அழிவின் விளிம்பில் ஐ.எஸ், ஷமிமா பேகம் கூறுவது என்ன?

0 920

கடந்த சில நாட்­க­ளாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பற்­றிய பல்­வேறு தக­வல்கள் வெளியா­கிய வண்­ண­முள்­ளன. இத்­த­ரு­ணத்தில் ஐ.எஸ். அமைப்பு வீழ்த்­தப்­பட்டு விட்­டதா என்ற சந்­தேகம் சர்­வ­தேச அளவில் வியா­பித்­துள்­ளது. சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்து சிரியா சென்று அங்கு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்ட ஷமிமா பேகம் எனும் பெண், மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்புவதாக அறிவித்துள்ளமையும் ஐ.எஸ். அமைப்பின் பிடியிலிருந்து பெரும்பாலான நிலங்கள் எதிரணியிடம் வீழ்ந்துள்ளமையுமே அவ்வமைப்பின் வீழ்ச்சி தொடர்பான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.

ஷமிமா பேகத்தின் கதை

2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் பிரித்­தா­னி­யாவில் இருந்து ஷமிமா பேகம் என்ற 15 வயது சிறுமி ஐ.எஸ். அமைப்பில் இணையும் வேட்­கையில் தனது இரு நண்­பி­க­ளுடன் சிரி­யா­வுக்கு சென்றார். தற்­போது அவர் மீண்டும் பிரித்­தா­னி­யா­வுக்கு வரு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்ள நிலையில் அதற்கு பிரித்­தா­னி­யாவில் கடும் எதிர்ப்பு நில­வு­கி­றது.

சிரி­யா­விலும் ஈராக்­கிலும் பெரு­ம­ள­வான பிர­தே­சங்­களை ஐ.எஸ். கைப்­பற்­றி­யி­ருந்­தது. அதனை தொடர்ந்து அதன் மூலம் கவ­ரப்­பட்ட ஷாமிமா பேகம் ஐ.எஸ். அமைப்பில் இணை­வ­தற்­காக சென்றார். தற்­போது சர்­வ­தேச மட்­டத்தில் ஷமிமா பேகம் பேசப்­படும் ஒரு­வ­ராக மாறி­விட்டார். எல்லா செய்தித் தளங்­க­ளிலும் ஷாமிமா பேகம் பிர­தான செய்­தி­யாக விளங்­கு­கிறார். பிரித்­தா­னி­யாவில் அவர் மீண்டும் நுழை­வ­தற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் பாரிய விவா­தங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. தற்­போது 19 வய­தா­க­வுள்ள ஷமிமா பேகம் ஐ.எஸ். அமைப்­பி­னரால் துன்­பு­றுத்­தப்­பட்­டாரா என்ற கேள்­விக்கு விடை தேட வேண்­டி­யுள்­ளது.

தனது 2 நண்­பி­க­ளுடன் ஷமிமா பேகம் சிரி­யா­வுக்கு சென்ற வேளையில் திரு­ம­ண­மா­காத பெண்கள் தங்க வைக்­கப்­படும் இடத்தில் அவர்கள் தங்க வைக்­கப்­பட்­டார்கள். பின்னர் பேகத்தை விடவும், 12 வயது மூத்­த­வ­ரான நெதர்­லாந்து நாட்டு போரா­ளி­யொ­ருவர் அவரைத் திரு­மணம் செய்தார்.

ஷமிமா பேகத்­திற்கு இரண்டு குழந்­தைகள் பிறந்­த­போதும் இரு­வரும் மர­ணித்து விட்­டனர். இந்­நி­லையில் ஐ.எஸ்.அமைப்பில் இருந்து இட்­லிப்­பி­லுள்ள அல்ஹௌல் முகா­முக்கு தப்பி வந்த வேளையில் இரு வாரங்களுக்கு முன்னர் அவ­ருக்கு மூன்­றா­வது குழந்­தையும் பிறந்­துள்­ளது.

பிரித்­தா­னிய அர­சாங்கம் தன் மீதும் தன்­னு­டைய குழந்­தையின் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என ஷமிமா கோரிக்கை விடுத்­துள்ளார். பிரித்­தா­னிய அர­சாங்கம் தன்னை நாட்­டினுள் அனு­ம­திக்க வேண்டும் என ஸ்கை நியூஸிற்கு அவர் வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார்.

”எனக்­கா­கவும் எனது குழந்­தைக்­கா­கவும் அவர்கள் என்னை நாட்­டுக்குள் அனு­ம­திப்­பார்கள் என நம்­பு­கிறேன். ஏனென்றால் என்னால் தொடர்ந்து இந்த முகாமில் வாழ முடி­யாது. அது உண்­மையில் சாத்­தி­யமே இல்லை” என ஷமிமா பேகம் தெரி­வித்தார்.

தான் ஐ.எஸ். அமைப்பின் செயற்­பாட்டு உறுப்­பி­ன­ரல்ல என வாதிடும் அவர், நான் ஆபத்தை விளை­விக்கும் எந்தக் காரி­யத்­திலும் ஈடு­ப­ட­வில்லை. நான் சிரி­யா­வுக்கு சென்ற போது வெறு­மனே இல்­லத்­த­ர­சியாகவே இருந்தான். முழு­மை­யாக கடந்த நான்கு வரு­டங்­களும் வீட்­டி­லேயே காலத்தைக் கழித்தேன். எனது கண­வ­ரையும் பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரித்து வந்தேன். நான் வேறு எதை­யுமே செய்­ய­வில்லை. பிர­சா­ரங்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. ஏனை­யோரை சிரி­யா­வுக்கு வரு­மாறு அழைக்­கவும் இல்லை எனவும் ஷமிமா பேகம் தெரி­வித்தார்.

ஐ.எஸ் அமைப்­புக்கு சென்­ற­வர்கள் நாட்­டுக்கு துரோகம் இழைத்­த­வர்கள் என்றும் அவர்­களை திரும்ப நாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­யாது என்றும் பிரித்­தா­னியா தரப்­பி­லி­ருந்து தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக டைம்ஸ் ஊட­கத்­திற்கு கருத்து தெரி­வித்த உள்­நாட்டு செய­லாளர் சாஜித் ஜாவித், பிரித்­தா­னி­யாவில் இருந்து ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து கொள்­வ­தற்­காக வெளி­யேறிச் சென்­ற­வர்கள் எமது நாட்­டினை முழு­மை­யாக வெறுத்­த­வர்கள் என்­பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரி­வித்தார். இதனைத் தொடர்ந்து ஷமி­மா­வு­டைய குடி­யு­ரி­மையை பறிப்­ப­தற்கு பிரிட்டன் நட­வ­டிக்­கை­களை மேற் கொண்­டுள்­ளது.

இதற்கிடையில் பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் சாஜித் ஜாவிதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷமிமா பேகத்தின் குடும்பத்தினர், ‘அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது’ என்றும், அவரது குடியுரிமை குறித்து ‘பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஷமிமா பேகத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த தகவல்கள் தங்களை “மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியுள்ளதாக” அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஷமிமா பேகத்திற்கு பிறந்துள்ள குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்து வருவதற்கு உதவ வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.எஸ். வீழ்ந்துவிட்டதா?

ஷமிமா பேக­மு­டைய பர­ப­ரப்­பான செய்தி மற்றும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் டுவிட்டர் பதி­வுகள் என்­பன ஐ.எஸ் அமைப்பு வீழ்த்­தப்­பட்­டதா என்­பது தொடர்பில் சிந்­திக்கத் தூண்­டு­கி­றது.

சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சிறிய பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் சுமார் 600 பேர் சண்டையிட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனினும் அதில் தற்போது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பலம் உச்சத்தில் இருந்த 2014 காலகட்டத்தில், ஐ.எஸ் கட்டுப்பட்டுப் பிராந்தியத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 77 இலட்சம் மக்கள் வசித்து வந்தனர். அப் பிராந்தியத்தின் பரப்பளவு பிரிட்டனின் பரப்பளவுக்கு நிகரானதாக இருந்தது.

ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவிய போர் நிறுத்தம் காரணமாக, சுமார் 20,000 குடிமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியபின், ‘ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான இறுதித் தாக்குதல்’ தொடங்கும் என சிரியா ஜனநாயகப் படைகள் எனப்படும் கூட்டணிப் படைகளின் செய்தித்தொடர்பாளர் முஸ்தஃபா பாலி கூறியிருந்தார்.

ஐ.எஸ் அமைப்பினர் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும், சிரியாவிலுள்ள 2,000 அமெரிக்கப் படையினரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

இறு­தி­யாக ஐ.எஸ் அமைப்­புக்கு எதி­ராக நடை­பெற்ற போரில் 800 க்கும் அதி­க­மான ஐ.எஸ் அங்கத்தவர்கள் பிடி­பட்­டனர். இவர்­களை பிரிட்டன் மற்றும்  ஐரோப்­பிய கூட்­டணி நாடுகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

சிரி­யாவில் கடைசிக் கோட்­டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவி­ர­வா­தி­களின் கள நில­வரம் குறித்து ஊர்­ஜி­த­மான தக­வல்கள் எதுவும் வெளி­யா­க­வில்லை.

ஐ.எஸ் அமைப்பு ஒடுக்கப்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது மீண்டும் தம்மை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஐ.எஸ் தரப்பினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் கூட ஈராக் மற்றும் சிரிய நாடுகளில் 14000 முதல் 18000 போராளிகளை ஐ.எஸ் அமைப்பு கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவர்களில் 3,000 பேர் வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஐ.எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா, மேற்கு ஆபிரிக்க நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளனர்.

சோமாலியா, யெமன், சினாய் தீபகற்பம் மற்றும் ஆபிரிக்காவிலுள்ள சாஹெல் பகுதி ஆகிய இடங்களிலும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், அதன் கொள்கைகளால் உந்தப்பட்டவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.