மாரவிலவில் பாரிய விபத்து

சக்திவாய்ந்த மின் மாற்றியுடன் பஸ் மோதியதில் மூவர் பலி; 19 பேர் காயம்; சாரதி கைது

0 510

சிலாபம், மார­வில – மஹ­வெவ பகு­தியில் நேற்று அதி­காலை  தனியார் பய­ணிகள் பஸ் வண்­டி­யொன்று வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து சக்­தி­வாய்ந்த மின் மாற்­றி­யொன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். மேலும் 16 ஆண்கள், மூன்று பெண்கள் உள்­ள­டங்­க­லாக  19 பேர் படு­கா­ய­ம­டைந்து மார­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்ட பின்னர், சிலாபம், கொழும்பு, ராகம மற்றும் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு  மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் விபத்­தின்­போது காய­ம­டைந்து மார­வில வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த பஸ்ஸின் சார­தி­யான அனு­ரா­த­பு­ரத்தைச் சேர்ந்த 33 வய­தான சுஜீவ குமார தென்­ன­கோனை மார­வில பொலிஸார் நேற்று பிற்­பகல் கைது செய்­தனர்.

வவு­னி­யா­வி­லி­ருந்து கொழும்பு நோக்கிப் பய­ணித்த தனியார் பஸ் வண்டி நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ளவில் மார­வில – மஹ­வத்த பகு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது. மிக வேக­மாகப் பய­ணித்­துள்ள குறித்த பஸ் வண்டி, மஹ­வத்த சந்­திக்கு அருகில் பாதையை விட்டு விலகி, அரு­கி­லி­ருந்த சக்­தி­வாய்ந்த  மின் மாற்­றி­யுடன்  மோதி­யதில் இந்த விபத்து இடம்­பெற்­றது.  லொறி­யொன்­றினை முந்திச் செல்ல முற்­பட்­ட­போது சார­தியால் பஸ்ஸை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

விபத்­தின்­போது, குறித்த பஸ் வண்­டியின் மீது மின் மாற்றி அமைக்­கப்பட்­டி­ருந்த கம்பம் முறிந்து விழுந்­தி­ருந்­ததால் பஸ் வண்­டியில் இருந்­தோரை மீட்க கடும் பிர­யத்­தனம் முன்­னெ­டுக்­கப்பட்­டது. பொலி­சாரும் பிர­தேச மக்­களும் இணைந்து முதலில் 19 பேரை மீட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்.

எனினும் பஸ்­ஸுக்குள் சிக்­கி­யி­ருந்த நான்கு பேரை மட்டும் மீட்க 3 மணி நேரம் மீட்புப் பணி­யா­ளர்­க­ளுக்குத் தேவைப்­பட்­டது.  அவர்களில் மூவரும் உயி­ரி­ழந்த நிலையில் சட­ல­மா­கவே மீட்­கப்­பட்­டனர்.

உயி­ரி­ழந்­தவர்கள் மூவரும் ஆண்­க­ளாவர். அவர்­களில் ஒருவர் 60 வய­தான நபர் என்­ப­துடன் அவ­ரது அடை­யாளம் நேற்று மாலை 6.00 மணி வரை உறுதி செய்­யப்பட்­டி­ருக்­க­வில்லை. உயி­ரி­ழந்த ஏனைய இரு­வரில் ஒருவர் 32 வய­தா­னவர் எனவும் அவர் எழு­வன்­குளம் பகு­தியைச் சேர்ந்த நாமல் என அறி­யப்­ப­டு­பவர் எனவும் குறிப்­பிட்ட பொலிஸார், மற்­றை­யவர்  45 வய­தான  ஷிரோன் சஞ்­சய மென்டிஸ் எனும் சூரி­ய­புர பகு­தியைச் சேர்ந்­தவர் என பொலிஸார் கூறினர்.

காய­ம­டைந்த 19 பேரில், புத்­தளம் இரா­ணுவ முகா­மொன்றில் சேவை­யாற்றும், விடு­மு­றையில் வீடு­களை நோக்கிப் பய­ணித்த மூன்று இரா­ணுவ வீரர்­களும் ஒரு கடற்­படை வீரரும் உள்­ள­டங்­கு­வ­தாக வைத்­தி­ய­சாலை தரப்பு தக­வல்கள் தெரி­வித்­தன.

இந் நிலையில் மார­வில பொலிசார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் குறித்த பஸ் வண்­டியில் இரு சார­திகள் இருந்­துள்­ள­மையும் அவர்­களில் ஒருவர் வவு­னி­யாவில் இருந்து புத்­தளம் வரையில் பஸ்ஸை செலுத்­தி­யுள்­ள­மையும், மற்றை­யவர் புத்­த­ளத்தில் இருந்து பஸ்ஸை செலுத்­தி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் இரு­வரும் மிக வேக­மா­கவே பஸ்ஸை செலுத்தியதாக பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.  அதிக வேகம் காரணமாக சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.