார சபை தேவை­யான நட­வ­டிக்­கை­களைப் பூர்த்தி செய்­தி­ருந்­தது. இவற்றில் 372 சொத்­துக்­க­ளுக்கு ஏற்­க­னவே நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்டு விட்­டது. அவ்­வாறு வழங்­கப்­பட்­டுள்ள நஷ்ட ஈட்டின் பெறு­மதி 19 கோடி 48 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா­வாகும்.

தற்­போது 174 சொத்­துக்­க­ளுக்கே நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்­காக 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றதும் உட­ன­டி­யாக நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும். இதில் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களும் அடங்­கி­யுள்­ளன.

நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொள்ள விண்­ணப்­பித்த விண்­ணப்­ப­தா­ரி­களில் 16 விண்­ணப்­பங்கள் நிலு­வை­யி­லுள்­ளன. அந்தச் சொத்­துக்­களின் நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்­ய­மு­டி­யாது என மதிப்­பீட்டுத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட பொருட்­க­ளுக்­கான ஆவ­ணங்கள் இன்­மையே இதற்­குக்­கா­ர­ண­மாகும். அதனால் இதற்­கென குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்­யப்­ப­ட­வுள்­ளது. அக்­கு­ழுவின் மதிப்­பீ­டு­க­ளுக்கு அமைய அந்த சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு நிர்­ண­யிக்­கப்­படும் என்றார்.

இதே­வேளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கண்டி மற்றும் திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வதைத் துரி­தப்­ப­டுத்தும்படி விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கோரி­யுள்ளார்.

‘நஷ்­ட­ஈடு வழங்கும் நட­வ­டிக்கை தேக்கம்’ என்ற பிர­தான தலைப்பில் ‘விடி­வெள்ளி’ செய்தி வெளி­யிட்­டதைத் தொடர்ந்து அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதி­யுதீன் ஆகியோர் புனர்­வாழ்வு அதி­கார சபையைத் தொடர்பு கொண்டு அது தொடர்­பான விப­ரங்­களைக் கோரியிருந்தமையும், இதனை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னைய அரசாங்கத்தில் புனர்வாழ்வு அதிகார சபைக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த டி.எம்.சுவாமிநாதன் தனது பதவிக்காலத்தில் நஷ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயார்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.