சூடானில் மத்திய அரசாங்கம் கலைப்பு

0 561

மோச­மான வாழ்க்கை நிலைக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் சூடான் ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் சர்ச்­சைக்­கு­ரிய அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை பிற்­போ­டு­மாறு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தோடு மத்­திய அர­சாங்­கத்­தி­னையும் கலைத்து ஒரு வருட காலத்­திற்கு அவ­ச­ர­கால நிலை­யையும் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொலைக்­காட்சி மூலம் ஒளி­ப­ரப்­பப்­பட்ட அவ­ரது உரையில் 2020 ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் மீண்­டு­மொரு பத­விக்­கா­லத்­திற்­காகப் போட்­டி­யி­டு­வ­தற்கு அவரை அனு­ம­திக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை பிற்­போ­டு­மாறு பாரா­ளு­மன்­றத்தைக் கோரினார்.

ஒமர் அல்-­பஷீர் காபந்து நிரு­வா­கத்தை அமைத்­துள்­ள­தோடு, இரா­ணுவ அதி­கா­ரி­களை புதிய மாநில ஆளு­நர்­க­ளா­கவும் நிய­மித்­துள்ளார்.

30 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து முதன்­மு­றை­யாக பாரிய மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை ஒமர் அல்-­பஷீர் சந்­தித்து வரு­கிறார்.

சூடான் ஜனா­தி­பதி 2020 இல் மீண்டும் பத­விக்கு வரு­வ­தற்­காக தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டார் எனவும், நாடு­மு­ழு­வதும் இடம்­பெற்று வரும் ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக அவர் பதவி வில­குவார் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சூடா­னிய பாது­காப்பு மற்றும் புல­னாய்வுப் பணிப்­பாளர் சலாஹ் அப்­துல்லாஹ் தெரி­வித்­தி­ருந்தார்.

அனைத்துக் கட்­சி­க­ளையும் பேச்­சு­வார்த்தை மேசைக்கு அழைக்கும் எனது கோரிக்­கை­யினை நான் நிறுத்­திக்­கொள்ளப் போவ­தில்லை எனவும் 75 வய­தான ஒமர் அல்-­பஷீர் தெரி­வித்தார்.

சுமார் மூன்று தசாப்த கால­மாக பத­வி­யி­லி­ருக்கும் பஷீர் பதவி வில­க­வேண்டும் எனக் கோரி கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஷீரின் அறிவித்தல் வெளியாகியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.